ஆமருவி தேவநாதன்
நண்பர் ஆமருவி தேவநாதனின் புத்தகம் “ பழைய கணக்கு “. இந்தச் சிறு கதைத் தொகுப்பில் , இது இரண்டாவது கதையின் பெயர்.
“இன்னிக்கு சாப்பாடு இல்லை. நீ வேற ஆத்துக்குப் போ “ என்று கதையின் முதல் பத்தியில் வருகிறது.
தொடர்ந்து படிக்க முடியவில்லை. காரணம் , பசி..
பசி என்றால் தற்போதைய பசி இல்லை. அவல் உப்புமா, தக்காளி சட்டினி, ஒரு மலைப் பழத்துக்குப் பிறகுதான் ஆமருவியைக் கையிலெடுத்தேன். இந்தப் பசி பழைய பசி. பசி பற்றிய நினைவுகள் .
ஒரிஸ்ஸாவில் தொடங்கி கேரளத்தில் முடிவுற்ற பசி. பசி என்பதை எழுத்தில் மட்டுமே படித்துத் தெரிந்து கொண்டவர்களுக்கு இது வசப்படாது. அது, உடலின் ஒரு பகுதியாக , ஒரு கட்டத்தில் உடலையே உணவாக்கிக் கொள்ளும் உந்துதலாக இருப்பதை எல்லோரும் அனுபவித்திருக்க முடியாது.
சென்னையில் இருந்து புறப்பட்டு ஹெளரா மெயிலில் ஒரிஸ்ஸாவின் தலைநகர் புவனேச்வரத்துக்கு வந்தேன(1980)். அங்கிருந்து நூல்...