பாலகுமாரன்

நான்   அதிகமாக கதைகள் படித்ததில்லை . தமிழன் எக்ஸ்ப்ரெசில் இருந்தபோது பாலகுமாரனின் `கண்மணித் தாமரையை `படிக்க வேண்டும் என்று ஆசிரியர் சிவா  கூறினார் .புத்தகத்தை எடுத்துக்கொண்டு ரயில்  ஏறி விட்டேன் அப்போது எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள் .அது பற்றிய கருத்தை  கடிதமாக எழுதி அனுப்பினேன் .தபால் போய் சேரவில்லை .அதற்குள் சிவா அவசரப்பட்டு பாலகுமாரனிடம் சொல்லிவிட்டான் .பாலகுமாரன் விசாகப்பட்டினத்திற்குதொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் .அதை மீண்டும் எழுதி அனுப்பச் சொன்னார் .அனுப்பினேன்.பிறகு  தினமணிக்கு மாற்றலாகி விட்டேன்...பல வருடங்களுக்குப் பிறகு நண்பர் உமாமகேஷ் என்னுடைய கடிதத்தோடு வெளிவந்துள்ள `கண்மணித் தாமரையைக் `கொண்டு வந்து கொடுத்தார் .இது உபகதை...

பாரதியாரும் கணேஷ் மெஸ்ஸும்

அன்புள்ள  பத்மா, பிறந்த நாளுக்கு என்று தம்பி வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டேன். இதைத் தவிர தினமணி சக ஊழியர் கொடுத்த சட்டையும்  இருக்கிறது. இந்த ஐம்பூத சட்டைக்குள் நான் குடி புகுந்து 51 வருடங்கள் கடந்து விட்டன. எண் கணிதப்படி இது நல்ல வருடம் என்று நிபுணர் ஒருவர் சொல்கிறார்; பார்ப்போம். அடுத்த முறையும் ஐம்பூதச் சட்டையை அணியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளில் கொஞ்சம் தீவிரம் காட்ட வேண்டும். அதற்கு முன் பசியாற வேண்டும்; இன்றைய பிக்ஷை கணேஷ் மெஸ்ஸில். கணேஷ் மெஸ்ஸுக்குப் போகாமல் ஜென்மம் கடைத்தேறாது என்று தினமணி அலுவலக அன்பர்கள் தினமும் ஓதுகிறார்கள். இந்த இரண்டு மாத காலத்தில் என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி 'கணேஷ் மெஸ்ஸில் சாப்பிடுகிறீர்களா?' என்பதுதான். ‘விட்டுச் சாப்பாடு போல இருக்கும்’ என்று சிபாரிசு செய்தார்கள்....

சிட்டி

 நடந்தாய் வாழி சிட்டி  Chennaionline / subbu (சுப்புவின் வயது அறுபது. அதில் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவின் கடற்கரைகளில் காலாற நடந்திருக்கிறார். கவிதைகள், கட்டுரைகள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பலவிதமாகப் பயணித்துள்ளவர் சுப்பு. மூத்த பத்திரிகையாளரான இவர் எழுதிய 'அருணகிரிநாதர்' என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தைக் காரசாரமாக விமர்சனம் செய்யும் ‘போகப் போகத் தெரியும்' என்ற இவருடைய தொடர், http://www.tamilhindu.com/author/subu/ என்ற இணைய இதழில் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.) ============================================ கே: 94 வருடங்களாக வாழ்ந்திருக்கின்றீர்கள். அதில் 80 வருடங்களாகத் தமிழ் மொழியோடு இலக்கியப் பூர்வமாகத் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை திருப்தியாக...

மறுபடியும் மதுரை

Chennaionline / subbu அக்டோபர் 2001 அன்புள்ள மனைவி பத்மாவுக்கு, காலையில் தியானம் செய்வதற்கு முன் மீனாட்சி படத்துக்கு அருகே தசாங்கம் ஏற்றலாம் என்று ஒரு யோசனை. காதி பவனில் இருந்து வாங்கி வந்த பாக்கெட்டைப் பிரித்தால் தசாங்கம் மாவு வடிவத்தில் இருக்கிறது. இதென்ன மாவிளக்கு மாவா, இதை எப்படி விளக்காக்குவது என்ற குழப்பத்தில் இருந்த போது நாகராஜன் வந்தார். நான் சொல்லாமலே அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டார். 'சரியாகப் பாருங்கள், உள்ளே ஒரு கூம்பு இருக்கும். அதில் பொடியை நிரப்பித் தட்டில் வைக்க வேண்டும்' என்று சொல்லி, குட்டித் தட்டு ஒன்று கொடுத்தார். தினமணி நாளிதழைத் தரையில் விரித்து தசாங்கப் பாக்கெட்டை கிழித்துக் கொட்டுவதற்கு ஆயத்தம் செய்தேன். மீண்டும் நாகராஜன் வந்துவிட்டார்.  என் செயல் திறமையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. தினமணிக்கு...

மதுரையிலிருந்து

Chennaionline / subbu ஆகஸ்டு 2001. அன்புள்ள மனைவி பத்மாவுக்கு, மதுரைக்கு வந்து ஒரு வாரமாகிறது. ஆரம்ப சூரத்தனமாய் ஓட்டலில் தங்கிவிட்டேன். கைப்பணம் கரைந்துவிட்டது. தினமணி அலுவலக நண்பர்களின் உதவியால் நகரத்தின் மத்தியில் உள்ள மேன்ஷனில் இன்று குடியேற்றம். 'குவாரண்டைன்' முடிந்த காலராக்காரனைப் போல உணர்கிறேன். மேன்ஷனில் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இதை நினைத்தபடியே மாடித் தாழ்வாரத்தில் நடந்தால், ஜன்னல் வழியாக மீனாட்சியின் கோபுரம் என்னைப் பார்த்தது. ஆகவே அறை வாசத்தின் முதல் நடவடிக்கை மீனாட்சி கோவில். வரும் வழியில் மீனாட்சி படம் ஒன்றை வாங்கித் துணைக்கு வைத்துக்கொண்டேன்.  உருவப் படங்கள் மீது எனக்கு அதிக அபிமானம் இல்லைதான். இருந்தாலும் யோசித்துப் பார்க்கும்போது எனக்கும் மீனட்சிக்கும் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. மதுரையில் நாங்கள்...

Bronzes and the Babri Masjid

- Haindavakeralam / subbu28/11/2009 02:09:46                                                                              Among the metal sculptures of India, the bronzes from the south are marked as objects of aesthetic excellence. They have stood the test of time to prove their shining superiority. The difference between the south Indian bronzes and the sculptures from the other parts is the difference between...

பாண்டியன் பதில் சொல்வாரா ?

...

சம்ஸ்கிருதம் – சில கேள்விகள்

http://www.tamilhindu.com/2009/07/sanskrit-few-question...

உலகம் சுற்றிய அரவிந்தன்

கல்கி / சுப்பு / 08 ஜனவரி 2012 “ உலகத்திலே முட்டாள்தனங்களுக்குள் எல்லாம் முதல் பாக்கு வெற்றிலை வாங்கக் கூடிய முட்டாள்தனம் ஒன்று உண்டென்றால், அது அவ்வப்போது தமிழ் நாட்டில் சிலரால் நடத்தப்படும் ‘ஆரியர்-தமிழர்’ என்னும் கிளர்ச்சியாகும் “ என்று பேராசிரியர் கல்கி ஒரே போடாய்ப் போட்டார். இதைச் சொல்லி எழுபத்தைந்து வருடங்களாகி விட்டன. ஆரிய-திராவிட இனவாதத்தை முறியடிக்கும் முயற்சிதான் ராஜீவ் மல்ஹோத்ராவும் ,அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய “Breaking India” இதை “உடையும் இந்தியா” வாகக் கொடுத்திருக்கிறார் அரவிந்தன். 763 பக்கங்களுள்ள புத்தகத்தின்  பிற்சேர்க்கை 216 பக்கங்கள் . முதலில் மிரட்டலாகத் தெரிந்தாலும் இதில் எதையும் தவிர்க்க முடியாது என்பது பின்னர் புலப்படுகிறது. தனுஷ் பாணியில் சொல்வதென்றால், ‘      பார்த்தவுடனே பிடிக்காது; பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்’....

திராவிட மாயை - சுப்புவோடு நேர்காணல்

http://www.youtube.com/watch?v=CqFJBYCJt...

பேரா . நாகநந்தி

http://www.youtube.com/watch?v=MqQWlK8ES...

டபுள் ரோல் கனவு

  எனக்கு அடிக்கடி  ஒரு கனவு வரும். கனவில் நான் பிணமாக  இருப்பேன்.அந்தப் பிணத்திற்கு நான் தீ மூட்டிக் கொண்டு இருப்பேன். இப்படி கனவில் டபிள் ரோல் செய்தவன் நானாகத்தான் இருப்பேன். இது விசித்திரமாக இருந்தது. இன்னொரு வகை கனவிலும்  நான் பிணமாக இருப்பேன். அந்தப் பிணத்தை வழக்கம்போல்  டபுள் ரோலில் நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.சில பேர்  அழுவார்கள்.சிலர் எனக்கு நெருக்கமானவர்களாக  காட்டிகொள்வார்கள். நான் அப்போது சிரித்துக் கொள்வேன். சிரிப்போடு விழித்துக் கொள்வேன்.இப்படியெல்லாம் தொடர்ந்த  டபுள் ரோல் பிணக் கனவுகள் ஒரு பெரியவரை சந்தித்தவுடன்  ஸ்டாப் ஆகி விட்டன. இப்போதெல்லாம் நனவில் மட்டும்தான்  டபுள் ரோல்...

அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை

அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை சுப்பு / கல்கி / 3 ஏப்ரல் 2012   சில இலக்கிய விருதுகள் எந்த அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்ற பேச்சு வந்த போது , பிரபல எழுத்தாளர் ரா. கி. ரங்கராஜன் நெத்தியடியாகச் சொன்னார் , “ கதையில் கதை இருக்கக் கூடாது; இருந்தால் நமக்கு இத்தகைய விருதுகள் கிடைக்காது “  என்று.   ஜி. பி. சதுர்புஜனைப் பொருத்தவரை , தோசை என்றால் மாவு இருக்க வேண்டும்; தொட்டுக் கொள்ள சட்னி இருக்க வேண்டும் என்பது செய்முறை. பாதி வழியில் முற்றுப் புள்ளி வைத்து விட்டு , வாசகனைப் பழி வாங்கும் மனோபாவம் அவரிடம் இல்லை. அவருடைய கதைகளில் கதை இருக்கிறது; காதல் இருக்கிறது; கண்ணீர் இருக்கிறது; கவிதைத் தனமான கர்வம் இருக்கிறது; எதிர்பார்ப்பு இருக்கிறது,ஏமாற்றம் ,எக்காளம்  எல்லாமே இருக்கின்றன.   எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்களோ , அத்தனை கதைகள் இருக்கின்றன என்பது படைப்புலகத்தின்...

ஆரியம், திராவிடம் – இலக்கிய ஆதாரங்கள்

சங்கப் பலகை / 26 11 2011 / அனைவருக்கும் வணக்கம் . கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும். கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும்., அல்லது ஆரிய இனமாக இருக்கும். ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன ? திராவிட இனம் என்றல் என்ன? இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும்  பொருள் எது ? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்த அமர்வு. அறிஞர்களும், ஆர்வலர்களும்  நிறைந்துள்ள இந்த அவையில் , இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கிறேன். முதலில் ஆரியம் . நம்முடைய...

ஞாநி

ஞானி விஷயத்தில் ஒரு தப்பு நடந்துவிட்டது. நி போடுவதற்குப் பதிலாக னி போட்டுவிட்டேன். உங்களுக்குத் தெரியுமா? நான் ஞாநியைச் சந்தித்தபோது கேட்ட முதல் கேள்வி.நீங்கள் எந்த னி என்பதுதான். அதிகப் பழக்கம் இல்லை.ஆனால் நல்ல மனிதர் என்று சொல்லுவேன்.பெசன்ட் நகர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.ஒரு பெண் குழந்தை. வளர்ச்சி குன்றிய குழந்தை. யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். காலையில் வந்த குழந்தை மாலை வர ை அந்தப் பந்தலில் விளையாடிக் கொண்டிருந்தது. எனக்கு கும்பாபிஷேகம் ஒட்டவில்லை. கைவசம் ஜூனியர் போஸ்ட் தொலைபேசி எண் இருந்தது. ஞாநியோடு பேசினேன். உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.குழந்தையோடு அண்ணாநகர் உதவும் கரங்களுக்கு போகவும் ` என்றார் ஞாநி. காலையிலிருந்து பரிவோடு குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் ஹரி.தொப்பை குலுங்கக் குலுங்க பந்தலில் குழந்தையோடு ஓடிக்கொண்டிருந்தார்.பிரியும்போ து அவர்...

சிம்ரன்

நேற்று சூர்யா. இன்று சிம்ரன். அனுஷ்கா இல்லையா என்று அடிக்கவரக் கூடாது. நேரடி அனுபவம் மட்டுமே இங்கே எழுதப்படும். பத்து வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஹோடேலில் நானும் நண்பர் காசிநாதனும் சாப்பிடுக்கொண்டிருந்தோம். காசிக்குப் பின்னால் அடடே மேக்கப் இல்லாத சிம்ரன்.அப்படியும் அழகாதான் இருந்தாங்க.காசி கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி என்று நான் நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை. சாப்பிட்டு முடித்து அலுவலகம் போனோம். ஹாலில் உரத்த குரலில் `இன்னைக்கு யாரைப் பார்த்தேன் தெரியுமா?` என்று நான் ஆரம்பித்தேன். `சிம்ரனை` என்று காசி முடித்துவிட்டார்.` எப்படி காசி` என்று நான் தடுமாறினேன்.`சார் உங்களுக்கு பின்னால் ஒரு கண்ணாடி இருந்தது. நீங்க ஜொள்ளு பார்ட்டி என்பதால் நான் சொல்லவில்லை `.என்று காசி முடித்துவிட்டார். சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த திருவாரூர் பாபு இப்போது சினிமா இயக்குனர்.ஏதாவது...

தாராசிங் ஆத்மா சாந்தி அடைய ...

அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய அண்ணன் நாராயணசாமி ஆட்டோக்ராப் புத்தகம் வைத்திருந்தார். அண்ணன் என்றால் பெரியப்பா பையன் என்பதைக் குறித்துக் கொள்ளவும். அண்ணனுடைய ஆடோக்ராபில் மல்யுத்த வீரர்கள் கிங் காங் மற்றும் தாரா சிங் உடைய கையொப்பம் இருப்பதாக அண்ணன் பெருமையடித்துக் கொண்டார். மல்யுத்த வீரர்களின் கையொப்பமும் குண்டு குண்டாக இருக்குமா என்பது என்னுடைய ஐயப்பாடு. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்.அண்ணன் அதை என் கண்ணில் காட்ட வில்லை. ஒரு நாள் அண்ணன் இல்லாதபோது அவருடைய அலமாரியில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் ஏமாற்றம். தாரா சிங் கையொப்பம் ஹிந்தியில் இருந்தது.கிங் காங் ஏதோ ஒரு மொழியில். அளவு என்னவோ சிறியதாகத்தான் இருந்தது. இதைக் காட்டாமல் அலட்டிக் கொண்ட அண்ணனுக்கு நம்முடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமே? மீதி இருந்த பக்கங்ககளில் எல்லாம் என்னுடைய கையொப்பத்தை...

சித்ரகுப்தனின் நோட்டுப்புத்தகம்

இன்னொரு அறிமுகம்: இந்த நண்பருடைய மகள் திருமணம். மாலை வரவேற்புக்குப் போயிருந்தேன். தடுக்கி விழுந்தால் தமிழறிஞ்சர்கள், பேச்சாளர்கள்,பிரமுகர்கள்.என்னால் அங்கே ஓட்ட முடியவில்லை.காரணம், சுனாமி.தமிழ்நாட்டை சுனாமி தாக்கிய இரண்டாம் நாள் அது. சென்னை பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சமைத்து உணவை எடுத்துக் கொண்டுபோய் மகாபலிபுரம் அருகில் உள்ள கிராமங்களில் கொடுத்து வந்தோம்.அந்த வேலையில் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.` கோவிலில் உள்ள அரிசியை நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது ` என்று ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து விட்டார். நண்பர்கள் அவரைத் தட்டி விடலாம் என்றார்கள். எனக்கு உடன்பாடில்லை.அந்தக் கவலையோடுதான் இந்த வரவேற்புக்கு வந்தேன். பெண்ணின் திருமண மிதப்பில் இருந்தாலும் , மதியூகி என்ற முறையில் என்னுடைய தவிப்பை நண்பர் புரிந்து கொண்டார். விசாரித்தார்.சொல்லிவிட்டேன்.` நீ சாப்பிட வேண்டாம். புறப்பட்டு`என்று...

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம். இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980. அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம். ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் , தலையணையும் கொடுப்பார்கள். ஆனால் விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப் பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்... ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார் நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார். ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே. அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே. விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம் இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது. தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ மூச்சு விடுவது...

பவல் சன்யாசி

...

வைகோ

புதிய தலைமுறை நேர்காணலைப் பார்த்தேன். வைகோ பண்போடு பேசுகிறார்.தோல்விகளால் துவண்டுவிடவில்லை என்பதைப் பாராட்டலாம். ஆனால் அவர் மாறி வரும் சூழலைப் புரிந்துகொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன். உலகத் தமிழர்களின் ஆதரவை வைத்துக்கொண்டு தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது. அரசியலைப் பொறுத்தவரை ஒரு தளத்தில் பலமாக இருப்பது இன்னொரு தளத்தில் பலவீனமாக மாறிவிடும். கட்சி நடத்த பணம் தேவை.ஆனால் பணம் படைத்தவர்களிடம் கட்சி கை மாறி விட்டால் அதுவே மக்களை கட்சியில் இருந்து அன்னியப் படுத்திவிடும். 1967 இல் காங்கிரசுக்கும் 2011 இல் தி மு க வுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு இதுவும் ஒரு காரணம். வைகோ வைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான நிலைப்பாட்டை எடுப்பதால் அவருடைய கட்சிக் காரர்கள் அவர் மீது அபிமானத்தோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கத்...

சுகி சிவமும் சமஸ்தானமும்

அறிமுகம்: வழக்கறிஞ்சர் கே. ரவி. மொரார்ஜி பிரதமரரக இருந்தபோது சந்திப்பு ஏற்பட்டது. மன்மோகன் காலத்திலும் நட்பு நீடிக்கிறது. தனிப்பட்ட முறையிலும் தத்துவத் தேடலிலும் நட்பு வலுப்பட்டது. என்னையும் ரவியையும் ஒன்றாகப் பார்க்கும்போது ரவி மூத்தவர் என்று மக்கள் முடிவெடுக்கிறார்கள். இரண்டு காரணங்கள்.ஒன்று, ரவியின் தலையில் முடி இல்லை.இரண்டாவது ரவி சொல்வதை நான் உடனடியாகச் செயல்படுத்துவது... ரவியும் சுகி சிவமும் அரை டவுசர் காலம் முதல் நண்பர்கள். ரவி வீடு சென்னை மந்தைவெளியில்.சிவம் வீடு மைலாப்பூரில். ஒரு புலர் காலைப் பொழுதில் ரவி வீட்டில் ரவியோடு பேசிக்கொண்டிருந்தேன். சிவம் அங்கு வந்தார். காபியோடு இலக்கிய சர்ச்சை தொடங்கியது.கவிதைக்கு எது முக்கியம்? அழகியலா? சமூகப் பயன்பாடா? என்கிற ரீதியில் மத்தாப்புச் சிதறல்கள். வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே `வீட்டில் குழாய் ரிபேர் ` என்று சொல்லிவிட்டு சிவம் தன் தரப்பைத்...

ஆரியத் தமிழன்

அறிமுகம்: ஆரியத் தமிழன். விவரமான ஆசாமி. கும்பகோணத்தில் பேச வந்த என்னை கூட்டம் முடிந்த பிறகு கடத்திக் கொண்ட போனார். அன்பான உபசரிப்பு.நிறைவான குடும்பம். ஜாக்ரதை ,ஸ்வப்னம்,சுஷுப்தி மூன்று நிலைகளிலும ஹிந்து சமூகத்தைப் பற்றியே சிந்திக்கிறார் என்பதைக் கண்டேன். காலை எழுந்தவ்டன் மாடிக்கு அழைத்துப் போனார். நான் எதிர்பார்க்கவில்லை.இந்த இடத்தில் இப்படி ஒரு அறிவுப் புதையல்.அழகாக அடுக்கி ,நூல் நிலையம் போல நோட்டுப் புத்தகத்தில் வகை வகையாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என்ட்ரி. ம பொ சி க்கு தனி அலமாரி. ம பொ சி புத்தகம் ஒன்றைத் தேடி அவருடைய மகள் வந்தாராம். வைணவம் பற்றிக் கேட்டால் வகுப்பு எடுக்க ஆரம்பித்து விடுகிறார். அரசியலில் அ முதல் இல் வரை இருக்கிறது. ஆ த இருக்கும் இடத்தில் புத்தகம் என்பது அனாவசியம்.எல்லாவற்றையும் அவரே சொல்லிவிடுகிறார். அவர் கொடுத்த பத்தகங்களை ஓடும் ரயிலில் படித்தேன். அதற்கு நன்றி சொல்வதா...

மைபாவின் கட்சியில் ....

இதோ இன்னொரு அறிமுகம். மை பா என்று சொன்னால் மிடியாகாரர்களுக்குத் தெரியும்.சத்யமூர்த்தி பவனாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும் மை பா வுக்குத் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். மணிக்கணக்கில் பேசக்கூடிய வை கோ , மை பா பேசுவதை ரசித்துக் கேட்பார். 2000 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது செல்வி ஜெயலலிதா `நாராயணன்` என்று அழைத்தார். மொத்த மீடியாவின் கவனமும் மை பா நாராயணன் பக்கம் திரும்பியது. செல்வி ஜெயலலிதா பருகூரில் போட்டியிட்ட 1996 சட்டமன்றத் தேர்தலிலும் மை பா முத்திரை உண்டு. மை பா அப்போது தமிழன் எக்ஸ்ப்ரஸில் ரிப்போர்டராக இருந்தார்.அலுவலகத்து உள் அரசியலில் இவரை ஓரம் கட்டி வைத்திருந்தார்கள். சில விதிகளைத் தளர்த்தி பருகூர் போவதற்கு மை பா வுக்கு உத்தரவு வாங்கிக் கொடுத்தேன். புலனாய்வு இதழ்கள் எல்லாம் `அ தி மு க தோற்று விடும்,...