THE SRILANKAN TAMILS - WHAT IS TO BE DONE

Students are holding rallies in the streets of Tamilnadu. Chennai, Madurai, Kovai, and other cities have gone into the agitation mode against the Srilankan government and the Indian National Congress. College campuses are turning into venues for fasting. DMK has come out of the UPA fold. The Tamilnadu assembly has passed a resolution calling for a referendum on Tamil Eelam. Is it a replay of the 1965 anti-hindi agitation is the question that is being asked everywhere.

This situation remainds me of a story from the life of Buddha.

Once, Bhuddha was asked about the karma theory. The question was ‘Does one suffer because of his deeds in earlier births? Buddha maintained a stoic silence. Pestered again with the same question, He replied, “You are talking about the cause of the conflict; but I am busy offering succour to the affected”.

The Sri Lankan imbroglio involving the Tamils is much akin to the above. The political leaders in Tamil Nadu are hell-bent on punishing Rajapaksa for violation of  human rights. But the reality is that this sort of misplaced bravado will not a wee bit alleviate the suffering of the Tamils. The Tamils need all the help and support that can be given.

Eric Golsheim, the Norwegian peace negotiator, in an interview to the daily Afton Posten said, “It is clear

that there has been no respite for the sufferings of the Tamils even after the LTTE has been vanquished. If the Sri Lankan government does not immediately set in motion steps to bestow upon the Tamils their right to living , ethnic strife will again rise its head”.

Cho, Editor, Thuglak, the popular weekly from Tamil Nadu, says, “Adequate compensation to those affected by the LTTE – Sri Lankan government war, immediate logistical facilities for the displaced to return to their own places, ensuring equal status to Tamil, equal opportunities to the Tamils, in education and employment; installing a federal governance as in India, implementing the Rajiv- Jeyavadana accord are some of the activities that beg the immediate attention and concerted effort of the Sri Lankan government. “

Karunanidhi, the DMK leader said “It is my ardent desire to see the dawn of Tamil Eelam in my lifetime”. But in the TESO meeting held in Chennai, no one whimpered about Eelam. It is an open secret in Tamil Nadu that Karunanidhi and his associates were simply acting according to the compulsions of the alliance at the centre.

Karunanidhi’s stony silence during the killings of Mullivaykkal is too well known to credit him with any expectation. TESO created by Karunanidhi might perhaps get his son Stalin some publicity but certainly not any political solution to the struggling Sri Lankan Tamils.

“Give me half-an-hour to speak in the UN; I shall attain Eelam” claims Seeman, Leader, Nam Thamizhar Party. This is a call from a leader who has not contested any election so far.

Thol Thirumavalavan, Leader, Viduthalai Chiruththaikal Katchi, is moderate when he says, “Freedom struggles have never succeeded without the support of the world nations. So, let us garner their support”.

But all these have not helped to change the situation.

Politicians in Tamilnadu crying for Tamil Eelam want to raise their flaccid political fortunes. Sooner the Sri Lankan Tamils realize this, quicker will be their relief.

The most horrific violation of human rights has happened In Sri Lanka. The victims of this horrendous crime are our own brethren, who had migrated to erstwhile Ceylon. They still speak the same language, follow the same customs. It is puzzling why the Sri Lankan Tamils do not get what is their due.

The oral submissions made to “Lessons Learnt and Reconciliation Committee” committee set up by the Sri Lankan government point fingers squarely at the Sri Lankan army for the crime. Human right violations by the LTTE was also recorded by the same committee.

It is quite incomprehensible how Tamil Nadu has not fully grasped the fact that evidences of wrongdoing on 

the part of LTTE also have been recorded. It is even more pathetic that the rest of the country is quite oblivious of the ethnic cleansing that Sri Lanka is indulging in.

Let us recall that India and other 23 countries supported the resolution in the United Nations Human Right Council in March 22, 2011. Fifteen countries including China and Cuba opposed while eight abstained from voting. One must realize that only after incorporating the words, “in consultation with and with the concurrence of the government of Sri Lanka” could the resolution be passed.

It is quite evident that the political forces in Tamil Nadu are not capable and hence cannot create any support for the Sri Lankan Tamils in the comity of nations. It is equally clear that it is the people of India who can rise up to the occasion.

There is only one way out of this. The concerns of the people of Tamilnadu over this issue should be made into the concerns of the Indians as a whole. The entire country must understand the seriousness of the situation in Sri Lanka, the untold sufferings that the poor Tamils are put to.

It is India which will bring lasting peace in Sri Lanka and alleviate the sufferings of the Sri Lankan Tamils by getting them their right to living alongside the Sinhalese.


This must be explained to the people of India; it must be dealt in each and every language of the country. Public meetings must be organized in Jammu to Jamnagar; Surat to Bhubaneshvar; Delhi to Dornakal. People of Punjab, UP, MP, Odisha, Maharashtra, Gujarat must be apprised of the atrocity against the Tamils.
Conclaves must be convened in Cuttack, Kolkatta and Kochi.

Indian society must realize that what is happening to the Sri Lankan Tamils does affect India. Only then the Government of India will feel the enormity of the situation and act decisively. Geopolitical compulsions and generally accepted ethics of governance will prevent other countries from supporting the Sri Lankan
government. It is India’s strength that will stand the Sri Lankan Tamils in good stead. The Sri Lankan Tamils and the Tamil diaspora must realize this.

It must be remembered that it was the support that the Indians gave that resulted in the birth of Bangladesh It was the Jan Sangh which facilitated Bangladesh. When Sheik Mujubir Rahman won in the elections in East Pakistan, the democratic rights of the East Pakistanis were denied because of the adamantine attitude of Zulfikar Ali Bhutto, The then Prime Minister of the undivided Pakistan. The Pakistan army massacred the Bengalis. Lakhs from East Pakistan escaped to India as destitutes.

Jan Sangh, under the leadership of Atal Bihary Vajpayee, staged a massive demonstration for the “Freedom 
of Bangladesh”. A mammoth public meeting was organized at the Marina in Madras. In the final rally at Delhi, thousands courted arrest. Edward Kennedy, the prospective President of the USA, was amazed at
seeing the groundswell of participation.

Smitten by the support India gave to Bangladesh, Pakistan attacked India. Indian armed forces gave a stunning reply and defeated the Pakistan. Prime Minister Indira Gandhi’s determination helped in the birth of Bangladesh.

A similar situation has arisen now. India has the opportunity to show its strength yet again. The historic task of teaching a lesson to the Rajapaksa government and ensuring peace, justice and prosperity for the Tamils is awaiting the Bharatiya Janata Party.


Date Line:


3rd Century BC : Tamils from India migrate to Sri Lanka

1796 - 1948 : British rule in Sri Lanka

1830 : Tamils come to Sri Lanka as plantation labours

1944 : All India Ceylon Tamil Congress by G.G. Ponnambalam

1948 : Sri Lanka attains freedom

1948 : 10,00,000 plantation Tamils lose citizenship

1949 : Selvanayagam forms Federal Party

1956 : Prime Minister WRT Bandaranayaka makes Sinhala as the sole official

           language

1959 : Sirimao Bandaranayaka becomes Prime Minister

1961 : Sinhala as the official language in Tamil provinces

1964 : Shastri - Sirimao Bandaranayaka pact

1972 : New constitution

          Birth of TULF

1974 : Birth of TELO

          World Tamil Conference at Jaffna

          Police attack

1975 : Birth of EROS

1976 : Birth of LTTE

1976 : Call for Tamil Eelam

1977 : Prime Minister Jayavardane

          Riots against Tamils

1981 : Riots against Tamils. Jaffna library gutted

1981 : Birth of EPRLF

1983 : Riots against Tamils

1984 : Tamil militant groups get training in India

1985 : Clash among Tamil groups - Killings

1987 : Rajiv - Jayavardhane accord

          13th amendment

1987 : IPKF - LTTE war

1987 : Premadasa - LTTE negotiations

1989 : Amirthalingam killed by LTTE

1990 : EPRLF leader Padmanabha and twelve others killed by LTTE in Chennai

1990 : IPKF withdrawal from Sri Lanka

1991 : Rajiv Gandhi assassinated by the LTTE suicide bomber

2000 : Mediation by Norway

2002 : Prabakaran and Ranil Wikramasinghe sign accord

2004 : Karuna breaks away from LTTE

2005 : Mahinda Rajapaksa becomes President
2007 : War

ஆழ்வார்ப்பேட்டை கலைஞர்

சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை கொஞ்சம் வசதியான பகுதி. அங்கே எல்டாம்ச் ரோடு முனையில் இருந்தது குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ். அடையாரில் இருந்து நண்பர் சித்தார்த்தன் துணையோடு ஆழ்வார்ப்பேட்டை போனேன். காரணம் நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த அறிவியல் கதைக்குச் சில விவரங்கள் தேவைப்பட்டன. 
வெளிநாட்டுப் படப்பிடிப்புக் குழு ஒன்று தென்னிந்திய கிராமத்தில் நுழைகிறது. அவர்கள் பர்வையில் எதெல்லாம் தென்படும் என்பதை நான் கதையில்  விவிரிக்க வேண்டும். அதற்காகத்தான் அடையாரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை பயணம். 
குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ் காம்பவுண்ட் சுவரில் ஐந்து வாலிபர்கள். ஐந்து பேரும் திரைப்படக் கல்லூரி மாணவர்க்பள். சித்தார்த்தன் என்னை அறிமுகம் செய்தார். உயரமாக , கண்ணாடி அணிந்து ஒருக்களித்த கிராப்புடன் இருந்தவரை ஓரங்க்கட்டினேன்.
மற்றவர்களை விட்டு நாங்கள் நடக்கத் தொடங்குகிறோம். அவர் கவிதா ஓட்டல் செடிகொடிகளை ஆராய்ந்து கொண்டே வந்தார். நான் துவக்கத்திலிருந்து காமிராக் கலைஞன் வரை கதை சொல்லிக் கொண்டே வந்தேன். அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. 
“ முதலில் புழுதி தாங்க தெரியும். கிராமத்து எல்லையில் பசங்களைத் தாண்டும் வண்டி. அவர்கள் சத்தம் போட்டுக் கொண்டே கோவணம் பறக்கப் புழுதிக்கு நடுவே ஓடி வருவாங்க எனக்கு சொல்கிறரா, தனக்குச் சொல்லிக் கொள்கிறரா ? என்று இனம் பிரிக்க முடியவில்லை. இந்த மூன்று வரியை சர்வ நிதானமாக ஏகப்பட்ட இடைவெளியோடு சொல்லி முடித்தபோது வைஜயந்திமாலா வீடு வலது புறம் திரும்பினோம். 
சற்று நேரம் மெளனம். ஏதாவது சொல்ல வரும் போது குறுக்கே பேசிவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக மெளனமாயிருந்து விட்டேன். அதற்கு அவசியமில்லை. அவர் வேறு  லோகத்திலிருந்தார். கவிதை எழுத முயலும் பாரதியார் போல் நண்பர் நடை. கழுத்தைச் சாய்த்திருந்தார். ஏதாவது போதை சாப்பிட்டிருப்பாரோ? தப்பு நம்முடையது. மனதில் வந்த்தை எழுத வேண்டியதுதானே. இவ்வளவு சிரமப்பட்டு விவரம் சேகரிக்க வேண்டியதில்லை.என்று யோசனை ஓடியது. நண்பருக்குப் பிரக்ஞை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளட்பாரத்து எருமை மீது மோதாமல் லாகவமாக ஒதுங்கிக் கொண்டார். மெளப்ரீஸ் ரோடு வந்தாயிற்று. நண்பர் உடல் தன்னிச்சையாகத் திரும்பியது. 
 துணிந்து , பசங்க ஓடி வராங்க. அப்புறம் ? “ என்றேன்.“ கிராமத்து ரோடு அதிரும் . காமிரா பார்வை குலுங்கும் . வளையும் . தெருவில் கோழி  டயருக்குத் தப்பும். , கதவிடுக்கில் இளம்பெண். திரும்பவும் கழுத்துச் சாய்ப்பு. எக்குத்தப்பான நடை. தனக்கு முன்னாலிருந்த வெற்றிட்த்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். சாலையில் விரையும் வாகனங்களின் சத்தம் என்னைக் கலைத்த்து. நமக்குப் பிரயோஜனம் இல்லை என்று விட்டு விட்டேன்.மீண்டும் குமாரசாமி குட்டிச்சுவர். அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “ அற்புதமான கதை “ என்றார் நண்பர். 
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டோம் நானும் சித்தார்த்தனும். 5-ஆம் நம்பர் பஸ்ஸில் தொத்திக் கொண்டோம். ஓடுகின்ற பஸ்ஸிலிருந்து திரும்பிப் பர்த்தால் குட்டிச் சுவரில் அந்தக் காமிரா நண்பர் பி.சி. ஸ்ரீராமும் மற்றவர்களும். 



ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான வழி

பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில் ‘ கர்மவினை ‘ பற்றி அவரிடம் பலமுறை கேட்கப்பட்டது. மனிதர்களின் துன்பங்களுக்கு அவர்களுடைய முற்பிறவிச் செயல்தானே காரணம் என்றும் கேட்கப்பட்டது. பலமுறை அவர் பதில் சொல்வதைத் தவிர்த்தார்.முடிவாக ஒரு நாள் “ நீங்கள் எய்தப்பட்ட அம்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறீர்கள்; நான் அடிபட்ட பறவைக்கு  நிவாரணமும் நிம்மதியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.என்றார்.அவர்.  
 
ஈழத்தமிழர் பிரச்சினையும் கிட்டத்தட்ட இதே நிலைமையில்தான் இருக்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவை ,  இனப் படுகொலைக்காகவும் , மனித உரிமை மீறலுக்காகவும்  தண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தின்  சில அரசியல் தலைவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் . இவர்களிடம் அம்பைப் பற்றிய ஆராய்ச்சி இருக்கிறது. இவர்களுடைய சூரத்தனத்தால் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம்

இலங்கையில் நடந்த போரைத் தடுப்பதற்காகப் பாடுபட்டவர் நார்வேயைச் சேர்ந்த முன்னாள் அமைதித் தூதர் எரிக் கோல்ஷீம். ஆஃப்டன் போஸ்டன்  என்ற இதழுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் , விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகும் தமிழர் பிரச்சினை தீர்க்கப் படவில்லை. தமிழர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் .இலங்கை அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் அங்கே இன மோதல்  மீண்டும் வெடிக்கும் “ என்று கூறியுள்ளார். 

துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ , அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு : குடி பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள்  சொந்த இடங்களுக்குப் போய்ச்சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள்; தமிழ் மொழிக்கு சிங்கள் மொழிக்குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை , சிங்களவர்களுக்குச் சமமாகத்  தமிழர்களுக்கு உரிமைகள் ; இந்தியாவில் உள்ளதுபோல் சமஷ்டி அரசியல் அமைப்பு ; ராஜிவ்- ஜெயவர்தன ஒப்பந்தம் அமல் படுத்துவது .... போன்றவற்றை இலங்கை அரசு முனைந்து செய்து முடிக்க வேண்டும்  என்கிறார். 
கட்சிக்காரர்கள்  முன்னிலையில்  பொதுக்கூட்ட மேடையில் “ என் வாழ்நாளிலேயே தமிழீழத்தைக் காண வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை “ என்று கூறினார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நடத்திய டெசோ மாநாட்டில் தமிழீழம் குறித்த ஓசை எழுப்பப்படவில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்திற்குப் பணிந்து கருணாநிதியும் அவரைச் சார்ந்தவர்க்ளும் நடப்பதாகத் தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 

“ஐ. நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள். நான் தமிழீழத்தை அடைந்து விடுவேன் “ என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். 
“ உலக நாடுகள் ஆதரவு இல்லாமல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை . எனவே உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவோம் என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். 
 இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் இந்தியாவிற்கு வெகு அருகிலே நடந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் நம்முடைய சொந்த பந்தங்கள் என்ற போதிலும் , ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காதது ஏன் என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது. 

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ‘ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு முன்பாக மக்கள் அளித்த சாட்சியங்கள் , இலங்கை ராணுவத்திற்கு எதிராக இருக்கின்றன. விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியும்  சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. என்பது கூட தமிழ்நாட்டில் முழுமையாக உணரப்படவில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்தச் சேதி எட்டவே இல்லை.இது ஏன் என்ற கேள்வி நம்மை வதைக்கிறது.

சீமானை விட்டு விடுவோம். அவருடைய கருத்தில் சீரியசாக எதுவும் இல்லை. திமுக தலைமையும் , வி. சி. கட்சித் தலைமையும் , முதலில் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு , இப்போது தில்லியில் உள்ள அயல் நாட்டுத் தூதரகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் 22-ம் தேதியன்று, ஐ நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு அளித்தன; சீனா, க்யூபா உட்பட்ட  15 நாடுகள் எதிர்த்தன; 8 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பதை  இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும். 

தீர்மான வாசகத்தில், “ in consultation with and with the concurrence of the government of Sri Lankaஎன்று  மாற்றம் செய்யப்பட்ட பிறகே  அதை நிறைவேற்ற முடிந்தது என்பது முக்கியமான விஷயம். ராஜபக்சேவை குற்ற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் , அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங்களோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். தழ்நாட்டு அரசியல் சக்திகளால் உலக அரங்கில் ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முடியாது. அம்மையப்பனைச் சுற்றாமல் அகில உலகத்தையும் சுற்றி வருவது வெற்றியைத் தராது. இந்தக் களத்தில் இந்திய மக்கள்தாம் அம்மையப்பன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஈழத் தமிழருக்கு நிவாரணமும் வாழ்வுரிமையும் பெற்றூத் தரப் போவது இந்த்ய நாடுதான். கருணாநிதியால் இது கை கூடாது. முள்ளிவாய்க்கால் போரின்போது மெளனம் காத்தவர் அவர். அவரும் , அவருடைய டெசோ அமைப்பும் ஸ்டாலினை முன்னிறுத்தி செய்கின்ற முயற்சிகளெல்லாம் ஸ்டாலினுக்கு பப்ளிசிடியைப் பெற்றுத்தருமேயன்றி , பாதிக்கப்பட்டவர்களுக்கு  அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.
இன்று  நம் முன் உள்ள தீர்வு ஒன்றுதான் : தமிழர் கவலையை இந்தியக் கவலையாக மாற்ற வேண்டும் . இந்திய மக்களிடையே அனைத்து மொழிகளிலும் ஈழத்தமிழர் படும் பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் ஓங்கோலிலும், ஒரிஸ்ஸாவிலும் , பரோடாவிலும் , பஞ்சாபிலும் , அஸ்ஸாமிலும், பீஹாரிலும் பொதுக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நட்த்த வேண்டும். 

நம்முடைய சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியாவெங்கும் ஏற்பட்டால், இந்திய அரசு தானாக நடவடிக்கை எடுக்கும். புவிசார் அரசியல் நெறிப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாக  எந்த நாடும் செயல்பட முடியாது  இந்தியாவின் வல்லமையே ஈழத்தமிழருக்கு பக்க பலமாக இருக்கும், இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும். இதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். 

தமிழ்நாட்டு அரசியலில் தலை தூக்க முடியாதவர்கள் லண்டன் நகரிலும், ஐரோப்பாவிலும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஆற்றும் வீர உரையால் ,  எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது ஈழத்தமிழர்களால் எவ்வளவு  விரைவில்  உணரப் படுகிறதோ அவ்வளவு விரைவில் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். 
 வங்க தேசத்தின் விடுதலைக்கு இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சிதான் காரணம் என்பதையும் , அதை உண்டாக்கியது ஜன சங்கம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் கிழக்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜுபிர் ரஹ்மான். ஆனால், பாகிஸ்தான் அரசின் ஆட்சியில் இருந்த ஜுல்ஃபிகர் புட்டோவின் பிடிவாதத்தால் , கிழக்கு வங்காளத்து மக்களுக்கு ஜனநாயக  உரிமைகள் மறுக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவம் அங்கே ஒரு படுகொலையை நடத்தியது. இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக  இந்தியாவில் குடியேறினர்.
அடல் பிஹாரி வாஜ்பாயியின் தலைமையில் “ வங்க தேசம் விடுதலை பெற வேண்டும் “என்ற போராட்டம் ஜனசங்கத்தால் நடத்தப் பட்டது. சென்னை கடற்கரையில் சீரணி அரங்கத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப் பட்டது. இறுதியாக தில்லியில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க்விலிருந்து வந்த எட்வர்ட் கென்னடி இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்துப் போனார். 
வங்க தேசத்திற்கு இந்தியா கொடுத்த  ஆத்ரவைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் நம் மீது படையெடுத்தது.  இதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால்  விடுதலை பெற்ற வங்க தேசம் உருவானது.
ஈழத் தமிழருக்கு வாழ்வு தர முடியும் என்ற வாய்ப்பு இப்போது தமிழகத்து பாஜகவின் முன் நிற்கிறது.  முதலில் அகில இந்தியத் த்லைமையிடம் இது குறித்து வற்புறுத்த வேண்டும். பிறகு அனைத்து மாநிலத் தலைமைகளையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.இலங்கை அரசைப் பணியச் செய்து , ஈழத் தமிழருக்கு  வாழ்வு கிடைக்க வழி செய்திட வேண்டும் 

சீமானால் சிந்திக்க முடியாததை , கருணாநிதியால் சாதிக்க முடியாத்தை,  வைகோவால் நடைமுறைப்படுத்த முடியாத்தை,  , மார்க்ஸிஸ்டுகளல் செயல் படுத்த முடியாததை , ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு  அப்பாற்பட்டதை , சோனியா காந்தி செய்ய விரும்பாததை பாஜகவால் செய்ய முடியும்.இதற்கான  முனைப்பை தமிழக பாஜக ஏற்படுத்த வேண்டும் என்பது என்ன்னுடைய பணிவான வேண்டுகோள்.வரலாற்றுப் பணி நம் வாசலில் காத்திருக்கிறது

சில குறிப்புகள் :
1830       --  மலையகத்தில் தொழிலாளர்களாகத்  தமிழர்கள் குடியேற்றம்
1944       -- அகில இந்திய இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி.
                               / ஜி ஜி பொன்னம்பலம்
1948       -- குடியுரிமைச் சட்டம் – 10,00,000 மக்கள் நாடற்றவரானார்
1948       -- இலங்கைத் தமிழீழக் கட்சி உதயம்
1956       -- பண்டாரநாயகா பிரதமர் – சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி
1961       -- சிறிமாவோ பண்டாரநாயக – பிரதமர் – தமிழ்ப் பகுதிகளிலும்
                                               சிங்களமே ஆட்சி மொழி
1964      -- சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்
1965      -- டட்லி சேனநாயகா – பிரதமர் தமிழரசுக் கட்சி,தமிழ்க் கங்கிரஸ் கட்சி
                                   ஆதரவு.
1972      -- புதிய அரசியலமைப்புச் சட்டம்
1974      -- யாழ்ப்பாணம் – உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – போலிஸ் வன்முறை
1977      -- ஜெயவர்தனா பிரதமர் – இனக் கலவரம்
1981      -- இனக் கலவரம்
1983      -- இனக் கலவரம்
1983      -- இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
1984      -- இலங்கைப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி
1985      -- சகோதர யுத்தம் / விடுதலைப் புலிகளின் வளர்ச்சி
1987      -- ராஜிவ் காந்தி – ஜெயவர்தனா உடன்பாடு – 13 வது அரசியலமைப்புத்
                                                        திருத்தம்
1987      -- இந்திய அமைதிப் படை
1991      -- ராஜிவ் காந்தி கொலை
2000     -- நார்வே தலையீடு – போர் நிறுத்த உடன்பாடு
2008     -- இறுதிப் போர்.