முகுந்தா முகுந்தா - கமல் இல்லை



முகுந்தா 2 : வீட்டில் தொலைபேசி ஒலித்தது.முகுந்தா
எடுத்தான். யாரோ ஒருவர் தவறான நம்பரை டயல்
செய்துவிட்டு படபட என்று பேசினார்.`சுந்தரம் பினான்ஸ் தானே.
நீங்கள் எப்படி செக்கை கிராஸ் செய்யாமல் அனுப்பலாம்?
ரிசர்வ் பேங்க் ரேகுலஷன் படி இது தப்பு` என்று இடைவெளி
இல்லாமல் பேசிக் கொண்டே போனார்.

மொத்தத்தையும் கேட்ட முகுந்தா `சார், கொஞ்சம் முன்ன பின்ன
இருந்தா நாம அட்ஜஸ் பண்ணிக்கறது நல்லது.சின்ன விஷயங்களைப்
பெரி
சு பண்ணக் கூடாது` என்கிற ரீதியில் சமாதானம்
செய்தான்.

ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
`நீங்க என்ன சொல்றீங்க , அது சுந்தரம் பினான்ஸ் இல்லையா?`
என்று குரலை உயர்த்தினார். முகுந்தா இதற்காகத்தான்
காத்திருந்தது போல ` சார். இது எங்க வீடு.ஆனா யோசிச்சுப்
பாருங்க.நா சொன்னது வாழ்கையில உங்களுக்குப் பயன்படும்`
என்றான்.அந்தப் பக்கத்தில் இருந்து என்ன சொல்லப்பட்டது
என்று எனக்குத் தெரியாது.முகுந்தாவின் காதில் இருந்து
புகை வந்ததைப் பார்த்தேன்.

0 comments:

Post a Comment