சூது ஜவ்வும்

எந்த வேலை எப்படி இருந்தாலும், வெயில் வழக்கம்போல ஓவராக இருந்தாலும், விடுமுறைக்கு வந்த விருந்தினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உட்னே இப்பட்த்தைப் பர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பர்த்துவிட்டு வந்து, “ நீ சாப்பிடுவது இட்லி இல்லை என்பதை சட்னி கூட நம்பாது” என்று ஆரம்பித்து விடுவார். உங்க்ளை போன்று ஒருவர் அல்லது இருவர்தான் பாக்கி.  முதல் மார்க் இயக்குனர் நலன் குமாரசாமிக்கு. எந்த காரெக்டரயும் கெளரவமாக, சீரியஸாக்க் காட்டக் கூடாது  என்ற வைராக்யத்தோடு படம் எடுத்திருக்கிறார். நிதியமைச்சராக வரும் திரு எம் எஸ் பாஸ்கர் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார்.  குருட்டுத்தனமான முட்டாள்தனம், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் அவசியம் என்று சொல்லி, கட்த்தல் தொழிலுக்காக்க் கரும்பலகையோடு வகுப்பு...