ஆமருவி தேவநாதனின் “ பழைய கணக்கு “

ஆமருவி தேவநாதன்
நண்பர் ஆமருவி தேவநாதனின் புத்தகம் “ பழைய கணக்கு “. இந்தச் சிறு கதைத் தொகுப்பில் , இது இரண்டாவது கதையின் பெயர்.
“இன்னிக்கு சாப்பாடு இல்லை. நீ வேற ஆத்துக்குப் போ “ என்று கதையின் முதல் பத்தியில் வருகிறது.
தொடர்ந்து படிக்க முடியவில்லை. காரணம் , பசி..
பசி என்றால் தற்போதைய பசி இல்லை. அவல் உப்புமா, தக்காளி சட்டினி, ஒரு மலைப் பழத்துக்குப் பிறகுதான் ஆமருவியைக் கையிலெடுத்தேன். இந்தப் பசி பழைய பசி. பசி பற்றிய நினைவுகள் .
ஒரிஸ்ஸாவில் தொடங்கி கேரளத்தில் முடிவுற்ற பசி. பசி என்பதை எழுத்தில் மட்டுமே படித்துத் தெரிந்து கொண்டவர்களுக்கு இது வசப்படாது. அது, உடலின் ஒரு பகுதியாக , ஒரு கட்டத்தில் உடலையே உணவாக்கிக் கொள்ளும் உந்துதலாக இருப்பதை எல்லோரும் அனுபவித்திருக்க முடியாது.
சென்னையில் இருந்து புறப்பட்டு ஹெளரா மெயிலில் ஒரிஸ்ஸாவின் தலைநகர் புவனேச்வரத்துக்கு வந்தேன(1980)். அங்கிருந்து நூல் பிடித்தாற்போல் கிழக்கு நோக்கி ஒரு ரோடு.. நூறு கிலோமீட்டருக்குப் பிறகு கடற்கரைத் துறைமுகம் ; பெயர் பாரதீப் ..
இந்த பாரதீப்பில் ஒரு வருட காலம் இருந்தேன். மீன் பிடித் தொழில்தான் ஜீவனம். பாரதீப் ஒரு தளம் தான். அங்கிருந்து புறப்பட்டு வடக்கே போய், மகாநதி கடலில் கலக்கும் இட்த்தில் நூற்றுக் கணக்கான தீவுகள் இருக்கும். அந்தத் தீவுகளில்் தங்கித் தான் மீன் பிடிப்புத் தொழில் .
ஆளில்லாத ஒரு தீவில் என்னை விட்டு விட்டு மீனவர்கள் படகில் ஏறி கடலில் போய் விட்டார்கள். என்னோடு ஏகப்பட்ட திரவியங்கள். அரிசி, பருப்பு, தண்ணீர் கேன், காய்கறிகள், தேங்காய், பால் பவுடர், எண்ணெய், காப்பித் தூள், மண்ணெண்ணெய் , ஸ்டவ் என்று..
நான் தனியாக இருந்தேன் என்று சொல்லியிருந்தால் திருத்திக் கொள்ளவும்.. என்னோடு பராசக்தி.....
சிலர் லலிதா சஹஸ்ரநாமம் படிப்பார்கள். சிலர் அபிஷேகத்துக்குப் பணம் கட்டி விட்டு அலங்காரத்தைப் பரவசமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் விரதம் இருப்பார்கள். சிலர் தீக்குழியில் நடப்பார்கள.் நம்முடைய வழிபாட்டு முறை வித்தியாசமானது.
எல்லாப் பிரச்சினைகளுக்கும் இவள்தான் காரணம் என்று ஓயாமல் குறை சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு குறையை அவள் நிறைவு செய்து முடிப்பதற்கு முன்பே , அடுத்ததை ஆரம்பித்து விடுவேன். அவள் அசர மாட்டாள். அலுப்பு இல்லாத அபிராமி.
குறைப் பட்டியலை அவளிடம் கொடுத்து விட்டு அந்தத் தீவில் காலாற நடந்தேன். நான் இருந்தது மேடான பகுதி. மறுபக்கம் தாழ்வான பகுதிக்குள் வந்தால் அங்கே அதிசயமாய் ஒரு குடிசை.
குடிசையில் ஒரு கேரளத்துக்காரர். பூர்வாச்ரமத்தில் அவர் ஒரு சமையற்காரர். தீவில் சுலபமாக போலீஸ் வர முடியாதென்பதால் மீனவர்களுக்காக சாராய உற்பத்தி செய்து கொண்டிருந்தார். அவருக்கே சாப்பாட்டுக்குத் தட்டுப்பாடு என்கிற நிலை. என்னுடைய பண்டகசாலையை அவரிடம் ஒப்படைத்தேன். சாராயக் கடையை இழுத்து மூடி விட்டார். உடனடித் தயாரிப்பாக பூண்டு ரசமும் உருளைக் கிழங்கு ரோஸ்டும் செய்து விட்டார். சாப்பிட்டேன். கைகழுவி விட்டுத் திரும்பிப் பார்த்தால் கல்லாப் பெட்டிக்கு மேலே கொடுங்களூர் பகவதி என்னை முறைத்துக் கொண்டிருக்கிறாள். வயிறு நிறைந்து விட்டதால் நான் வாக்குவாதம் செய்யவில்லை. ..
ஆமருவியின் சிறுகதை ?
அக்கிரகாரத்துக் கதை.வைதிக பிராம்மணரின் பையன் ஹைஸ்கூல் படிப்பிற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இரவில் தேசிகர் மடத்தில் வவ்வால்களோடு சகவாசம். இந்தக் கட்டுரையின் முதல் பகுதியில் குறிப்பிட்டது போல, அவனுக்கு ஒருநாள் இரவு உணவு மறுக்கப் படுகிறது. அந்தக் கணக்கு பின்னாளில் பெங்களூருவில் நேர் செய்யப் படுகிறது என்று எழுதுகிறார் ஆமருவி.
எப்படி என்பதைத் தெரிந்து கொள்ளப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
சிறுகதையை இதைவிடச் சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் எழுத முடியாது என்று நினைக்கிறேன்.

Bharathiyar by Dr R Srinivasan

சூது ஜவ்வும்

எந்த வேலை எப்படி இருந்தாலும், வெயில் வழக்கம்போல ஓவராக இருந்தாலும், விடுமுறைக்கு வந்த விருந்தினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உட்னே இப்பட்த்தைப் பர்த்து விடுங்கள். இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பர்த்துவிட்டு வந்து, “ நீ சாப்பிடுவது இட்லி இல்லை என்பதை சட்னி கூட நம்பாது” என்று ஆரம்பித்து விடுவார். உங்க்ளை போன்று ஒருவர் அல்லது இருவர்தான் பாக்கி. 
முதல் மார்க் இயக்குனர் நலன் குமாரசாமிக்கு. எந்த காரெக்டரயும் கெளரவமாக, சீரியஸாக்க் காட்டக் கூடாது  என்ற வைராக்யத்தோடு படம் எடுத்திருக்கிறார். நிதியமைச்சராக வரும் திரு எம் எஸ் பாஸ்கர் மட்டும் எப்படியோ தப்பித்து விட்டார். 
குருட்டுத்தனமான முட்டாள்தனம், முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் அவசியம் என்று சொல்லி, கட்த்தல் தொழிலுக்காக்க் கரும்பலகையோடு வகுப்பு எடுக்கும் விஜய் தேதுபதி தன்னுடைய அதிரடித் திட்டங்களால் தியேட்டரில் சிரிப்பலைகளை எழுப்புகிறார்.
அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்த வேண்டுமா, கூப்பிடுங்கள் ராதரவியை என்று சொல்ல்லாம்.ஊழல் என்ற பெட்ரோலில்தான் அரசியல்வாதிகளின் வண்டி ஓடுகிறது என்பதை எத்தனை வார்த்தைகளில் , எத்தனை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்துகிறார் !
தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்கள் போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, மேசையைத் துக்கி அடிப்பது, லாக் அப் கம்பிகளை பல்லால் கடித்து வளைப்பது போன்ற காட்சிகளைப் பர்ர்த்து  சலித்துப் போனவர்களுக்கு, இன்ஸ்பெக்டர் பிரம்மாவாக வரும் யோக் ஜெப்பி ஒரு அசால்ட்டான  அறிமுகம். போலிசிடம்  கேடிகள் அடி வாங்குவதை ரசித்து ரசித்து எடுத்திருக்கிறார்கள். இது காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். 
இத்தகைய சுவாரஸ்யங்கள் இருந்தும் , எதிர்பாராத நேரங்களில் காமிரா
சங்கீதா ஷெட்டியின் தங்கமான அங்கங்களை விட்டு நகர மாட்டேனென்கிறது.  கவர்ச்சிக்கு மிஞ்சிய இட்த்தில்தான் கடை ஓட்டம்.
இம்மாம் பெரிய தேவி தியேட்டரில் 10 சீட் தான் காலியிருந்த்து. பக்கத்து சாந்தி தியேட்டரில் , “ மூன்று பேர் மூன்று காதல் “ திரைப்பட்த்திற்கு 10  சீட் தான் நிரம்பி இருந்த்து. 
அதெல்லாம் சரி, நல்லாயிருக்கிற திரைப்பட்த்திற்கு “சூது ஜவ்வும்  “ என்று தலைப்பு வைத்து விமரிசனம் செய்வானேன் என்று கேட்கிறீர்களா? நல்ல கேளிதான். இதுகூட இயக்குனர் நலன் குப்புசாமியிடமிருந்து கடன் வாங்கியது தான். தேவையில்லாமல் அதிர வைப்பது அவரது டெக்னிக்.

சசிக்கு உதவிய ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா மீதும், அவருடைய ஆட்சித்திறன் மீதும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.  ‘விஸ்வரூபம்” திரைப்படத்தை திரையிடுவதற்கு முன் முஸ்லீம் அமைப்புகளுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளை இட்டாரே? இது அதிகார வரம்பை மீறிய செயல் ஆகாதா என்று சிலர் கேட்கிறார்கள்.  ‘கூடங்குளம் உதயகுமார் காய்ச்சி எடுப்பது மத்திய அரசைத்தானே, நமக்கு என்ன என்று ஆறு மாத காலம் அமைதியாக இருந்தாரே”.  இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதே என்றும் சிலர் கேட்கிறார்கள்.  சட்ட சபையில் அதிமுக உறுப்பினர்கள் பேச எழுந்து, இதய தெய்வம், புரட்சித்தலைவி, கழகத்தின் நிரந்தரக் கண்மணி, காவிரித்தாய், தமிழக முதல்வர், அம்மா என்று அடைமொழிகளைத் தொடர்ந்து உதிர்த்துவிட்டு, குனிந்து குனிந்து கும்பிட்டுவிட்டு, மானியக் கோரிக்கைக்கு வருவதற்குள் மணிநேரம் ஆகிவிடுகிறது.  இதற்கெல்லாம் எவனுடைய அப்பன் வீட்டுப்பணம் செலவழிக்கப்படுகிறது என்றும் சிலர் கேட்கிறார்கள்.  நியாயமான கேள்விதான்.  அதிமுக ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை உறுதிப்படுத்த அமைச்சர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அம்மையாரைப் புகழ்ந்து துதிபாட நேரம் ஒதுக்கப்பட்டு அவையின் நேரம் வீணடிக்கப்படுகிறது.



திமுகவைப் பொறுத்தவரை அங்கு ஜனநாயகம் என்றாலே ஒவ்வாமைதான்.
குடும்பச் சண்டை முடிந்தால்தானே கொள்கையைப் பற்றிப் பேச முடியும்? அங்கும் கருணாநிதியின் புகழுக்குத்தான் அதிகபட்ச ஒதுக்கீடு.  அதிலும் கருணாநிதி மற்றவர்களை நம்புவதில்லை.  தன் புகழைத்; தானே பாடி, தானே கேட்கும் விகாரமான மனோநிலை அவருடையது.



இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்ததுதானே.  நீ புதிதாக என்ன சொல்லப் போகிறாய் என்று நீங்கள் முணுமுணுக்க வேண்டாம்.  இது சட்டமன்ற நெறிமுறைகள் பற்றியோ, ஜனநாயகத்தைப் பற்றியோ அல்ல.  இது, ஜெயலலிதா, சசிக்கு செய்த உபகாரம் பற்றி.



இந்த இடத்தில் சசி என்பது போயஸ் தோட்டத்து சசிகலா அல்ல, சசிரேகா என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  சசிரேகா என்பவர் இன்னும் ஜெயலலிதாவைச் சந்திக்கவில்லை.



பதின்மூன்று வருடங்களுக்கு முன் தினமணியின் சென்னை அலுவலகத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன்.  அப்போது புதிதாக வந்து சேர்ந்த ரிப்போர்ட்டர்தான் சசிரேகா.  பிறப்பும், வளர்ப்பும் திருவண்ணாமலையில்.  தினமணி வேலை கிடைத்தவுடன் சென்னைக்கு வந்து சிட்லபாக்கத்தில் ஜாகை.



அன்றாடம் ஊருக்கு உபதேசம் செய்யும் பத்திரிக்கை நண்பர்கள், தங்கள்
துறையில் பெண்கள் நுழைவதை விரும்புவதில்லை.  முடிந்தவரை முட்டுக்கட்டை போடுவார்கள்.  ஆனால் என்னுடைய வாக்கு பெண்களுக்குத்தான்.  அதிலும் சசிரேகாவின் பொருளாதாரப் பின்புலம் சொல்லும்படியாக இல்லை என்று தெரிந்தபிறகு பரிவு அதிகமாகிவிட்டது.




தினமணிக்கு வருவதற்கு முன் சசிரேகா  மருத்துவமனை ஒன்றில்  வேலை செய்தார்.  அந்த நினைப்பில் யானைக்கால் நோய் பற்றி ஒரு கால் பக்கக் கட்டுரை எழுதிவிட்டு அதை எல்லோரிடமும் சுட்டிக் காட்டிப் பேசிக் கொண்டிருந்தார் சசிரேகா.  யாரும் அதை மதிப்பதாக இல்லை.  ஒரு சில வாலிபர்கள் மட்டும் ஆபீஸ் வேலை தவிர்த்த காரணங்களுக்காக அந்தப் பெண்ணைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.



இப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது, சசிக்கு ஒரு யோசனை சொன்னேன்.  ‘எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலனின் சகோதரி சேது அம்மாள் பல்லாவரத்தில் இருக்கிறாராம்.  அவர் வறுமையில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதிய அவர் 90 வயதைக் கடந்தவர்.  அவரைப் பார்த்து ஒரு கட்டுரை எழுது.  ஒருவேளை முதலமைச்சரின் பார்வையில் பட்டால் அவருக்கு நிவாரணம் கிடைக்கலாம்” என்றேன்.



பல்லாவரம் என்று குத்துமதிப்பாகச் சொல்லிவிட்டார்கள். சேது அம்மாளின் வீடு பல்லாவரத்திலிருந்து பலகாத தூரம்.  அது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூருக்கு வெளியே இருந்தது.  வெட்டிப்போட்டால்கூட எட்டிப் பார்க்க ஆளில்லாத தனிவீடு.  உறவுக்காரர் ஒருவர்.  அவரே முதுமையில் இருந்தார்.  அந்த அறையின் இருட்டில் தெரிந்தது ஒரு பாய் மட்டுமே.  வயதானவர்கள், வறுமையால் தாக்கப்பட்டவர்கள் உபயோகத்தில் மட்டுமே தென்படும் கிழிந்த பாய். அதில் அவ்வப்போது அசையும் ஒரு துணி மூட்டை.  துணி மூட்டையிலிருந்து வெளிப்படும் ஒரு கையும், அந்த விரல்களுக்கு ஊடே சன்னமான குரலும்.  அவ்வளவுதான் சேது அம்மாள்...



தன்னுடைய திறமையைக் கொண்டு சசிரேகா ஒரு கண்ணீர்க் கதையை எழுதினார்.  அது தினமணியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது.  முதலமைச்சர் ஜெயலலிதாவின் பார்வையில் பட்டது.  சேது அம்மாளுக்கு ஒரு பெருந்தொகை கொடுக்கப்பட்டது.



ஜெயலலிதா உதவியது சேது அம்மாளுக்குத்தான் என்றாலும் சசிரேகாவுக்கும் பலனிருந்தது.  முதல்வரின் கவனத்தை ஈர்த்தவர் என்ற வகையில் அலுவலகத்தில் மரியாதை கூடியது.

THE SRILANKAN TAMILS - WHAT IS TO BE DONE

Students are holding rallies in the streets of Tamilnadu. Chennai, Madurai, Kovai, and other cities have gone into the agitation mode against the Srilankan government and the Indian National Congress. College campuses are turning into venues for fasting. DMK has come out of the UPA fold. The Tamilnadu assembly has passed a resolution calling for a referendum on Tamil Eelam. Is it a replay of the 1965 anti-hindi agitation is the question that is being asked everywhere.

This situation remainds me of a story from the life of Buddha.

Once, Bhuddha was asked about the karma theory. The question was ‘Does one suffer because of his deeds in earlier births? Buddha maintained a stoic silence. Pestered again with the same question, He replied, “You are talking about the cause of the conflict; but I am busy offering succour to the affected”.

The Sri Lankan imbroglio involving the Tamils is much akin to the above. The political leaders in Tamil Nadu are hell-bent on punishing Rajapaksa for violation of  human rights. But the reality is that this sort of misplaced bravado will not a wee bit alleviate the suffering of the Tamils. The Tamils need all the help and support that can be given.

Eric Golsheim, the Norwegian peace negotiator, in an interview to the daily Afton Posten said, “It is clear

that there has been no respite for the sufferings of the Tamils even after the LTTE has been vanquished. If the Sri Lankan government does not immediately set in motion steps to bestow upon the Tamils their right to living , ethnic strife will again rise its head”.

Cho, Editor, Thuglak, the popular weekly from Tamil Nadu, says, “Adequate compensation to those affected by the LTTE – Sri Lankan government war, immediate logistical facilities for the displaced to return to their own places, ensuring equal status to Tamil, equal opportunities to the Tamils, in education and employment; installing a federal governance as in India, implementing the Rajiv- Jeyavadana accord are some of the activities that beg the immediate attention and concerted effort of the Sri Lankan government. “

Karunanidhi, the DMK leader said “It is my ardent desire to see the dawn of Tamil Eelam in my lifetime”. But in the TESO meeting held in Chennai, no one whimpered about Eelam. It is an open secret in Tamil Nadu that Karunanidhi and his associates were simply acting according to the compulsions of the alliance at the centre.

Karunanidhi’s stony silence during the killings of Mullivaykkal is too well known to credit him with any expectation. TESO created by Karunanidhi might perhaps get his son Stalin some publicity but certainly not any political solution to the struggling Sri Lankan Tamils.

“Give me half-an-hour to speak in the UN; I shall attain Eelam” claims Seeman, Leader, Nam Thamizhar Party. This is a call from a leader who has not contested any election so far.

Thol Thirumavalavan, Leader, Viduthalai Chiruththaikal Katchi, is moderate when he says, “Freedom struggles have never succeeded without the support of the world nations. So, let us garner their support”.

But all these have not helped to change the situation.

Politicians in Tamilnadu crying for Tamil Eelam want to raise their flaccid political fortunes. Sooner the Sri Lankan Tamils realize this, quicker will be their relief.

The most horrific violation of human rights has happened In Sri Lanka. The victims of this horrendous crime are our own brethren, who had migrated to erstwhile Ceylon. They still speak the same language, follow the same customs. It is puzzling why the Sri Lankan Tamils do not get what is their due.

The oral submissions made to “Lessons Learnt and Reconciliation Committee” committee set up by the Sri Lankan government point fingers squarely at the Sri Lankan army for the crime. Human right violations by the LTTE was also recorded by the same committee.

It is quite incomprehensible how Tamil Nadu has not fully grasped the fact that evidences of wrongdoing on 

the part of LTTE also have been recorded. It is even more pathetic that the rest of the country is quite oblivious of the ethnic cleansing that Sri Lanka is indulging in.

Let us recall that India and other 23 countries supported the resolution in the United Nations Human Right Council in March 22, 2011. Fifteen countries including China and Cuba opposed while eight abstained from voting. One must realize that only after incorporating the words, “in consultation with and with the concurrence of the government of Sri Lanka” could the resolution be passed.

It is quite evident that the political forces in Tamil Nadu are not capable and hence cannot create any support for the Sri Lankan Tamils in the comity of nations. It is equally clear that it is the people of India who can rise up to the occasion.

There is only one way out of this. The concerns of the people of Tamilnadu over this issue should be made into the concerns of the Indians as a whole. The entire country must understand the seriousness of the situation in Sri Lanka, the untold sufferings that the poor Tamils are put to.

It is India which will bring lasting peace in Sri Lanka and alleviate the sufferings of the Sri Lankan Tamils by getting them their right to living alongside the Sinhalese.


This must be explained to the people of India; it must be dealt in each and every language of the country. Public meetings must be organized in Jammu to Jamnagar; Surat to Bhubaneshvar; Delhi to Dornakal. People of Punjab, UP, MP, Odisha, Maharashtra, Gujarat must be apprised of the atrocity against the Tamils.
Conclaves must be convened in Cuttack, Kolkatta and Kochi.

Indian society must realize that what is happening to the Sri Lankan Tamils does affect India. Only then the Government of India will feel the enormity of the situation and act decisively. Geopolitical compulsions and generally accepted ethics of governance will prevent other countries from supporting the Sri Lankan
government. It is India’s strength that will stand the Sri Lankan Tamils in good stead. The Sri Lankan Tamils and the Tamil diaspora must realize this.

It must be remembered that it was the support that the Indians gave that resulted in the birth of Bangladesh It was the Jan Sangh which facilitated Bangladesh. When Sheik Mujubir Rahman won in the elections in East Pakistan, the democratic rights of the East Pakistanis were denied because of the adamantine attitude of Zulfikar Ali Bhutto, The then Prime Minister of the undivided Pakistan. The Pakistan army massacred the Bengalis. Lakhs from East Pakistan escaped to India as destitutes.

Jan Sangh, under the leadership of Atal Bihary Vajpayee, staged a massive demonstration for the “Freedom 
of Bangladesh”. A mammoth public meeting was organized at the Marina in Madras. In the final rally at Delhi, thousands courted arrest. Edward Kennedy, the prospective President of the USA, was amazed at
seeing the groundswell of participation.

Smitten by the support India gave to Bangladesh, Pakistan attacked India. Indian armed forces gave a stunning reply and defeated the Pakistan. Prime Minister Indira Gandhi’s determination helped in the birth of Bangladesh.

A similar situation has arisen now. India has the opportunity to show its strength yet again. The historic task of teaching a lesson to the Rajapaksa government and ensuring peace, justice and prosperity for the Tamils is awaiting the Bharatiya Janata Party.


Date Line:


3rd Century BC : Tamils from India migrate to Sri Lanka

1796 - 1948 : British rule in Sri Lanka

1830 : Tamils come to Sri Lanka as plantation labours

1944 : All India Ceylon Tamil Congress by G.G. Ponnambalam

1948 : Sri Lanka attains freedom

1948 : 10,00,000 plantation Tamils lose citizenship

1949 : Selvanayagam forms Federal Party

1956 : Prime Minister WRT Bandaranayaka makes Sinhala as the sole official

           language

1959 : Sirimao Bandaranayaka becomes Prime Minister

1961 : Sinhala as the official language in Tamil provinces

1964 : Shastri - Sirimao Bandaranayaka pact

1972 : New constitution

          Birth of TULF

1974 : Birth of TELO

          World Tamil Conference at Jaffna

          Police attack

1975 : Birth of EROS

1976 : Birth of LTTE

1976 : Call for Tamil Eelam

1977 : Prime Minister Jayavardane

          Riots against Tamils

1981 : Riots against Tamils. Jaffna library gutted

1981 : Birth of EPRLF

1983 : Riots against Tamils

1984 : Tamil militant groups get training in India

1985 : Clash among Tamil groups - Killings

1987 : Rajiv - Jayavardhane accord

          13th amendment

1987 : IPKF - LTTE war

1987 : Premadasa - LTTE negotiations

1989 : Amirthalingam killed by LTTE

1990 : EPRLF leader Padmanabha and twelve others killed by LTTE in Chennai

1990 : IPKF withdrawal from Sri Lanka

1991 : Rajiv Gandhi assassinated by the LTTE suicide bomber

2000 : Mediation by Norway

2002 : Prabakaran and Ranil Wikramasinghe sign accord

2004 : Karuna breaks away from LTTE

2005 : Mahinda Rajapaksa becomes President
2007 : War

ஆழ்வார்ப்பேட்டை கலைஞர்

சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை கொஞ்சம் வசதியான பகுதி. அங்கே எல்டாம்ச் ரோடு முனையில் இருந்தது குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ். அடையாரில் இருந்து நண்பர் சித்தார்த்தன் துணையோடு ஆழ்வார்ப்பேட்டை போனேன். காரணம் நான் அப்போது எழுதிக் கொண்டிருந்த அறிவியல் கதைக்குச் சில விவரங்கள் தேவைப்பட்டன. 
வெளிநாட்டுப் படப்பிடிப்புக் குழு ஒன்று தென்னிந்திய கிராமத்தில் நுழைகிறது. அவர்கள் பர்வையில் எதெல்லாம் தென்படும் என்பதை நான் கதையில்  விவிரிக்க வேண்டும். அதற்காகத்தான் அடையாரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை பயணம். 
குமாரசாமி ஆட்டோமொபைல்ஸ் காம்பவுண்ட் சுவரில் ஐந்து வாலிபர்கள். ஐந்து பேரும் திரைப்படக் கல்லூரி மாணவர்க்பள். சித்தார்த்தன் என்னை அறிமுகம் செய்தார். உயரமாக , கண்ணாடி அணிந்து ஒருக்களித்த கிராப்புடன் இருந்தவரை ஓரங்க்கட்டினேன்.
மற்றவர்களை விட்டு நாங்கள் நடக்கத் தொடங்குகிறோம். அவர் கவிதா ஓட்டல் செடிகொடிகளை ஆராய்ந்து கொண்டே வந்தார். நான் துவக்கத்திலிருந்து காமிராக் கலைஞன் வரை கதை சொல்லிக் கொண்டே வந்தேன். அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. 
“ முதலில் புழுதி தாங்க தெரியும். கிராமத்து எல்லையில் பசங்களைத் தாண்டும் வண்டி. அவர்கள் சத்தம் போட்டுக் கொண்டே கோவணம் பறக்கப் புழுதிக்கு நடுவே ஓடி வருவாங்க” எனக்கு சொல்கிறரா, தனக்குச் சொல்லிக் கொள்கிறரா ? என்று இனம் பிரிக்க முடியவில்லை. இந்த மூன்று வரியை சர்வ நிதானமாக ஏகப்பட்ட இடைவெளியோடு சொல்லி முடித்தபோது வைஜயந்திமாலா வீடு வலது புறம் திரும்பினோம். 
சற்று நேரம் மெளனம். ஏதாவது சொல்ல வரும் போது குறுக்கே பேசிவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக மெளனமாயிருந்து விட்டேன். அதற்கு அவசியமில்லை. அவர் வேறு  லோகத்திலிருந்தார். கவிதை எழுத முயலும் பாரதியார் போல் நண்பர் நடை. கழுத்தைச் சாய்த்திருந்தார். ஏதாவது போதை சாப்பிட்டிருப்பாரோ? தப்பு நம்முடையது. மனதில் வந்த்தை எழுத வேண்டியதுதானே. இவ்வளவு சிரமப்பட்டு விவரம் சேகரிக்க வேண்டியதில்லை.என்று யோசனை ஓடியது. நண்பருக்குப் பிரக்ஞை இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே பிளட்பாரத்து எருமை மீது மோதாமல் லாகவமாக ஒதுங்கிக் கொண்டார். மெளப்ரீஸ் ரோடு வந்தாயிற்று. நண்பர் உடல் தன்னிச்சையாகத் திரும்பியது. 
 துணிந்து ,” பசங்க ஓடி வராங்க. அப்புறம் ? “ என்றேன்.“ கிராமத்து ரோடு அதிரும் . காமிரா பார்வை குலுங்கும் . வளையும் . தெருவில் கோழி  டயருக்குத் தப்பும். , கதவிடுக்கில் இளம்பெண். திரும்பவும் கழுத்துச் சாய்ப்பு. எக்குத்தப்பான நடை. தனக்கு முன்னாலிருந்த வெற்றிட்த்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். சாலையில் விரையும் வாகனங்களின் சத்தம் என்னைக் கலைத்த்து. நமக்குப் பிரயோஜனம் இல்லை என்று விட்டு விட்டேன்.மீண்டும் குமாரசாமி குட்டிச்சுவர். அவர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டார்கள். “ அற்புதமான கதை “ என்றார் நண்பர். 
 கொஞ்ச நேரம் கழித்துப் புறப்பட்டோம் நானும் சித்தார்த்தனும். 5-ஆம் நம்பர் பஸ்ஸில் தொத்திக் கொண்டோம். ஓடுகின்ற பஸ்ஸிலிருந்து திரும்பிப் பர்த்தால் குட்டிச் சுவரில் அந்தக் காமிரா நண்பர் பி.சி. ஸ்ரீராமும் மற்றவர்களும். 



ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கான வழி

பகவான் புத்தர் வாழ்ந்த காலத்தில் ‘ கர்மவினை ‘ பற்றி அவரிடம் பலமுறை கேட்கப்பட்டது. மனிதர்களின் துன்பங்களுக்கு அவர்களுடைய முற்பிறவிச் செயல்தானே காரணம் என்றும் கேட்கப்பட்டது. பலமுறை அவர் பதில் சொல்வதைத் தவிர்த்தார்.முடிவாக ஒரு நாள் “ நீங்கள் எய்தப்பட்ட அம்பு எங்கிருந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்கிறீர்கள்; நான் அடிபட்ட பறவைக்கு  நிவாரணமும் நிம்மதியும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்”.என்றார்.அவர்.  
 
ஈழத்தமிழர் பிரச்சினையும் கிட்டத்தட்ட இதே நிலைமையில்தான் இருக்கிறது. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவை ,  இனப் படுகொலைக்காகவும் , மனித உரிமை மீறலுக்காகவும்  தண்டிக்க வேண்டும் என்று தமிழகத்தின்  சில அரசியல் தலைவர்கள் முனைப்பாக இருக்கிறார்கள் . இவர்களிடம் அம்பைப் பற்றிய ஆராய்ச்சி இருக்கிறது. இவர்களுடைய சூரத்தனத்தால் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கப் போவதில்லை என்பதுதான் யதார்த்தம். 

இலங்கையில் நடந்த போரைத் தடுப்பதற்காகப் பாடுபட்டவர் நார்வேயைச் சேர்ந்த முன்னாள் அமைதித் தூதர் எரிக் கோல்ஷீம். ஆஃப்டன் போஸ்டன்  என்ற இதழுக்குக் கொடுத்த பேட்டியில் அவர் ,” விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பிறகும் தமிழர் பிரச்சினை தீர்க்கப் படவில்லை. தமிழர்களுக்கு நியாயமான முறையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் .இலங்கை அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிடில் அங்கே இன மோதல்  மீண்டும் வெடிக்கும் “ என்று கூறியுள்ளார். 

துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ,” அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு : குடி பெயர்ந்தவர்கள் மீண்டும் தங்கள்  சொந்த இடங்களுக்குப் போய்ச்சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள்; தமிழ் மொழிக்கு சிங்கள் மொழிக்குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை , சிங்களவர்களுக்குச் சமமாகத்  தமிழர்களுக்கு உரிமைகள் ; இந்தியாவில் உள்ளதுபோல் சமஷ்டி அரசியல் அமைப்பு ; ராஜிவ்- ஜெயவர்தன ஒப்பந்தம் அமல் படுத்துவது .... போன்றவற்றை இலங்கை அரசு முனைந்து செய்து முடிக்க வேண்டும்”  என்கிறார். 
கட்சிக்காரர்கள்  முன்னிலையில்  பொதுக்கூட்ட மேடையில் “ என் வாழ்நாளிலேயே தமிழீழத்தைக் காண வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை “ என்று கூறினார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், அவரைச் சார்ந்தவர்கள் நடத்திய டெசோ மாநாட்டில் தமிழீழம் குறித்த ஓசை எழுப்பப்படவில்லை. மத்திய அரசின் நிர்பந்தத்திற்குப் பணிந்து கருணாநிதியும் அவரைச் சார்ந்தவர்க்ளும் நடப்பதாகத் தமிழகத்தில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 

“ஐ. நா. சபைக்குள் என்னை அரை மணி நேரம் பேச விடுங்கள். நான் தமிழீழத்தை அடைந்து விடுவேன் “ என்கிறார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். 
“ உலக நாடுகள் ஆதரவு இல்லாமல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றி பெற்றதில்லை . எனவே உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவோம்” என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். 
 இந்த நூற்றாண்டின் மிகக் கொடுமையான மனித உரிமை மீறல் இந்தியாவிற்கு வெகு அருகிலே நடந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் நம்முடைய சொந்த பந்தங்கள் என்ற போதிலும் , ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்காதது ஏன் என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது. 

இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ‘ கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு’ முன்பாக மக்கள் அளித்த சாட்சியங்கள் , இலங்கை ராணுவத்திற்கு எதிராக இருக்கின்றன. விடுதலைப் புலிகளைக் குற்றம் சாட்டியும்  சாட்சியங்கள் பதிவு செய்யப் பட்டன. என்பது கூட தமிழ்நாட்டில் முழுமையாக உணரப்படவில்லை. இந்தியாவின் மற்ற பகுதிகளில் இந்தச் சேதி எட்டவே இல்லை.இது ஏன் என்ற கேள்வி நம்மை வதைக்கிறது.

சீமானை விட்டு விடுவோம். அவருடைய கருத்தில் சீரியசாக எதுவும் இல்லை. திமுக தலைமையும் , வி. சி. கட்சித் தலைமையும் , முதலில் வெளிநாடுகளுக்குப் பயணப்பட்டு , இப்போது தில்லியில் உள்ள அயல் நாட்டுத் தூதரகங்களின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வருடம் மார்ச் 22-ம் தேதியன்று, ஐ நா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 24 நாடுகள் ஆதரவு அளித்தன; சீனா, க்யூபா உட்பட்ட  15 நாடுகள் எதிர்த்தன; 8 நாடுகள் வாக்களிக்கவில்லை என்பதை  இந்த நேரத்தில் நினைவு கூர வேண்டும். 

தீர்மான வாசகத்தில், “ in consultation with and with the concurrence of the government of Sri Lanka”என்று  மாற்றம் செய்யப்பட்ட பிறகே  அதை நிறைவேற்ற முடிந்தது என்பது முக்கியமான விஷயம். ராஜபக்சேவை குற்ற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் , அவரைத் தண்டிக்க வேண்டும் என்ற முழக்கங்களோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும். தழ்நாட்டு அரசியல் சக்திகளால் உலக அரங்கில் ஈழத் தமிழருக்கு ஆதரவான கருத்தை உருவாக்க முடியாது. அம்மையப்பனைச் சுற்றாமல் அகில உலகத்தையும் சுற்றி வருவது வெற்றியைத் தராது. இந்தக் களத்தில் இந்திய மக்கள்தாம் அம்மையப்பன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

ஈழத் தமிழருக்கு நிவாரணமும் வாழ்வுரிமையும் பெற்றூத் தரப் போவது இந்த்ய நாடுதான். கருணாநிதியால் இது கை கூடாது. முள்ளிவாய்க்கால் போரின்போது மெளனம் காத்தவர் அவர். அவரும் , அவருடைய டெசோ அமைப்பும் ஸ்டாலினை முன்னிறுத்தி செய்கின்ற முயற்சிகளெல்லாம் ஸ்டாலினுக்கு பப்ளிசிடியைப் பெற்றுத்தருமேயன்றி , பாதிக்கப்பட்டவர்களுக்கு  அதனால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது.
இன்று  நம் முன் உள்ள தீர்வு ஒன்றுதான் : தமிழர் கவலையை இந்தியக் கவலையாக மாற்ற வேண்டும் . இந்திய மக்களிடையே அனைத்து மொழிகளிலும் ஈழத்தமிழர் படும் பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டும் ஓங்கோலிலும், ஒரிஸ்ஸாவிலும் , பரோடாவிலும் , பஞ்சாபிலும் , அஸ்ஸாமிலும், பீஹாரிலும் பொதுக் கூட்டங்களும், கருத்தரங்குகளும் நட்த்த வேண்டும். 

நம்முடைய சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற உணர்வு இந்தியாவெங்கும் ஏற்பட்டால், இந்திய அரசு தானாக நடவடிக்கை எடுக்கும். புவிசார் அரசியல் நெறிப்படி இலங்கை அரசுக்கு ஆதரவாக  எந்த நாடும் செயல்பட முடியாது  இந்தியாவின் வல்லமையே ஈழத்தமிழருக்கு பக்க பலமாக இருக்கும், இலங்கை அரசுக்கு எதிராக இருக்கும். இதை ஈழத் தமிழர்கள் உணர வேண்டும். 

தமிழ்நாட்டு அரசியலில் தலை தூக்க முடியாதவர்கள் லண்டன் நகரிலும், ஐரோப்பாவிலும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஆற்றும் வீர உரையால் ,  எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பது ஈழத்தமிழர்களால் எவ்வளவு  விரைவில்  உணரப் படுகிறதோ அவ்வளவு விரைவில் தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். 
 வங்க தேசத்தின் விடுதலைக்கு இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சிதான் காரணம் என்பதையும் , அதை உண்டாக்கியது ஜன சங்கம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும் கிழக்கு பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றார் அவாமி லீக் கட்சியின் தலைவர் ஷேக் முஜுபிர் ரஹ்மான். ஆனால், பாகிஸ்தான் அரசின் ஆட்சியில் இருந்த ஜுல்ஃபிகர் புட்டோவின் பிடிவாதத்தால் , கிழக்கு வங்காளத்து மக்களுக்கு ஜனநாயக  உரிமைகள் மறுக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவம் அங்கே ஒரு படுகொலையை நடத்தியது. இலட்சக் கணக்கானவர்கள் அகதிகளாக  இந்தியாவில் குடியேறினர்.
அடல் பிஹாரி வாஜ்பாயியின் தலைமையில் “ வங்க தேசம் விடுதலை பெற வேண்டும் “என்ற போராட்டம் ஜனசங்கத்தால் நடத்தப் பட்டது. சென்னை கடற்கரையில் சீரணி அரங்கத்தில் மாபெரும் பொதுக் கூட்டம் நடத்தப் பட்டது. இறுதியாக தில்லியில் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்க்விலிருந்து வந்த எட்வர்ட் கென்னடி இந்தக் காட்சியைக் கண்டு அதிசயித்துப் போனார். 
வங்க தேசத்திற்கு இந்தியா கொடுத்த  ஆத்ரவைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் நம் மீது படையெடுத்தது.  இதைத் தொடர்ந்து பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால்  விடுதலை பெற்ற வங்க தேசம் உருவானது.
ஈழத் தமிழருக்கு வாழ்வு தர முடியும் என்ற வாய்ப்பு இப்போது தமிழகத்து பாஜகவின் முன் நிற்கிறது.  முதலில் அகில இந்தியத் த்லைமையிடம் இது குறித்து வற்புறுத்த வேண்டும். பிறகு அனைத்து மாநிலத் தலைமைகளையும் இதில் இணைத்துக் கொள்ள வேண்டும்.இலங்கை அரசைப் பணியச் செய்து , ஈழத் தமிழருக்கு  வாழ்வு கிடைக்க வழி செய்திட வேண்டும் 

சீமானால் சிந்திக்க முடியாததை , கருணாநிதியால் சாதிக்க முடியாத்தை,  வைகோவால் நடைமுறைப்படுத்த முடியாத்தை,  , மார்க்ஸிஸ்டுகளல் செயல் படுத்த முடியாததை , ஜெயலலிதாவின் ஆற்றலுக்கு  அப்பாற்பட்டதை , சோனியா காந்தி செய்ய விரும்பாததை பாஜகவால் செய்ய முடியும்.இதற்கான  முனைப்பை தமிழக பாஜக ஏற்படுத்த வேண்டும் என்பது என்ன்னுடைய பணிவான வேண்டுகோள்.வரலாற்றுப் பணி நம் வாசலில் காத்திருக்கிறது

சில குறிப்புகள் :
1830       --  மலையகத்தில் தொழிலாளர்களாகத்  தமிழர்கள் குடியேற்றம்
1944       -- அகில இந்திய இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி.
                               / ஜி ஜி பொன்னம்பலம்
1948       -- குடியுரிமைச் சட்டம் – 10,00,000 மக்கள் நாடற்றவரானார்
1948       -- இலங்கைத் தமிழீழக் கட்சி உதயம்
1956       -- பண்டாரநாயகா பிரதமர் – சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி
1961       -- சிறிமாவோ பண்டாரநாயக – பிரதமர் – தமிழ்ப் பகுதிகளிலும்
                                               சிங்களமே ஆட்சி மொழி
1964      -- சிறிமாவோ- சாஸ்திரி ஒப்பந்தம்
1965      -- டட்லி சேனநாயகா – பிரதமர் தமிழரசுக் கட்சி,தமிழ்க் கங்கிரஸ் கட்சி
                                   ஆதரவு.
1972      -- புதிய அரசியலமைப்புச் சட்டம்
1974      -- யாழ்ப்பாணம் – உலகத் தமிழாராய்ச்சி மாநாடு – போலிஸ் வன்முறை
1977      -- ஜெயவர்தனா பிரதமர் – இனக் கலவரம்
1981      -- இனக் கலவரம்
1983      -- இனக் கலவரம்
1983      -- இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு
1984      -- இலங்கைப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி
1985      -- சகோதர யுத்தம் / விடுதலைப் புலிகளின் வளர்ச்சி
1987      -- ராஜிவ் காந்தி – ஜெயவர்தனா உடன்பாடு – 13 வது அரசியலமைப்புத்
                                                        திருத்தம்
1987      -- இந்திய அமைதிப் படை
1991      -- ராஜிவ் காந்தி கொலை
2000     -- நார்வே தலையீடு – போர் நிறுத்த உடன்பாடு
2008     -- இறுதிப் போர். 

ராதிகா ரைத்தா

என்னடா இது என்று நீங்கள் யோசிக்கக்கூடும் என்பதால்  முதலிலேயே சொல்லி விடுகிறேன். ‘ரைத்தா’ என்பது ஒரு உணவுப் பொருள் : தயிர்ப் பச்சடியின்  வட நாட்டு  வடிவம். ராதிகா? என்னுடைய அன்புக்குரிய உறவினர்  ஸ்ரீரங்கம் விச்வநாதனின் அன்புக்குரிய மனைவி. என்னுடைய மருமகள் என்று சொன்னால் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விடும். அதனால் மகள் என்றே சொல்கிறேன்.

கடந்த வாரத்தின் இறுதி நாட்களை அவர்கள் வீட்டில் செலவிட்டேன். தமிழ்நாடு வாசகர் வட்டத்தின் திருச்சி மாவட்ட கிளை துவக்க விழா, டிசம்பர் 16, 2012 அன்று நடை பெற்றது. அதைப் பற்றிய விவரங்களை இங்கே எழுதி உங்களைச் சோதிப்பதாக இல்லை. இது ரைத்தா பற்றித்தான். கொஞ்சம் ராதிகாவைப் பற்றியும். 

“ நீ விஜயகாந்த் மாதிரி இருக்கேம்மா” என்று சொல்வேன், பதிலுக்கு அந்தப் பெண் கண்களை அகல விரித்து, விழிகள் வெளியே விழுந்து விடுமோ என்ற அளவுக்கு ஆச்சரியப்படும். பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதை உணர்த்த , முகத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு மாறாத புன்னகை இருக்கும். 

“ பருமனான உடலை வைத்துக் கொண்டிருக்கும் விஜயகாந்த், சண்டைக் காட்சிகளில் செய்வதை ஒல்லி நடிகர்கள்கூடச் செய்ய முடியாது. மேலே எகிறி, ஒரு காலை சுவற்றில் பதித்துக் கொண்டு, இன்னொரு காலால் எதிரியை உதைப்பார்.  சில விசேஷமான காட்சிகளில் எதிரிகளை உதைப்பார். அதற்கக , நீ யாரையும் உதைக்க வேண்டாம் ; கொஞ்சம் தாட்டியான உடலை வைத்துக் கொண்டு சுறுசுறுப்பாக நடமாடுகிறாயே , அதைச் சொல்கிறேன் “என்று நான் விவரித்தவுடன் அவளுடைய கண்கள் யதாஸ்தானத்துக்கு வந்து விடும். புன்னகை? அது அப்படியேதான் இருக்கும். 

ராதிகாவைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாயே , ரைத்தா எப்போது வரும்  என்று கேட்பவர்கள் சமீப கால தமிழ் உரைநடையின் நான் லீனியர் படைப்புகளையும் , மேஜிகல் ரியலிஸத்தையும் அறிந்திருக்கிற மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒரு உத்தரவாதத்தை மட்டும் கொடுக்கிறேன். நிச்சயமாக ரைத்தா உண்டு.
ஏகப்பட்ட புத்தகங்களோடும் , ஏராளமான அழுக்குத் துணிகளோடும் ராதிகா கொடுத்த மஞ்சள் பையோடும் திருச்சி ஜங்க்ஷனில் வைகை எக்ஸ்பிரஸ்ஸில் ஏறினேன்.

லெமன் சேவையயும் , தயிர் சேவையையும் , வீட்டில் சாப்பிட்டுவிட்டுத்தான் புறப்பட்டேன். சோறு செரிப்பதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறார்கள். வைகை எக்ஸ்பிரஸ் இருக்கிற லக்ஷணத்தில் நம்முடைய கையை கொஞ்சம் அசைத்தால் அடுத்தவர் கக்கத்தில் சிக்கிக் கொள்கிறது. எனவே, உடற்பயிற்சி ரூல்ட் அவுட். அடுத்தது, நமக்குப் பிடித்தது.  கை கால் அசையாமல் , கலோரிகளை செலவழிப்பது – புத்தகம் படிப்பது. மூன்று மணி நேர முயற்சியில் வெற்றியூர் அரு . சுந்தரம் எழுதிய “நகரத்தார் பெருமை” யை உள் வாங்கிக் கொண்டேன்.

புத்தகத்தை முடிக்கவும் , பசி எடுக்கவும் சரியாக இருந்தது. மஞ்சள் பையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு , முன் சீட்டில் இணைக்கப் பட்டிருந்த சாப்பாட்டு மேசையை விரித்தேன். அது மேலும் கீழுமாகக் குதித்தது. காரணம், முன் சீட்டில் இருந்த சேட் குடும்பம். சேட்டின் பெண் குழந்தை சீட்டில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தது. எந்த நேரமும் உணவு எகிறி விடலாம் என்ற நிலையில் சேட்டிடம் பேசினேன். நண்பர்கள் நகைக்க வேண்டாம்: இங்கிலீஷில்தான் பேசினேன்.
ராதிகாவை தே மு தி க தலைவரோடு ஒப்பிட்டது சரிதான். இந்த டிஃபன் கேரியரைத் திறப்பதற்கு கேப்டனைத்தான் கூப்பிட வேண்டும். அதுவும் அவர் ஸ்டெடியாக இருக்கும்போது. 

பக்கத்து சீட்டு  இளைஞர் நான் கேட்காமலேயே உதவினார். இந்த முறை டிஃபன் கேரியரும் ஒத்துழைத்தது. இதற்குள் சேட் இடம் மாறி உட்கார்ந்தார். என்னுடைய உணவுக்கு வந்த கண்டம் தப்பியது.
ஒரு கிண்ணத்தில் பட்டாணி சாதம், குட்டி டப்பாவில் தக்காளி சாஸ். நல்லெண்ணத்தோடு தயாரிக்கப்பட்டதென்றாலும் , ருசி நன்றாகத்தான் இருந்ததென்றாலும், ஒவ்வொரு கவளமும் தொண்டை என்ற இடத்திற்கு வந்து சற்று இளைப்பாறி விட்டு அப்புறம்தான் கீழே இறங்கியது.
அடுத்தது, தயிர் சாதம். அதற்குத் தனியாக ஒரு டப்பாவில் ஊறுகாய். தயிர் சாதமும், கெட்டியாகத்தான் இருந்தது என்பதை நான் சொல்லாமலேயே நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள்.

சாப்பிட்டு முடித்து கடையைக் கட்டும்போதுதான் கவனித்தேன். மஞ்சள் பையில் ஒரு சீசா மிச்சமிருந்தது. அந்ட சீசாவில் இருந்தது வெங்காய ரைத்தா பட்டாணி சாதத்திற்கு ரைத்தாவைத் தொட்டுக் கொள்ள வேண்டுமென்று , அந்தப் பெண் சொன்ன அறிவுரை இப்போது ஞாபகத்திற்கு வந்தது. ஓர் ஆய்வு மனப்பான்மையோடு மதிய உணவை பகுதி பகுதியாகச் சாப்பிட்டது என்னுடைய தவறுதான் .
ரைத்தாவுக்கென்று ஒரு குட்டி ஸ்பூனும் இருந்தது. ஸ்பூனில் ரைத்தாவை எடுத்து நான் சுவைத்துக் கொண்டிருந்த போது , பக்கத்து சீட்டு வாலிபர் பார்த்த பார்வையில் ஆச்சரியமில்லை, அருவருப்பு இல்லை. அனுதாபம் தான் இருந்தது ...

சென்னை வந்தவுடன், முதல் வேலையாக மனைவியிடம், “இரவு சப்பாத்திக்கு  ரைத்தா செய்து விடு”என்று சொன்னேன். “வெள்ளரிக்காய்  ரைத்தாவா, வெண்டைக்காய் ரைத்தாவா; கத்திரிக்காய் ரைத்தாவா, பூந்தி ரைத்தாவா” என்று அவள் அடுக்கிக் கொண்டே போனாள்.“ ராதிகா ரைத்தா பண்ணிடும்மா “ என்றேன்.அவளுக்குப் புரியவில்லை, உங்களுக்குப் புரிந்திருக்கும் ..

அமானுஷ்யம்

ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்

பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

முகுந்தா முகுந்தா - கமல் இல்லை



முகுந்தா 2 : வீட்டில் தொலைபேசி ஒலித்தது.முகுந்தா
எடுத்தான். யாரோ ஒருவர் தவறான நம்பரை டயல்
செய்துவிட்டு படபட என்று பேசினார்.`சுந்தரம் பினான்ஸ் தானே.
நீங்கள் எப்படி செக்கை கிராஸ் செய்யாமல் அனுப்பலாம்?
ரிசர்வ் பேங்க் ரேகுலஷன் படி இது தப்பு` என்று இடைவெளி
இல்லாமல் பேசிக் கொண்டே போனார்.

மொத்தத்தையும் கேட்ட முகுந்தா `சார், கொஞ்சம் முன்ன பின்ன
இருந்தா நாம அட்ஜஸ் பண்ணிக்கறது நல்லது.சின்ன விஷயங்களைப்
பெரி
சு பண்ணக் கூடாது` என்கிற ரீதியில் சமாதானம்
செய்தான்.

ஒரு கட்டத்தில் அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.
`நீங்க என்ன சொல்றீங்க , அது சுந்தரம் பினான்ஸ் இல்லையா?`
என்று குரலை உயர்த்தினார். முகுந்தா இதற்காகத்தான்
காத்திருந்தது போல ` சார். இது எங்க வீடு.ஆனா யோசிச்சுப்
பாருங்க.நா சொன்னது வாழ்கையில உங்களுக்குப் பயன்படும்`
என்றான்.அந்தப் பக்கத்தில் இருந்து என்ன சொல்லப்பட்டது
என்று எனக்குத் தெரியாது.முகுந்தாவின் காதில் இருந்து
புகை வந்ததைப் பார்த்தேன்.

பாலகுமாரன்






நான்   அதிகமாக கதைகள் படித்ததில்லை . தமிழன் எக்ஸ்ப்ரெசில் இருந்தபோது பாலகுமாரனின்
`கண்மணித் தாமரையை `படிக்க வேண்டும் என்று ஆசிரியர் சிவா  கூறினார் .புத்தகத்தை
எடுத்துக்கொண்டு ரயில்  ஏறி விட்டேன் அப்போது எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள் .
அது பற்றிய கருத்தை  கடிதமாக எழுதி அனுப்பினேன் .தபால் போய் சேரவில்லை .அதற்குள்
சிவா அவசரப்பட்டு பாலகுமாரனிடம் சொல்லிவிட்டான் .பாலகுமாரன் விசாகப்பட்டினத்திற்கு
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் .அதை மீண்டும் எழுதி அனுப்பச் சொன்னார் .அனுப்பினேன்.
பிறகு  தினமணிக்கு மாற்றலாகி விட்டேன்...
பல வருடங்களுக்குப் பிறகு நண்பர் உமாமகேஷ் என்னுடைய கடிதத்தோடு வெளிவந்துள்ள `கண்மணித்
தாமரையைக் `கொண்டு வந்து கொடுத்தார் .இது உபகதை

பாரதியாரும் கணேஷ் மெஸ்ஸும்


அன்புள்ள  பத்மா,

பிறந்த நாளுக்கு என்று தம்பி வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டேன். இதைத் தவிர தினமணி சக ஊழியர் கொடுத்த சட்டையும்  இருக்கிறது.

இந்த ஐம்பூத சட்டைக்குள் நான் குடி புகுந்து 51 வருடங்கள் கடந்து விட்டன. எண் கணிதப்படி இது நல்ல வருடம் என்று நிபுணர் ஒருவர் சொல்கிறார்; பார்ப்போம். அடுத்த முறையும் ஐம்பூதச் சட்டையை அணியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளில் கொஞ்சம் தீவிரம் காட்ட வேண்டும்.

அதற்கு முன் பசியாற வேண்டும்; இன்றைய பிக்ஷை கணேஷ் மெஸ்ஸில். கணேஷ் மெஸ்ஸுக்குப் போகாமல் ஜென்மம் கடைத்தேறாது என்று தினமணி அலுவலக அன்பர்கள் தினமும் ஓதுகிறார்கள். இந்த இரண்டு மாத காலத்தில் என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி 'கணேஷ் மெஸ்ஸில் சாப்பிடுகிறீர்களா?' என்பதுதான்.

‘விட்டுச் சாப்பாடு போல இருக்கும்’ என்று சிபாரிசு செய்தார்கள். அது வாஸ்தவம்தான். நம் வீட்டில் செய்வதைப் போலவே ஏதோவொரு தக்காளிக் காய்க்கூட்டை விடாப்பிடியாய்ப் பரிமாறுகிறார்கள். சிவபெருமானோடு வந்த குண்டோதரனுக்கே சோறு போட்டவர்கள் இந்த ஊர்க்காரர்கள். அதிகம் பேச முடியாது. நாம் சாப்பிடுகிறோமா, மடியில் கட்டிக்கொள்கிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அராஜகமான விருந்தோம்பல்.

சர்வர் வீட்டு மனுஷாளைப் போலவே சட்டைப் பொத்தானைப் போடாமல் கிட்டே வந்து பேசுகிறார். இதுவரை கேள்விப்பட்டதுதான். இங்கே அக்குள் வாடை அனுபூதி ஆகிவிட்டது.

சாப்பிட்டது செரிப்பதற்காகக் கொஞ்சம் நடக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி நடந்து வலது பக்கமாகத் திரும்பினால் சேதுபதி உயர்நிலைப் பள்ளி. பாரதியார் இங்கே ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். சொற்ப காலம்தான். பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகச் சேர்ந்து உலகத்தைச் சீர் செய்யத் தொடங்கிவிட்டார்.

மதுரையில் ஆசிரியராகச் இருந்த போது, என்னைப் போலவே கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருந்தாரா அல்லது செல்லம்மாளைக்  கையோடு அழைத்து வந்து விட்டாரா என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு கணேஷ் மெஸ் அனுபவப்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

பின்னொரு சமயம் மதுரையில் வற்றல் குழம்பு சாப்பிட்டதாகப் பாரதியார்  வாழ்க்கையில் குறிப்பு இருக்கிறது. அது கணேஷ் மெஸ்ஸா என்பது பற்றி கூட யாராவது கட்டுரை எழுதி முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.

ஆட்டுக் குட்டியை மாமிசம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். பிரம்மராய அய்யர் என்ற வாத்தியாரை மாமிசம் தின்னும்படி செய்ய முடியாது என்று ஒரு ஹாஸ்யக் கட்டுரையில் (பெண்) எழுதுகிறார் பாரதியார். இந்த விபரீத யோசனைக்கும் மதுரைச் சாப்பாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

நாம் மீண்டும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கலாமா?

சென்னை காசினோ தியேட்டரில் எதிர்வீட்டுப்  பையனோடு பார்த்தது Grand Slam. எதிர்வீட்டுப் பையனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்த தகவல் வந்தது. அதைக் கொண்டாட, சினிமாவுக்குப் புறப்பட்டான். மரியாதைக்கு 'வர்றியாடா?' என்று கேட்டான். அவன் மனம் மாறுவதற்குள் நான் தயாராகிவிட்டேன்.

13 வருடங்கள் திட்டமிட்டு, 13 மணிநேரம் செயல்பட்டு, 13 விநாடிகளில் பறி கொடுத்தது பற்றிய கதை அது. கோடிக்கணக்கில் மதிப்புடைய வைரங்களைக் கொள்ளையடிக்கும் கதை. அது இருப்பது பாரிஸ் நகரத்து வங்கியின் பெட்டகத்தில். அதன் மீது ஆசைப்படுகிறான் கிழவன் ஒருவன்; ஒத்தாசைக்கு மகள். மகள், அந்த வங்கியில் வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் முன்னேற்பாடுகளைச் செய்கிறாள். பிறகு அப்பனும் மகளுமாய் ஒரு நல்ல முகூர்த்தத்தில் வைரங்களோடு அம்பேல் ஜூட். இத்தாலிக்குப் போகிறார்கள். நடைபாதை ஓட்டலில் நிம்மதியாம டீ சாப்பிடுகிறார்கள்.  மேசை மீது வைரங்கள் உள்ள கைப்பை. சைக்கிளில் வேகமாக வரும் ஒருவன் பையோடு எஸ்கேப் ஆகிறான். மகள் போடும் சத்தத்தில் கூட்டம் கூடுகிறது. 'ரொம்ப நஷ்டமா?' என்று கேட்கிறார் ஒருவர். அவள் சொன்ன பதில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; தியேட்டரில் தமிழ்ப் பெருமக்கள் எழுந்து நின்று விட்டார்கள்.

Chennaionline / subbu

(மதுரைப் பதிவு-7)

நவம்பர் 23, 2001


அடுத்த முறையும் ஆங்கிலப் படங்கள்தான்.

அன்புடன்,

சுப்பு

சிட்டி

 நடந்தாய் வாழி சிட்டி 

Chennaionline / subbu

(சுப்புவின் வயது அறுபது. அதில் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவின் கடற்கரைகளில் காலாற நடந்திருக்கிறார். கவிதைகள், கட்டுரைகள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பலவிதமாகப் பயணித்துள்ளவர் சுப்பு. மூத்த பத்திரிகையாளரான இவர் எழுதிய 'அருணகிரிநாதர்' என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தைக் காரசாரமாக விமர்சனம் செய்யும் ‘போகப் போகத் தெரியும்' என்ற இவருடைய தொடர், http://www.tamilhindu.com/author/subu/ என்ற இணைய இதழில் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.)
============================================
கே: 94 வருடங்களாக வாழ்ந்திருக்கின்றீர்கள். அதில் 80 வருடங்களாகத் தமிழ் மொழியோடு இலக்கியப் பூர்வமாகத் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை திருப்தியாக உள்ளதா? தமிழின் இன்றைய இலக்கியச் சூழல் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?

ப: ஐம்பது வருடங்களுகு முன்னால் தமிழின் வளர்ச்சி கதை, கவிதை, கட்டுரை என்று சிறப்பாக இருந்தது. அப்போது மணிக்கொடி மூலம் புதிய வடிவில் படைப்புகள் வெளிவந்தன. பாரதியின் தாக்கம் இருந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் சரிவுதான். மீண்டும் 1975 / 80இல் புதிய திருப்பம் ஏற்பட்டது. புதிய எழுத்தாளர்கள் நிறைய அளவில் தோன்றிய காலம் அது. இப்போதைய எழுத்தைப் பார்க்கும்போது இலக்கியம் குறித்த நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தியாகத்தான் இருக்கிறேன். இளம் பிராயத்தில் ஆங்கில எழுத்தாளர்களைப் படிக்கும்போது அது போலத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வரும். சர்க்கசில் வீரர்களுக்கு இடையே பபூன் வருவது போலவே என்னுடைய முயற்சி. நான் என்னை எப்போதுமே சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை.
சிட்டி  என்று அறியப்பட்ட பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது (22.8.2004).

இடுப்பெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து அவர் வெளிவந்த நேரம் அது. இலக்கிய ஜீவியான சிட்டிக்கு இரவு நேரங்களில் அறிவாற்றல் அதிகமாக வெளிப்படும். அந்த நேரத்தில் அவரோடு இருப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. சுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காராபூந்தி, நாடா பகோடா என்று நிரப்பப்பட்ட தட்டு எதிரில் இருக்க, மதுரை மணியின் ஸ்வரக் கோர்வை மறைவாக ஒலிக்க, பயாஸ்கோப்பில்  தொடங்கி, பத்திரிகையாளர் சாகசம் வரை பேசும் சிட்டியின் முடிவுரை என்னவோ பரமாச்சாரியார் சந்திப்பில்தான்.

சிட்டியுடைய நினைவாற்றல் மிரட்டக் கூடியது. சைமன் கமிஷனைப் பற்றிச் சொல்லும்போது, தடியடி விழாமல் நாம் தள்ளியிருக்க வேண்டும். காமராஜரைப் பற்றிப் பேசும்போது நமக்கே கொஞ்சம் சாமீபம் வந்துவிடும்.

பத்திரிகையாளர் என்ற முறையில் அடிக்குறிப்புகளும் ஆதாரங்களும் அவருக்கு மிகவும் அவசியம். “இதைப் பற்றிய குறிப்பு 1970இல் தினமணி கதிரில் வந்திருக்கிறது” என்று சொல்லி நிறுத்துவார். அங்கேதான் ஆபத்து ஆரம்பம்.

ஊளையிடும் நாய்கூட ஓய்வெடுக்கும், அந்த வேளையில், தினமணிக் கதிரைத்  தேடவேண்டும். பெரும்பாலும் விசு அண்ணாதான் மாட்டுவார்; சில சமயங்களில் நான். சிட்டியுடைய ஜீவன் எங்கே இருக்கிறது என்பது சிலருக்குத்தான் தெரியும். அது அட்டைப்  பெட்டியில் இருந்தது. அட்டைப் பெட்டி எங்கே இருந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சென்னை பெசன்ட் நகரின் ஒதுக்குப்புறத்தில் வண்ணாந்துறை என்ற சந்து; சிட்டியின் வீடு அதன் கிளைச் சந்தில் இருந்தது. மாடியில் இருந்த சிறிய வீட்டில் சிட்டியின் அறை; படுக்கை போக மீதி இடத்தில் டேபிள் ஃபேன் சிற்றுண்டிக்காக ஒரு முக்காலி, விருந்தினருக்காக ஒரு நாற்காலி, தவிர படுக்கைக்குக் கீழே, ஜன்னலை மறைத்துக்கொண்டு, என்று நீக்கமற நிறைந்திருக்கும் அட்டைப் பெட்டிகள்.

அட்டைப் பெட்டிகளில் பாலிதீன் பைகள், பாலிதின் பைகளில் பத்திரிகைச் செய்திகளும் கட்டுரைகளும்.

கண்ணிகளை அகற்றும் போர் வீரனைப் போல அட்டைப் பெட்டிகளைக் கையாண்டு, பாலிதீன் கவர்களை எடுத்து, அலசி, அடுக்கு மாறாமல் ஆராய்ந்து, தும்மலை வரவழைத்துக்கொண்டு, முதுகுப் பிடிப்பை அலட்சியம் செய்து, கொஞ்சம் பாத்ரூம் போய் விட்டு வந்து மிகவும் பிரயாசைப்பட்டாலும் பரவாயில்லை. அந்தத் தினமணிக் கதிர் கிடைக்கும் போது அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதற்காக இன்னோர் இரவில் கண்விழித்து அட்டைப் பெட்டிகளோடு மல்லுக் கட்டலாம்.

தன்னைக் ‘கோமாளி’ என்று அவர் குறிப்பிடுவது  தன்னடக்கத்தின் காரணமாக! மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார். அந்தப் பயணத்தில் அவரோடு சில நாள்களில் (அதாவது இரவுகளில்) நடந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது.

===============================
* புதுகைத் தென்றல் / ஜூலை - 2009
 நடந்தாய் வாழி சிட்டி

மறுபடியும் மதுரை


Chennaionline / subbu

அக்டோபர் 2001

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

காலையில் தியானம் செய்வதற்கு முன் மீனாட்சி படத்துக்கு அருகே தசாங்கம் ஏற்றலாம் என்று ஒரு யோசனை. காதி பவனில் இருந்து வாங்கி வந்த பாக்கெட்டைப் பிரித்தால் தசாங்கம் மாவு வடிவத்தில் இருக்கிறது.

இதென்ன மாவிளக்கு மாவா, இதை எப்படி விளக்காக்குவது என்ற குழப்பத்தில் இருந்த போது நாகராஜன் வந்தார். நான் சொல்லாமலே அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டார்.

'சரியாகப் பாருங்கள், உள்ளே ஒரு கூம்பு இருக்கும். அதில் பொடியை நிரப்பித் தட்டில் வைக்க வேண்டும்' என்று சொல்லி, குட்டித் தட்டு ஒன்று கொடுத்தார்.

தினமணி நாளிதழைத் தரையில் விரித்து தசாங்கப் பாக்கெட்டை கிழித்துக் கொட்டுவதற்கு ஆயத்தம் செய்தேன். மீண்டும் நாகராஜன் வந்துவிட்டார்.  என் செயல் திறமையில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

தினமணிக்கு வேலை இல்லை, கூம்பில் தசாங்கத்தை நிரப்பி, செல்லமாக ஒரு தட்டுத் தட்டினார். அது சமத்தாக உட்கார்ந்து கொண்டது, மன்னிக்கவும் நின்றுகொண்டது.

'ஏத்தி  வெச்சிருங்கோ' என்று சொல்லி வெளியே போனவர், மீனாட்சி படத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த தலையணையை உற்றுப் பார்த்தார். 'இது எதற்கு?' என்றார்.

ராஜயோகப் பயிற்சியில் இடது பாதத்தை ஆசன வாய்க்குக் கீழே வைக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் அப்புவைப் போல விசேஷ முயற்சி எடுத்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு இடது பாதம் ஆசன வாய்க்கு அருகே குடியேறியிருக்கிறது.

ஆனால் வலது காலை எங்கே வைப்பது என்பதை நானே உணர்ந்துகொள்ளும்படி விட்டுவிட்டார்கள். 'என்னை என்ன செய்வதாக உத்தேசம்' என்று சுயாட்சி கேட்கும் வலது காலைத் தாஜா செய்யத் தலையணையை முட்டுக் கொடுத்து வந்தேன்.

அதையெல்லாம் அன்பரிடம் விளக்கிச் சொல்ல முடியாததால், சுருக்கமாக 'தியானத்திற்கு' என்றேன். அவர் அவசரமாக வெளியேறியதைப் பார்த்தால் அவருக்கு என்னுடைய வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன்.

தசாங்கம், புகை வளையங்களைப் போட ஆரம்பித்தது. தேவியின் சஞ்சாரம் இதனால் தடைப்படும் என்று அதை அப்புறப்படுத்தி அடுத்த தட்டில்  வைத்தேன். என்னைப் பொறுத்துக்கொள்ளும் பராசக்தி என்பொருட்டுப் புகை வளையங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அனாஹதத்தில் 'ஓம்' என்ற ஒலியைக் கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நம்முடைய முயற்சியால் மட்டும் நடக்கக்கூடியது அல்ல. உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கித் தாழ்ப்பாள் ஒலி, செருப்பு ஒலி, சினிமா ஒலி, சிரிப்பு ஒலி, சிரிப்பாய்ச் சிரிக்கும் ஒலி எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.

அப்புறம் இன்னொரு பிரச்சினை: இந்தப் பிரணவ ஒலி நாமாகச் சொல்வதா, தானாக ஒலிப்பதா என்ற சந்தேகம் வருகிறது.

நம்மைப் போன்ற ஜடங்களுக்கு உடனுக்குடன் அனாஹத சித்தி ஆகாது, இது சொந்த சாகித்யம்தான் என்று நிச்சயித்தால் நம்முடைய கவனத்தில் போட்ட கல்லாக, ஓம்.

மனித முயற்சி இந்தப் பாடுபடுகிறதே, பிறகு கந்தர்வர்கள், தேவர்கள், சித்தர்கள், யக்ஷிணிகள், பிரம்மாக்கள் எல்லோரும் எப்படித் தவம் செய்வார்கள்? எப்படி அளப்பரிய ஆனந்த எல்லையைத் தாண்டுவார்கள்? என்று கணக்குப் போட்டேன்.

மற்ற ஜீவராசிகளைப் பற்றி நமக்குத் தெரியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த எழுத்தாளனால் ஏறிப் போக முடியாது. அவள் இறங்கி வருவதுதான் சுலபம், நியாயம்.

அதற்காகத் தியானத்தை விட முடியாது. காலையில் தலையணையோடு வடக்கு நோக்கி உட்காருவதும், கணக்காக 36ஆவது நிமிடத்தில் தேவர்கள் செய்த இடைஞ்சலால் எழுந்திருப்பதும் இனிமேலும் தொடரும்.

இந்திராதி தேவர்களுக்கு வேலை வேண்டாமா?

அன்புடன்

சுப்பு

மதுரையிலிருந்து

Chennaionline / subbu

ஆகஸ்டு 2001.

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

மதுரைக்கு வந்து ஒரு வாரமாகிறது. ஆரம்ப சூரத்தனமாய் ஓட்டலில் தங்கிவிட்டேன். கைப்பணம் கரைந்துவிட்டது. தினமணி அலுவலக நண்பர்களின் உதவியால் நகரத்தின் மத்தியில் உள்ள மேன்ஷனில் இன்று குடியேற்றம். 'குவாரண்டைன்' முடிந்த காலராக்காரனைப் போல உணர்கிறேன்.

மேன்ஷனில் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இதை நினைத்தபடியே மாடித் தாழ்வாரத்தில் நடந்தால், ஜன்னல் வழியாக மீனாட்சியின் கோபுரம் என்னைப் பார்த்தது.

ஆகவே அறை வாசத்தின் முதல் நடவடிக்கை மீனாட்சி கோவில். வரும் வழியில் மீனாட்சி படம் ஒன்றை வாங்கித் துணைக்கு வைத்துக்கொண்டேன்.  உருவப் படங்கள் மீது எனக்கு அதிக அபிமானம் இல்லைதான். இருந்தாலும் யோசித்துப் பார்க்கும்போது எனக்கும் மீனட்சிக்கும் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. மதுரையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இடது கையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம். மற்றபடி லட்சாதிபதியில் தொடங்கி லாட்டரி சீட்டு விற்பவர் வரை எல்லோரும் இடது காதுக்கருகில் செல்போனைப் பொருத்திய இடது கையோடுதான்.

ஓட்டலில் தங்கியிருந்த நாட்களில் கைவசமிருந்த தேவி மாஹாத்மியத்தைப் படித்து முடித்தேன். மொத்தமும் படித்த பிறகு மாஹாத்மியமா, மஹாத்மியமா எது சரி என்ற கேள்வி முன்னணியில் நிற்கிறது. பதிலை உனக்குத் தெரிந்த பண்டிதர்களிடம் கேட்டுச் சொல்லவும். இந்திப் பண்டிதர் என்ற முறையில் நீயாக எதையும் சொல்லக் கூடாது. இது சமஸ்கிருதம்.

மீனாட்சி புத்தக நிலையத்தில் 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' வாங்கினேன். எழுதியவர் ஜெயகாந்தன். நாலு பக்கங்களைத் தாண்டுவதற்குள் யாரோ ஒரு மேன்ஷன் நண்பர் வந்து 'அருமையான புத்தகம்'’ என்று சொல்லி வாங்கிக்கொண்டு போய்விட்டார். அவசரத்தில் அவருடைய பெயரையோ, அறை எண்ணையோ சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை. பொற்கைப் பாண்டியனைப் போல ஒவ்வொரு கதவாகத் தட்டவும் தைரியமில்லை. இது 'ஒரு மேன்ஷன்வாதியின் இலக்கிய அனுபவமாக இருக்கட்டும்' என்று விட்டுவிட்டேன்.

எப்படியும் காலையில் எல்லோரும் ஒரே வரிசையில் நின்றபடி பல்துலக்கி, சாக்கடையில் ஒரே நேரத்தில் எச்சில் துப்புவது என்ற சாங்கியம் இருக்கிறது. புத்தகத்தைக் கொண்டு போனவர் அப்போது மாட்டுவார்.

எதிர் அறையில் இருக்கும் அன்பர் தீவிர கிரிக்கெட் உபாசகராக இருக்க வேண்டும். அதைத்  தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.   வால்யூமை முழு அளவில் வைத்துவிட்டார். அவரிடம் டிவி இருக்கிறது என்ற விவரம் இந்த மேன்ஷனிலிருந்து வெளியேறி, கோபால கொத்தன் வீதியின் இடைஞ்சல்களைக் கடந்து, தானப்ப முதலித் தெருவைத் தாண்டி, மேல கோபுர வீதியில் நுழைந்து மீனாட்சியின் கோபுரத்தில் முட்டிக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

முதல் நாளிலேயே நான் மோதலை விரும்பவில்லை. அந்த அறைக்காரரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிவிட்டு பேச்சுவாக்கில் டி.வி. வால்யூமைக் குறைத்துவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தால், அவர்  அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார். நீ அவசரப்பட வேண்டாம். அவர் டி.வியை அணைத்து விட்டுத்தான் போனார்.

டி.வி. நிமித்தமாக ஏகப்பட்ட முயற்சி எடுத்ததில், டாய்லெட் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

டாய்லெட் அறையில் சின்ன பிரச்சினை. அது சின்னதாக இருப்பதுதான் பிரச்சினை. ஓரளவு முயற்சி செய்தால் நம்மை ஒருவாறு உள்ளே அடைத்துக் கொள்ளலாம். ஆனால் பக்கெட்டுக்கு இடமிருக்காது. பக்கெட் உள்ளே போக வேண்டுமென்றால் நாம் வெளியே இருக்க வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாள் இல்லை என்பதால் எல்லோரும் பாண்டவர்களின் செருப்பைப் போல பக்கெட்டை வெளியேதான் வைக்கிறார்கள் என்பதையும், டாய்லெட் குழாயில் காற்று மட்டும்தான் வரும் என்பதையும், காயசுத்திக்குக் காற்று பயன்படாது என்பதையும் மறுநாள்தான் தெரிந்துகொண்டேன்.

முதல் நாள் எப்படிச் சமாளித்தேன் என்பதைக் கடிதத்தில் எழுத முடியாது; நேரில் சொல்கிறேன்.

மற்றபடி மதுரை சுவாரஸ்யமாய் இருக்கிறது.

அன்புடன்

சுப்பு

Bronzes and the Babri Masjid

- Haindavakeralam / subbu
28/11/2009 02:09:46  
                           
                                               


Among the metal sculptures of India, the bronzes from the south are marked as objects of aesthetic excellence. They have stood the test of time to prove their shining superiority.

The difference between the south Indian bronzes and the sculptures from the other parts is the difference between solidity and hollowness. While casting the image, the solid method was used in the south and the hollow method was used in the north.

The solid method was more appreciated in the realm of image making.

But what is the relevance of the bronzes to the Babri Masjid?

The idea is to apply the axiom of the bronzes on the dispute about the Babri Masjid site.

So far, a substantial portion of the delineation on this subject was of the hollow type.  It did not take into account the real factors and side-stepped solid issues.

A shift in approach is imperative to reach the solution. When the parameters are re-defined and the situation is diffused, a framework can be formulated.

An attempt has been made here to throw proper light on various dimensions of the dispute. A study of the dispute is made and an approach lending to the eventual settlement is offered.

To solve the problem, one must know the problem, the nature of the problem.


To begin with it must be admitted that the problem did not begin on 6.12.1992; on that fateful day it rose to a pitch of deafening decibels.

The legal battle for the ramjanmabhoomi in free India was like this: -

In 1949, the district judge of Faizabad had the gates of the mosque locked. But puja outside the locked area was allowed.

In January 1986 the district Judge of Faizabad, K.M.Pandey gave the order for unlocking the gates.

He said, "After having heard the parties it is dear that the members of the other community are not going to be affected by any stretch of imagination if the locks of the gates are opened and the idols inside the premises are allowed to be seen and worshiped by the pilgrims and devotees. It is undisputed that for the last 35 years Hindus have had an unrestricted right to worship as a result of the court's orders of 1950 and 1951".

It is to be noted that Rajiv Gandhi was at the helm of affairs in 1986. He was in his own manner responding to the Hindu faith.

As long as the Hindus believe that the structure of Babri Masjid stood on the Ramjanmasthan, all the secular rhetoric will not matter much.

So what is to be addressed first is how to respond to the faith, faith of the Hindus as well as the faith of the Muslims.

What is to be examined is whether the Ramjannmabhoomi movement is a political ploy of the Sangh Parivar or a legitimate expression of the Hindus.

The Ayodhya argument should not be allowed to divide us on a permanent basis; it should not result in a scene of social fracture. Those who are with the Ramjanmabhoomi movement claim that Babri Masjid was built on Ramjanmasthan.

Setting aside political preferences and impractical theories it must be conceded that majority of the practicing Hindus would vote for Lord Rama on this score. If numbers are to be the counted, then Rama's temple is sure to come up in that place.

But there are other factors besides the headcount. The courts will have a say, however impractical it may be. The media will have a say, however partisan it may be. The politicians will have a say however ridiculous it maybe. The Hindus outside the Sangh's influence will also have say, however feeble it may be.


Instead of treating the Ayodhya tangle in isolation it would be wise to see the problem as a bench-mark to Hindu-Muslim relationship. Hindus and Muslims can certainly live in peace. A formula of faith is to be projected first. Only such an approach will succeed in this part of this world. Here faith is solidity and agnosticism is considered as empty. Let us move over to the solid.

"The Hindus who were being ruled over by the Moguls could not save Rama's Ayodhi, but Himayavathi and Gangavathi have through the ages saved the beauty of Sarayu, the remnant of the Ayodhi of Dwapara Yuga...

Wherever we go in north India, we find that our holy shrines are broken up and mosques built over them... In spite of all the damage done, we do not hold any malice towards them. Hindu-Muslim unity is essential cause of the nation.

It is our duty to adopt a policy of compromise within limits. Still, reflecting on the cruelties and insults that our countrymen have undergone, we cannot but feel sad."


All these from a spokesperson of the Sangh Parivar? A leader of the BJP? A trishul carrying Bhajrangdhal activist? Definitely not!

These were the words of a Ghandhian of proven credentials, a physician by profession, a leading light of the Salt sathyagraha in Tamilnadu, a passivist to the core-Dr.T.S.S.Rajan of Trichy.

It appeared in Kalaimagal (oct.1944) the then popular Tamil monthly known for its sobriety and literary taste.

Dr. T.S.S.Rajan was not alone. He was not the only non-sangh Hindu espousing the case of lord Rama. His outpourings were only a pointer to the general feeling that existed among the Hindus then.

The mystic spell of the Mahatma Gandhi over the Hindus prevented the discontent from taking concrete shape. The spell lasted a few decades after him. But by the eighties, the Hindus wanted to assert themselves.

The generally held belief that Babur was responsible for the construction of the Masjid over Ramjanmasthan did not originate with the Sangh Parivar. S.R. Sharma, a historian of repute, ridicules the attempts made to present Babur as a secular person.

He said, "Babur was with all his virtues, a Muslim Emperor. When he had killed the Pigeons (as he called the Hindus) he piled up a pyramid of their skulls.

He considered the war against the Rajputs as jihad or 'holy war1, and assumed the title of Ghazi. He spoke of the self-immolation of the Rajputs at Chanderi as 'going to hell'.

Babur himself stated on his conquest of Chanderi, that he converted "the mansion of infidelity" into a mansion of faith"
(The crescent in India).

Dr.Harsh Narain's finding shows that from 1523 A.D. to 1855, the Hindus were in possession of the Ramjanmasthan. The British handed over the site to the Muslims in 1857

Whichever way the evidence is interpreted, it is nevertheless the case that by the nineteenth century Hindus believed that the location of the Babri Masjid was on the site of the Ramjanmabhoomi.

Armed conflict between Hindus and Muslims regarding the site occurred in 1853, again in 1855 and during and after 1857. The conflict can now be resolved through conciliation.

Any gesture of accommodation from the Muslims is sure to strike a chord of sympathy with the Hindus.

Rama bhakthas by training and temperament are not prone to be aggressive. They would not simply like the others to take away their holiest shrine. Similarly, the Shiva bhakthas who visit the Kashi Vishwanath temple are horrified by the presence the mosque cutting into the temple.

 Still the mode of interaction between Hindus and Muslims in offices, commercial establishments, public transports and social gatherings establish the fact that people are not willing to see each other as enemies.

Tradition and history of this land clearly demonstrate that religion is primarily a matter of our insides.  It is a kind of an exercise for mental weight-loss.

Any move to compartmentalise the communities involved on the basis of their belief will be in vain.

Shivaji's letter to Aurangazeb says "If it were a mosque, the call is chanted in remembrance of Him; if it were a temple, the bell is rung remembering Him alone.
To show bigotry towards any man's creed and practices is tantamount to altering the words of the Holy Book. To draw new lines on a picture is to find fault with the painter."


 So faith can be used to integrate the people of different religions. In fact faith in Lord Rama has been glorified by the judiciary and Lord Rama has been recognized as a constitutional entity.

The Lucknow bench of the Altahabad High Court has used the sketch of lord Rama given in the original Constitution as adopted by the Constitutional assembly, to define secularism, uphold the rights of the Hindu advocates to be heard, and allow them "darshan" of the Ram Lala idols reinstalled at the site of the demolished Babri masjid.

The judgment of H.N. Tilhari and A.N. Gupta in the case of the Vlshwa Hindu Adhivakta Sangh Vs State of UP, delivered on January 1, 1993, states that by virtue of the sketch of Lord Rama in the Constitution when it was adopted by the Constituent Assembly on November 26, 1949, the lord become a "Constitutional entity and admittedly a reality of our national culture and fabric and not a myth." The judges point out that the sketch of the Lord Rama exists in the original Constitution among the illustrations given therein.

Hence, a solution which tries to meet the aspiration of one community without disturbing the right of the other will be an ideal one. The solution should aim at a situation in which the Hindus and Musiims would respect each other's faith and live in harmony.

The dispute should be taken, to a plane beyond bigotry and violence, a plane higher than the political arena, higher than the legal structure. It is to be dealt in the matrix of morality. It must provide for safeguards against escalation of the conflict.

The solution proposed here is for everyone to consider with a calm mind.

    * To respect the faith of the Hindus, the Muslims may give up their claim on the site   of Babri Masjid and the areas around the Kashi (Vishwanath) and Mathura (Krishna) temples.

    * To respect the faith of Muslims, the Hindus may give up their claim on any other place of worship used by the Muslims.

    * Both the Hindus and Muslims may start a dynamic mass movement and create awareness among their fellow religionists to consider this proposal.

Once the extreme stand is avoided and the atmosphere becomes cordial, the legal and legislative mechanisms can be put in place. What is required is a change of heart and the land of Mahatma Gandhi is the ideal ground to try this concept of co-existence.

It can be said that a beginning has been already made in this regard.

Former Prime Minister Atal Behari Vajpayee said in his musings from Kumarakom, "the wrong of the mediaeval past cannot be righted by a similar wrong in modern times".
Let us leave the wrongs behind and move right ahead.