என்னடா இது என்று நீங்கள் யோசிக்கக்கூடும் என்பதால் முதலிலேயே சொல்லி விடுகிறேன். ‘ரைத்தா’ என்பது ஒரு உணவுப் பொருள் : தயிர்ப் பச்சடியின் வட நாட்டு வடிவம். ராதிகா? என்னுடைய அன்புக்குரிய உறவினர் ஸ்ரீரங்கம் விச்வநாதனின் அன்புக்குரிய மனைவி.
என்னுடைய மருமகள் என்று சொன்னால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விடும். அதனால் மகள்
என்றே சொல்கிறேன்.
கடந்த வாரத்தின் இறுதி நாட்களை அவர்கள் வீட்டில் செலவிட்டேன். தமிழ்நாடு
வாசகர் வட்டத்தின் திருச்சி மாவட்ட கிளை துவக்க விழா, டிசம்பர் 16, 2012 அன்று நடை
பெற்றது. அதைப் பற்றிய விவரங்களை இங்கே எழுதி உங்களைச் சோதிப்பதாக இல்லை. இது
ரைத்தா பற்றித்தான். கொஞ்சம் ராதிகாவைப் பற்றியும்.
“ நீ விஜயகாந்த் மாதிரி இருக்கேம்மா” என்று சொல்வேன், பதிலுக்கு அந்தப் பெண் கண்களை அகல விரித்து, விழிகள் வெளியே
விழுந்து...