சசிக்கு உதவிய ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய ஆட்சித்திறன் மீதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  ‘விஸ்வரூபம்” திரைப்படத்தை திரையிடுவதற்கு முன் முஸ்லீம் அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட்டாரே? இது அதிகார வரம்பை மீறிய செயல் ஆகாதா என்று சிலர் கேட்கிறார்கள்.  ‘கூடங்குளம் உதயகுமார் காய்ச்சி எடுப்பது மத்திய அரசைத்தானே, நமக்கு என்ன என்று ஆறு மாத காலம் அமைதியாக இருந்தாரே”.  இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே என்றும் சிலர் கேட்கிறார்கள்.  சட்ட சபையில் அதிமுக உறுப்பினர்கள் பேச எழுந்து, இதய தெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரக் கண்மணி, காவிரித்தாய், தமிழக முதல்வர், அம்மா என்று அடைமொழிகளைத் தொடர்ந்து உதிர்த்துவிட்டு, குனிந்து குனிந்து கும்பிட்டுவிட்டு, மானியக் கோரிக்கைக்கு வருவதற்குள் மணிநேரம் ஆகிவிடுகிறது. ...