பாலகுமாரன்






நான்   அதிகமாக கதைகள் படித்ததில்லை . தமிழன் எக்ஸ்ப்ரெசில் இருந்தபோது பாலகுமாரனின்
`கண்மணித் தாமரையை `படிக்க வேண்டும் என்று ஆசிரியர் சிவா  கூறினார் .புத்தகத்தை
எடுத்துக்கொண்டு ரயில்  ஏறி விட்டேன் அப்போது எழுதியதை நீங்கள் படித்திருப்பீர்கள் .
அது பற்றிய கருத்தை  கடிதமாக எழுதி அனுப்பினேன் .தபால் போய் சேரவில்லை .அதற்குள்
சிவா அவசரப்பட்டு பாலகுமாரனிடம் சொல்லிவிட்டான் .பாலகுமாரன் விசாகப்பட்டினத்திற்கு
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் .அதை மீண்டும் எழுதி அனுப்பச் சொன்னார் .அனுப்பினேன்.
பிறகு  தினமணிக்கு மாற்றலாகி விட்டேன்...
பல வருடங்களுக்குப் பிறகு நண்பர் உமாமகேஷ் என்னுடைய கடிதத்தோடு வெளிவந்துள்ள `கண்மணித்
தாமரையைக் `கொண்டு வந்து கொடுத்தார் .இது உபகதை

பாரதியாரும் கணேஷ் மெஸ்ஸும்


அன்புள்ள  பத்மா,

பிறந்த நாளுக்கு என்று தம்பி வாங்கிக் கொடுத்த சட்டையைப் போட்டுக்கொண்டேன். இதைத் தவிர தினமணி சக ஊழியர் கொடுத்த சட்டையும்  இருக்கிறது.

இந்த ஐம்பூத சட்டைக்குள் நான் குடி புகுந்து 51 வருடங்கள் கடந்து விட்டன. எண் கணிதப்படி இது நல்ல வருடம் என்று நிபுணர் ஒருவர் சொல்கிறார்; பார்ப்போம். அடுத்த முறையும் ஐம்பூதச் சட்டையை அணியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளில் கொஞ்சம் தீவிரம் காட்ட வேண்டும்.

அதற்கு முன் பசியாற வேண்டும்; இன்றைய பிக்ஷை கணேஷ் மெஸ்ஸில். கணேஷ் மெஸ்ஸுக்குப் போகாமல் ஜென்மம் கடைத்தேறாது என்று தினமணி அலுவலக அன்பர்கள் தினமும் ஓதுகிறார்கள். இந்த இரண்டு மாத காலத்தில் என்னிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி 'கணேஷ் மெஸ்ஸில் சாப்பிடுகிறீர்களா?' என்பதுதான்.

‘விட்டுச் சாப்பாடு போல இருக்கும்’ என்று சிபாரிசு செய்தார்கள். அது வாஸ்தவம்தான். நம் வீட்டில் செய்வதைப் போலவே ஏதோவொரு தக்காளிக் காய்க்கூட்டை விடாப்பிடியாய்ப் பரிமாறுகிறார்கள். சிவபெருமானோடு வந்த குண்டோதரனுக்கே சோறு போட்டவர்கள் இந்த ஊர்க்காரர்கள். அதிகம் பேச முடியாது. நாம் சாப்பிடுகிறோமா, மடியில் கட்டிக்கொள்கிறோமா என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் அராஜகமான விருந்தோம்பல்.

சர்வர் வீட்டு மனுஷாளைப் போலவே சட்டைப் பொத்தானைப் போடாமல் கிட்டே வந்து பேசுகிறார். இதுவரை கேள்விப்பட்டதுதான். இங்கே அக்குள் வாடை அனுபூதி ஆகிவிட்டது.

சாப்பிட்டது செரிப்பதற்காகக் கொஞ்சம் நடக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி நடந்து வலது பக்கமாகத் திரும்பினால் சேதுபதி உயர்நிலைப் பள்ளி. பாரதியார் இங்கே ஆசிரியராக வேலை செய்திருக்கிறார். சொற்ப காலம்தான். பிறகு சென்னையில் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகச் சேர்ந்து உலகத்தைச் சீர் செய்யத் தொடங்கிவிட்டார்.

மதுரையில் ஆசிரியராகச் இருந்த போது, என்னைப் போலவே கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருந்தாரா அல்லது செல்லம்மாளைக்  கையோடு அழைத்து வந்து விட்டாரா என்ற விவரம் தெரியவில்லை. அவருக்கு கணேஷ் மெஸ் அனுபவப்பட்டதா என்ற விவரமும் தெரியவில்லை.

பின்னொரு சமயம் மதுரையில் வற்றல் குழம்பு சாப்பிட்டதாகப் பாரதியார்  வாழ்க்கையில் குறிப்பு இருக்கிறது. அது கணேஷ் மெஸ்ஸா என்பது பற்றி கூட யாராவது கட்டுரை எழுதி முனைவர் பட்டத்திற்கு முயற்சி செய்யலாம்.

ஆட்டுக் குட்டியை மாமிசம் தின்னும்படி செய்தாலும் செய்யலாம். பிரம்மராய அய்யர் என்ற வாத்தியாரை மாமிசம் தின்னும்படி செய்ய முடியாது என்று ஒரு ஹாஸ்யக் கட்டுரையில் (பெண்) எழுதுகிறார் பாரதியார். இந்த விபரீத யோசனைக்கும் மதுரைச் சாப்பாட்டுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

நாம் மீண்டும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கலாமா?

சென்னை காசினோ தியேட்டரில் எதிர்வீட்டுப்  பையனோடு பார்த்தது Grand Slam. எதிர்வீட்டுப் பையனுக்கு ராணுவத்தில் வேலை கிடைத்த தகவல் வந்தது. அதைக் கொண்டாட, சினிமாவுக்குப் புறப்பட்டான். மரியாதைக்கு 'வர்றியாடா?' என்று கேட்டான். அவன் மனம் மாறுவதற்குள் நான் தயாராகிவிட்டேன்.

13 வருடங்கள் திட்டமிட்டு, 13 மணிநேரம் செயல்பட்டு, 13 விநாடிகளில் பறி கொடுத்தது பற்றிய கதை அது. கோடிக்கணக்கில் மதிப்புடைய வைரங்களைக் கொள்ளையடிக்கும் கதை. அது இருப்பது பாரிஸ் நகரத்து வங்கியின் பெட்டகத்தில். அதன் மீது ஆசைப்படுகிறான் கிழவன் ஒருவன்; ஒத்தாசைக்கு மகள். மகள், அந்த வங்கியில் வேலைக்குச் சேர்ந்து 13 வருடங்கள் முன்னேற்பாடுகளைச் செய்கிறாள். பிறகு அப்பனும் மகளுமாய் ஒரு நல்ல முகூர்த்தத்தில் வைரங்களோடு அம்பேல் ஜூட். இத்தாலிக்குப் போகிறார்கள். நடைபாதை ஓட்டலில் நிம்மதியாம டீ சாப்பிடுகிறார்கள்.  மேசை மீது வைரங்கள் உள்ள கைப்பை. சைக்கிளில் வேகமாக வரும் ஒருவன் பையோடு எஸ்கேப் ஆகிறான். மகள் போடும் சத்தத்தில் கூட்டம் கூடுகிறது. 'ரொம்ப நஷ்டமா?' என்று கேட்கிறார் ஒருவர். அவள் சொன்ன பதில் என்ன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை; தியேட்டரில் தமிழ்ப் பெருமக்கள் எழுந்து நின்று விட்டார்கள்.

Chennaionline / subbu

(மதுரைப் பதிவு-7)

நவம்பர் 23, 2001


அடுத்த முறையும் ஆங்கிலப் படங்கள்தான்.

அன்புடன்,

சுப்பு

சிட்டி

 நடந்தாய் வாழி சிட்டி 

Chennaionline / subbu

(சுப்புவின் வயது அறுபது. அதில் பதினைந்து ஆண்டுகள் இந்தியாவின் கடற்கரைகளில் காலாற நடந்திருக்கிறார். கவிதைகள், கட்டுரைகள், பேட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பலவிதமாகப் பயணித்துள்ளவர் சுப்பு. மூத்த பத்திரிகையாளரான இவர் எழுதிய 'அருணகிரிநாதர்' என்ற புத்தகத்தைக் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திராவிட இயக்கத்தைக் காரசாரமாக விமர்சனம் செய்யும் ‘போகப் போகத் தெரியும்' என்ற இவருடைய தொடர், http://www.tamilhindu.com/author/subu/ என்ற இணைய இதழில் பரபரப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.)
============================================
கே: 94 வருடங்களாக வாழ்ந்திருக்கின்றீர்கள். அதில் 80 வருடங்களாகத் தமிழ் மொழியோடு இலக்கியப் பூர்வமாகத் தொடர்பு வைத்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை திருப்தியாக உள்ளதா? தமிழின் இன்றைய இலக்கியச் சூழல் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா?

ப: ஐம்பது வருடங்களுகு முன்னால் தமிழின் வளர்ச்சி கதை, கவிதை, கட்டுரை என்று சிறப்பாக இருந்தது. அப்போது மணிக்கொடி மூலம் புதிய வடிவில் படைப்புகள் வெளிவந்தன. பாரதியின் தாக்கம் இருந்தது. அதற்குப் பிறகு கொஞ்சம் சரிவுதான். மீண்டும் 1975 / 80இல் புதிய திருப்பம் ஏற்பட்டது. புதிய எழுத்தாளர்கள் நிறைய அளவில் தோன்றிய காலம் அது. இப்போதைய எழுத்தைப் பார்க்கும்போது இலக்கியம் குறித்த நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தியாகத்தான் இருக்கிறேன். இளம் பிராயத்தில் ஆங்கில எழுத்தாளர்களைப் படிக்கும்போது அது போலத் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வரும். சர்க்கசில் வீரர்களுக்கு இடையே பபூன் வருவது போலவே என்னுடைய முயற்சி. நான் என்னை எப்போதுமே சீரியசாக எடுத்துக் கொண்டதில்லை.
சிட்டி  என்று அறியப்பட்ட பெரியகுளம் கோவிந்தசாமி சுந்தரராஜனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் இது (22.8.2004).

இடுப்பெலும்பில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவமனையிலிருந்து அவர் வெளிவந்த நேரம் அது. இலக்கிய ஜீவியான சிட்டிக்கு இரவு நேரங்களில் அறிவாற்றல் அதிகமாக வெளிப்படும். அந்த நேரத்தில் அவரோடு இருப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. சுப்பு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காராபூந்தி, நாடா பகோடா என்று நிரப்பப்பட்ட தட்டு எதிரில் இருக்க, மதுரை மணியின் ஸ்வரக் கோர்வை மறைவாக ஒலிக்க, பயாஸ்கோப்பில்  தொடங்கி, பத்திரிகையாளர் சாகசம் வரை பேசும் சிட்டியின் முடிவுரை என்னவோ பரமாச்சாரியார் சந்திப்பில்தான்.

சிட்டியுடைய நினைவாற்றல் மிரட்டக் கூடியது. சைமன் கமிஷனைப் பற்றிச் சொல்லும்போது, தடியடி விழாமல் நாம் தள்ளியிருக்க வேண்டும். காமராஜரைப் பற்றிப் பேசும்போது நமக்கே கொஞ்சம் சாமீபம் வந்துவிடும்.

பத்திரிகையாளர் என்ற முறையில் அடிக்குறிப்புகளும் ஆதாரங்களும் அவருக்கு மிகவும் அவசியம். “இதைப் பற்றிய குறிப்பு 1970இல் தினமணி கதிரில் வந்திருக்கிறது” என்று சொல்லி நிறுத்துவார். அங்கேதான் ஆபத்து ஆரம்பம்.

ஊளையிடும் நாய்கூட ஓய்வெடுக்கும், அந்த வேளையில், தினமணிக் கதிரைத்  தேடவேண்டும். பெரும்பாலும் விசு அண்ணாதான் மாட்டுவார்; சில சமயங்களில் நான். சிட்டியுடைய ஜீவன் எங்கே இருக்கிறது என்பது சிலருக்குத்தான் தெரியும். அது அட்டைப்  பெட்டியில் இருந்தது. அட்டைப் பெட்டி எங்கே இருந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சென்னை பெசன்ட் நகரின் ஒதுக்குப்புறத்தில் வண்ணாந்துறை என்ற சந்து; சிட்டியின் வீடு அதன் கிளைச் சந்தில் இருந்தது. மாடியில் இருந்த சிறிய வீட்டில் சிட்டியின் அறை; படுக்கை போக மீதி இடத்தில் டேபிள் ஃபேன் சிற்றுண்டிக்காக ஒரு முக்காலி, விருந்தினருக்காக ஒரு நாற்காலி, தவிர படுக்கைக்குக் கீழே, ஜன்னலை மறைத்துக்கொண்டு, என்று நீக்கமற நிறைந்திருக்கும் அட்டைப் பெட்டிகள்.

அட்டைப் பெட்டிகளில் பாலிதீன் பைகள், பாலிதின் பைகளில் பத்திரிகைச் செய்திகளும் கட்டுரைகளும்.

கண்ணிகளை அகற்றும் போர் வீரனைப் போல அட்டைப் பெட்டிகளைக் கையாண்டு, பாலிதீன் கவர்களை எடுத்து, அலசி, அடுக்கு மாறாமல் ஆராய்ந்து, தும்மலை வரவழைத்துக்கொண்டு, முதுகுப் பிடிப்பை அலட்சியம் செய்து, கொஞ்சம் பாத்ரூம் போய் விட்டு வந்து மிகவும் பிரயாசைப்பட்டாலும் பரவாயில்லை. அந்தத் தினமணிக் கதிர் கிடைக்கும் போது அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறதே, அதற்காக இன்னோர் இரவில் கண்விழித்து அட்டைப் பெட்டிகளோடு மல்லுக் கட்டலாம்.

தன்னைக் ‘கோமாளி’ என்று அவர் குறிப்பிடுவது  தன்னடக்கத்தின் காரணமாக! மொழி பெயர்ப்பு, இலக்கிய வரலாறு, வானொலி நாடகங்கள், பேட்டிகள், படைப்பிலக்கிய மதிப்பீடு, நகைச்சுவைக் கட்டுரைகள், சிறுகதை, ஆங்கில நூலாக்கம், தி.ஜானகிராமன் தவிர கே.சிவபாத சுந்தரத்தோடு இணைந்து பயண இலக்கியம் என்ற பன்முகத் திறனுடைய படைப்பாளர் அவர். மூன்று தலைமுறைகளின் தமிழுக்கு அவர் நெருக்கமானவர். அவருடைய தாய்மொழி தெலுங்கு. பணம், பதவி, பரிவட்டம் என்று தலை தெறிக்க ஓடுகிறது ஜனசமூகம். இதில் சிட்டி எதிர்த் திசையில் தனியாக, மெதுவாகப் பயணித்தார். அந்தப் பயணத்தில் அவரோடு சில நாள்களில் (அதாவது இரவுகளில்) நடந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கிறது.

===============================
* புதுகைத் தென்றல் / ஜூலை - 2009
 நடந்தாய் வாழி சிட்டி

மறுபடியும் மதுரை


Chennaionline / subbu

அக்டோபர் 2001

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

காலையில் தியானம் செய்வதற்கு முன் மீனாட்சி படத்துக்கு அருகே தசாங்கம் ஏற்றலாம் என்று ஒரு யோசனை. காதி பவனில் இருந்து வாங்கி வந்த பாக்கெட்டைப் பிரித்தால் தசாங்கம் மாவு வடிவத்தில் இருக்கிறது.

இதென்ன மாவிளக்கு மாவா, இதை எப்படி விளக்காக்குவது என்ற குழப்பத்தில் இருந்த போது நாகராஜன் வந்தார். நான் சொல்லாமலே அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டார்.

'சரியாகப் பாருங்கள், உள்ளே ஒரு கூம்பு இருக்கும். அதில் பொடியை நிரப்பித் தட்டில் வைக்க வேண்டும்' என்று சொல்லி, குட்டித் தட்டு ஒன்று கொடுத்தார்.

தினமணி நாளிதழைத் தரையில் விரித்து தசாங்கப் பாக்கெட்டை கிழித்துக் கொட்டுவதற்கு ஆயத்தம் செய்தேன். மீண்டும் நாகராஜன் வந்துவிட்டார்.  என் செயல் திறமையில் அவருக்கு நம்பிக்கை இல்லை.

தினமணிக்கு வேலை இல்லை, கூம்பில் தசாங்கத்தை நிரப்பி, செல்லமாக ஒரு தட்டுத் தட்டினார். அது சமத்தாக உட்கார்ந்து கொண்டது, மன்னிக்கவும் நின்றுகொண்டது.

'ஏத்தி  வெச்சிருங்கோ' என்று சொல்லி வெளியே போனவர், மீனாட்சி படத்தின் கீழே வைக்கப்பட்டிருந்த தலையணையை உற்றுப் பார்த்தார். 'இது எதற்கு?' என்றார்.

ராஜயோகப் பயிற்சியில் இடது பாதத்தை ஆசன வாய்க்குக் கீழே வைக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது. அபூர்வ சகோதரர்கள் அப்புவைப் போல விசேஷ முயற்சி எடுத்து ஒரு மாத காலத்திற்குப் பிறகு இடது பாதம் ஆசன வாய்க்கு அருகே குடியேறியிருக்கிறது.

ஆனால் வலது காலை எங்கே வைப்பது என்பதை நானே உணர்ந்துகொள்ளும்படி விட்டுவிட்டார்கள். 'என்னை என்ன செய்வதாக உத்தேசம்' என்று சுயாட்சி கேட்கும் வலது காலைத் தாஜா செய்யத் தலையணையை முட்டுக் கொடுத்து வந்தேன்.

அதையெல்லாம் அன்பரிடம் விளக்கிச் சொல்ல முடியாததால், சுருக்கமாக 'தியானத்திற்கு' என்றேன். அவர் அவசரமாக வெளியேறியதைப் பார்த்தால் அவருக்கு என்னுடைய வார்த்தையில் நம்பிக்கை இல்லை என்று நினைக்கிறேன்.

தசாங்கம், புகை வளையங்களைப் போட ஆரம்பித்தது. தேவியின் சஞ்சாரம் இதனால் தடைப்படும் என்று அதை அப்புறப்படுத்தி அடுத்த தட்டில்  வைத்தேன். என்னைப் பொறுத்துக்கொள்ளும் பராசக்தி என்பொருட்டுப் புகை வளையங்களையும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

அனாஹதத்தில் 'ஓம்' என்ற ஒலியைக் கேட்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது நம்முடைய முயற்சியால் மட்டும் நடக்கக்கூடியது அல்ல. உயர்நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கித் தாழ்ப்பாள் ஒலி, செருப்பு ஒலி, சினிமா ஒலி, சிரிப்பு ஒலி, சிரிப்பாய்ச் சிரிக்கும் ஒலி எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டும்.

அப்புறம் இன்னொரு பிரச்சினை: இந்தப் பிரணவ ஒலி நாமாகச் சொல்வதா, தானாக ஒலிப்பதா என்ற சந்தேகம் வருகிறது.

நம்மைப் போன்ற ஜடங்களுக்கு உடனுக்குடன் அனாஹத சித்தி ஆகாது, இது சொந்த சாகித்யம்தான் என்று நிச்சயித்தால் நம்முடைய கவனத்தில் போட்ட கல்லாக, ஓம்.

மனித முயற்சி இந்தப் பாடுபடுகிறதே, பிறகு கந்தர்வர்கள், தேவர்கள், சித்தர்கள், யக்ஷிணிகள், பிரம்மாக்கள் எல்லோரும் எப்படித் தவம் செய்வார்கள்? எப்படி அளப்பரிய ஆனந்த எல்லையைத் தாண்டுவார்கள்? என்று கணக்குப் போட்டேன்.

மற்ற ஜீவராசிகளைப் பற்றி நமக்குத் தெரியாது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த எழுத்தாளனால் ஏறிப் போக முடியாது. அவள் இறங்கி வருவதுதான் சுலபம், நியாயம்.

அதற்காகத் தியானத்தை விட முடியாது. காலையில் தலையணையோடு வடக்கு நோக்கி உட்காருவதும், கணக்காக 36ஆவது நிமிடத்தில் தேவர்கள் செய்த இடைஞ்சலால் எழுந்திருப்பதும் இனிமேலும் தொடரும்.

இந்திராதி தேவர்களுக்கு வேலை வேண்டாமா?

அன்புடன்

சுப்பு

மதுரையிலிருந்து

Chennaionline / subbu

ஆகஸ்டு 2001.

அன்புள்ள மனைவி பத்மாவுக்கு,

மதுரைக்கு வந்து ஒரு வாரமாகிறது. ஆரம்ப சூரத்தனமாய் ஓட்டலில் தங்கிவிட்டேன். கைப்பணம் கரைந்துவிட்டது. தினமணி அலுவலக நண்பர்களின் உதவியால் நகரத்தின் மத்தியில் உள்ள மேன்ஷனில் இன்று குடியேற்றம். 'குவாரண்டைன்' முடிந்த காலராக்காரனைப் போல உணர்கிறேன்.

மேன்ஷனில் சொல்லும்படியாக ஒன்றுமில்லை. இதை நினைத்தபடியே மாடித் தாழ்வாரத்தில் நடந்தால், ஜன்னல் வழியாக மீனாட்சியின் கோபுரம் என்னைப் பார்த்தது.

ஆகவே அறை வாசத்தின் முதல் நடவடிக்கை மீனாட்சி கோவில். வரும் வழியில் மீனாட்சி படம் ஒன்றை வாங்கித் துணைக்கு வைத்துக்கொண்டேன்.  உருவப் படங்கள் மீது எனக்கு அதிக அபிமானம் இல்லைதான். இருந்தாலும் யோசித்துப் பார்க்கும்போது எனக்கும் மீனட்சிக்கும் ஒரு ஒற்றுமை புலப்படுகிறது. மதுரையில் நாங்கள் இரண்டு பேர் மட்டும்தான் இடது கையைத் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம். மற்றபடி லட்சாதிபதியில் தொடங்கி லாட்டரி சீட்டு விற்பவர் வரை எல்லோரும் இடது காதுக்கருகில் செல்போனைப் பொருத்திய இடது கையோடுதான்.

ஓட்டலில் தங்கியிருந்த நாட்களில் கைவசமிருந்த தேவி மாஹாத்மியத்தைப் படித்து முடித்தேன். மொத்தமும் படித்த பிறகு மாஹாத்மியமா, மஹாத்மியமா எது சரி என்ற கேள்வி முன்னணியில் நிற்கிறது. பதிலை உனக்குத் தெரிந்த பண்டிதர்களிடம் கேட்டுச் சொல்லவும். இந்திப் பண்டிதர் என்ற முறையில் நீயாக எதையும் சொல்லக் கூடாது. இது சமஸ்கிருதம்.

மீனாட்சி புத்தக நிலையத்தில் 'ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்' வாங்கினேன். எழுதியவர் ஜெயகாந்தன். நாலு பக்கங்களைத் தாண்டுவதற்குள் யாரோ ஒரு மேன்ஷன் நண்பர் வந்து 'அருமையான புத்தகம்'’ என்று சொல்லி வாங்கிக்கொண்டு போய்விட்டார். அவசரத்தில் அவருடைய பெயரையோ, அறை எண்ணையோ சரியாகக் கேட்டுக்கொள்ளவில்லை. பொற்கைப் பாண்டியனைப் போல ஒவ்வொரு கதவாகத் தட்டவும் தைரியமில்லை. இது 'ஒரு மேன்ஷன்வாதியின் இலக்கிய அனுபவமாக இருக்கட்டும்' என்று விட்டுவிட்டேன்.

எப்படியும் காலையில் எல்லோரும் ஒரே வரிசையில் நின்றபடி பல்துலக்கி, சாக்கடையில் ஒரே நேரத்தில் எச்சில் துப்புவது என்ற சாங்கியம் இருக்கிறது. புத்தகத்தைக் கொண்டு போனவர் அப்போது மாட்டுவார்.

எதிர் அறையில் இருக்கும் அன்பர் தீவிர கிரிக்கெட் உபாசகராக இருக்க வேண்டும். அதைத்  தன்னோடு வைத்துக்கொள்ள வேண்டியதுதானே.   வால்யூமை முழு அளவில் வைத்துவிட்டார். அவரிடம் டிவி இருக்கிறது என்ற விவரம் இந்த மேன்ஷனிலிருந்து வெளியேறி, கோபால கொத்தன் வீதியின் இடைஞ்சல்களைக் கடந்து, தானப்ப முதலித் தெருவைத் தாண்டி, மேல கோபுர வீதியில் நுழைந்து மீனாட்சியின் கோபுரத்தில் முட்டிக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

முதல் நாளிலேயே நான் மோதலை விரும்பவில்லை. அந்த அறைக்காரரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசிவிட்டு பேச்சுவாக்கில் டி.வி. வால்யூமைக் குறைத்துவிடலாம் என்று திட்டமிட்டுக் கொண்டு, சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே வந்தால், அவர்  அறையைப் பூட்டிக்கொண்டு புறப்பட்டு விட்டார். நீ அவசரப்பட வேண்டாம். அவர் டி.வியை அணைத்து விட்டுத்தான் போனார்.

டி.வி. நிமித்தமாக ஏகப்பட்ட முயற்சி எடுத்ததில், டாய்லெட் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

டாய்லெட் அறையில் சின்ன பிரச்சினை. அது சின்னதாக இருப்பதுதான் பிரச்சினை. ஓரளவு முயற்சி செய்தால் நம்மை ஒருவாறு உள்ளே அடைத்துக் கொள்ளலாம். ஆனால் பக்கெட்டுக்கு இடமிருக்காது. பக்கெட் உள்ளே போக வேண்டுமென்றால் நாம் வெளியே இருக்க வேண்டும். கதவுக்குத் தாழ்ப்பாள் இல்லை என்பதால் எல்லோரும் பாண்டவர்களின் செருப்பைப் போல பக்கெட்டை வெளியேதான் வைக்கிறார்கள் என்பதையும், டாய்லெட் குழாயில் காற்று மட்டும்தான் வரும் என்பதையும், காயசுத்திக்குக் காற்று பயன்படாது என்பதையும் மறுநாள்தான் தெரிந்துகொண்டேன்.

முதல் நாள் எப்படிச் சமாளித்தேன் என்பதைக் கடிதத்தில் எழுத முடியாது; நேரில் சொல்கிறேன்.

மற்றபடி மதுரை சுவாரஸ்யமாய் இருக்கிறது.

அன்புடன்

சுப்பு

Bronzes and the Babri Masjid

- Haindavakeralam / subbu
28/11/2009 02:09:46  
                           
                                               


Among the metal sculptures of India, the bronzes from the south are marked as objects of aesthetic excellence. They have stood the test of time to prove their shining superiority.

The difference between the south Indian bronzes and the sculptures from the other parts is the difference between solidity and hollowness. While casting the image, the solid method was used in the south and the hollow method was used in the north.

The solid method was more appreciated in the realm of image making.

But what is the relevance of the bronzes to the Babri Masjid?

The idea is to apply the axiom of the bronzes on the dispute about the Babri Masjid site.

So far, a substantial portion of the delineation on this subject was of the hollow type.  It did not take into account the real factors and side-stepped solid issues.

A shift in approach is imperative to reach the solution. When the parameters are re-defined and the situation is diffused, a framework can be formulated.

An attempt has been made here to throw proper light on various dimensions of the dispute. A study of the dispute is made and an approach lending to the eventual settlement is offered.

To solve the problem, one must know the problem, the nature of the problem.


To begin with it must be admitted that the problem did not begin on 6.12.1992; on that fateful day it rose to a pitch of deafening decibels.

The legal battle for the ramjanmabhoomi in free India was like this: -

In 1949, the district judge of Faizabad had the gates of the mosque locked. But puja outside the locked area was allowed.

In January 1986 the district Judge of Faizabad, K.M.Pandey gave the order for unlocking the gates.

He said, "After having heard the parties it is dear that the members of the other community are not going to be affected by any stretch of imagination if the locks of the gates are opened and the idols inside the premises are allowed to be seen and worshiped by the pilgrims and devotees. It is undisputed that for the last 35 years Hindus have had an unrestricted right to worship as a result of the court's orders of 1950 and 1951".

It is to be noted that Rajiv Gandhi was at the helm of affairs in 1986. He was in his own manner responding to the Hindu faith.

As long as the Hindus believe that the structure of Babri Masjid stood on the Ramjanmasthan, all the secular rhetoric will not matter much.

So what is to be addressed first is how to respond to the faith, faith of the Hindus as well as the faith of the Muslims.

What is to be examined is whether the Ramjannmabhoomi movement is a political ploy of the Sangh Parivar or a legitimate expression of the Hindus.

The Ayodhya argument should not be allowed to divide us on a permanent basis; it should not result in a scene of social fracture. Those who are with the Ramjanmabhoomi movement claim that Babri Masjid was built on Ramjanmasthan.

Setting aside political preferences and impractical theories it must be conceded that majority of the practicing Hindus would vote for Lord Rama on this score. If numbers are to be the counted, then Rama's temple is sure to come up in that place.

But there are other factors besides the headcount. The courts will have a say, however impractical it may be. The media will have a say, however partisan it may be. The politicians will have a say however ridiculous it maybe. The Hindus outside the Sangh's influence will also have say, however feeble it may be.


Instead of treating the Ayodhya tangle in isolation it would be wise to see the problem as a bench-mark to Hindu-Muslim relationship. Hindus and Muslims can certainly live in peace. A formula of faith is to be projected first. Only such an approach will succeed in this part of this world. Here faith is solidity and agnosticism is considered as empty. Let us move over to the solid.

"The Hindus who were being ruled over by the Moguls could not save Rama's Ayodhi, but Himayavathi and Gangavathi have through the ages saved the beauty of Sarayu, the remnant of the Ayodhi of Dwapara Yuga...

Wherever we go in north India, we find that our holy shrines are broken up and mosques built over them... In spite of all the damage done, we do not hold any malice towards them. Hindu-Muslim unity is essential cause of the nation.

It is our duty to adopt a policy of compromise within limits. Still, reflecting on the cruelties and insults that our countrymen have undergone, we cannot but feel sad."


All these from a spokesperson of the Sangh Parivar? A leader of the BJP? A trishul carrying Bhajrangdhal activist? Definitely not!

These were the words of a Ghandhian of proven credentials, a physician by profession, a leading light of the Salt sathyagraha in Tamilnadu, a passivist to the core-Dr.T.S.S.Rajan of Trichy.

It appeared in Kalaimagal (oct.1944) the then popular Tamil monthly known for its sobriety and literary taste.

Dr. T.S.S.Rajan was not alone. He was not the only non-sangh Hindu espousing the case of lord Rama. His outpourings were only a pointer to the general feeling that existed among the Hindus then.

The mystic spell of the Mahatma Gandhi over the Hindus prevented the discontent from taking concrete shape. The spell lasted a few decades after him. But by the eighties, the Hindus wanted to assert themselves.

The generally held belief that Babur was responsible for the construction of the Masjid over Ramjanmasthan did not originate with the Sangh Parivar. S.R. Sharma, a historian of repute, ridicules the attempts made to present Babur as a secular person.

He said, "Babur was with all his virtues, a Muslim Emperor. When he had killed the Pigeons (as he called the Hindus) he piled up a pyramid of their skulls.

He considered the war against the Rajputs as jihad or 'holy war1, and assumed the title of Ghazi. He spoke of the self-immolation of the Rajputs at Chanderi as 'going to hell'.

Babur himself stated on his conquest of Chanderi, that he converted "the mansion of infidelity" into a mansion of faith"
(The crescent in India).

Dr.Harsh Narain's finding shows that from 1523 A.D. to 1855, the Hindus were in possession of the Ramjanmasthan. The British handed over the site to the Muslims in 1857

Whichever way the evidence is interpreted, it is nevertheless the case that by the nineteenth century Hindus believed that the location of the Babri Masjid was on the site of the Ramjanmabhoomi.

Armed conflict between Hindus and Muslims regarding the site occurred in 1853, again in 1855 and during and after 1857. The conflict can now be resolved through conciliation.

Any gesture of accommodation from the Muslims is sure to strike a chord of sympathy with the Hindus.

Rama bhakthas by training and temperament are not prone to be aggressive. They would not simply like the others to take away their holiest shrine. Similarly, the Shiva bhakthas who visit the Kashi Vishwanath temple are horrified by the presence the mosque cutting into the temple.

 Still the mode of interaction between Hindus and Muslims in offices, commercial establishments, public transports and social gatherings establish the fact that people are not willing to see each other as enemies.

Tradition and history of this land clearly demonstrate that religion is primarily a matter of our insides.  It is a kind of an exercise for mental weight-loss.

Any move to compartmentalise the communities involved on the basis of their belief will be in vain.

Shivaji's letter to Aurangazeb says "If it were a mosque, the call is chanted in remembrance of Him; if it were a temple, the bell is rung remembering Him alone.
To show bigotry towards any man's creed and practices is tantamount to altering the words of the Holy Book. To draw new lines on a picture is to find fault with the painter."


 So faith can be used to integrate the people of different religions. In fact faith in Lord Rama has been glorified by the judiciary and Lord Rama has been recognized as a constitutional entity.

The Lucknow bench of the Altahabad High Court has used the sketch of lord Rama given in the original Constitution as adopted by the Constitutional assembly, to define secularism, uphold the rights of the Hindu advocates to be heard, and allow them "darshan" of the Ram Lala idols reinstalled at the site of the demolished Babri masjid.

The judgment of H.N. Tilhari and A.N. Gupta in the case of the Vlshwa Hindu Adhivakta Sangh Vs State of UP, delivered on January 1, 1993, states that by virtue of the sketch of Lord Rama in the Constitution when it was adopted by the Constituent Assembly on November 26, 1949, the lord become a "Constitutional entity and admittedly a reality of our national culture and fabric and not a myth." The judges point out that the sketch of the Lord Rama exists in the original Constitution among the illustrations given therein.

Hence, a solution which tries to meet the aspiration of one community without disturbing the right of the other will be an ideal one. The solution should aim at a situation in which the Hindus and Musiims would respect each other's faith and live in harmony.

The dispute should be taken, to a plane beyond bigotry and violence, a plane higher than the political arena, higher than the legal structure. It is to be dealt in the matrix of morality. It must provide for safeguards against escalation of the conflict.

The solution proposed here is for everyone to consider with a calm mind.

    * To respect the faith of the Hindus, the Muslims may give up their claim on the site   of Babri Masjid and the areas around the Kashi (Vishwanath) and Mathura (Krishna) temples.

    * To respect the faith of Muslims, the Hindus may give up their claim on any other place of worship used by the Muslims.

    * Both the Hindus and Muslims may start a dynamic mass movement and create awareness among their fellow religionists to consider this proposal.

Once the extreme stand is avoided and the atmosphere becomes cordial, the legal and legislative mechanisms can be put in place. What is required is a change of heart and the land of Mahatma Gandhi is the ideal ground to try this concept of co-existence.

It can be said that a beginning has been already made in this regard.

Former Prime Minister Atal Behari Vajpayee said in his musings from Kumarakom, "the wrong of the mediaeval past cannot be righted by a similar wrong in modern times".
Let us leave the wrongs behind and move right ahead.

பாண்டியன் பதில் சொல்வாரா ?



















உலகம் சுற்றிய அரவிந்தன்


கல்கி / சுப்பு / 08 ஜனவரி 2012

“ உலகத்திலே முட்டாள்தனங்களுக்குள் எல்லாம் முதல் பாக்கு வெற்றிலை வாங்கக் கூடிய முட்டாள்தனம் ஒன்று உண்டென்றால், அது அவ்வப்போது தமிழ் நாட்டில் சிலரால் நடத்தப்படும் ‘ஆரியர்-தமிழர்’ என்னும் கிளர்ச்சியாகும் “ என்று பேராசிரியர் கல்கி ஒரே போடாய்ப் போட்டார். இதைச் சொல்லி எழுபத்தைந்து வருடங்களாகி விட்டன.

ஆரிய-திராவிட இனவாதத்தை முறியடிக்கும் முயற்சிதான் ராஜீவ் மல்ஹோத்ராவும் ,அரவிந்தன் நீலகண்டனும் எழுதிய “Breaking India”
இதை “உடையும் இந்தியா” வாகக் கொடுத்திருக்கிறார் அரவிந்தன்.

763 பக்கங்களுள்ள புத்தகத்தின்  பிற்சேர்க்கை 216 பக்கங்கள் . முதலில் மிரட்டலாகத் தெரிந்தாலும் இதில் எதையும் தவிர்க்க முடியாது என்பது பின்னர் புலப்படுகிறது. தனுஷ் பாணியில் சொல்வதென்றால், ‘      பார்த்தவுடனே பிடிக்காது; பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்’.

பேராசிரியர் கல்கி அம்மையப்பனைச் சுற்றி வருவது போலச் சுலபமாகச் சொல்லி விட்டார். அரவிந்தனுக்கோ அகில உலகச் சுற்று.

 சில மேற்கத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்திய அரசியல் சமூகப் போக்கைக் கட்டுப் படுத்துகின்றன. அல்ல மிகக் குறைந்து மதிப்பிட்டாலும் கூட இந்தியாவின் அரசியல் சமூகப் போக்கினைப் பாதிக்கின்றன. என்று இந்தப் புத்தகம் நிரூபிக்கும்

என்கிறார் அரவிந்தன்.

கிருத்துவ இறையியலுக்கு விசுவாசமாகவும், காலனிய சுரண்டலுக்கு வசதியாகவும் , இனவரையியல் என்கிற அறிவியல் துறை வளைக்கப் பட்டது. என்பதையும், ஆரியர் மூக்கு திராவிடர் மூக்கு என்கிற கோட்பாடு மூக்குடைபட்டதையும் படிக்கும் போது இவர்கள் எத்தனை காலமாய் ஏமாற்றினார் என்பது புரிகிறது. மொழி அடையாளத்தை இன அடையாளமாக திரித்த கால்டுவெல்லின் கடையாணி கற்றி விடப் பட்டுள்ளது.

‘உடையும் இந்தியா ‘வில் ஒரு கருத்து ஏற்புடையதாக இல்லை. இலங்கையில் ஏற்பட்ட போருக்கும் படுகொலைக்கும் ஐரோப்பியர்கள் உருவாக்கிய  இனவாதம்தான் காரணம் என்கிறர் இவர். இது நிகழ்கால அரசியலையும் தமிழ் நாட்டுத் தடுமாற்றாங்களையும் அவதானிக்காமல் சொல்லப் பட்டிருக்கிறது.

ஒரு தவறுக்கு அரவிந்தன் இடம் கொடுக்கவில்லை; அதைக் கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டும். அது இஸ்லாமியர் குறித்த பார்வை.

பெரும்பான்மையான இந்திய முஸ்லிம்கள் தாங்கள் வாழும் பிராந்தியக் கலாசாரங்களில் வேர்  கொண்டவர்களாக இந்திய சமூகத்துடன் ஒருங்கிணைந்தவர்களாக, தங்கள் சக ஹிந்துக் குடிமக்களிடம் நல்லுறவு கொண்டவர்களாக உள்ளனர்.

என்பதை இவர் பெருமிதத்துடன் பதிவு செய்கிறார்.

இதை வலுப்படுத்த ஒரு உதாரணம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது இர்ஃபான் பதான், யூசுஃப் பதானுடைய தாய் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். இந்திய அணி வெற்றிபெற வேண்டுமென்று அல்லாஹ்விடம்  பிரார்த்தனை செய்ததாக அவர் கூறினார்.

இந்த உணர்வு இருக்கும்வரை உடையாது இந்தியா.

உடையும் இந்தியா?
ராஜீவ் மல்ஹோத்ரா, அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம். ரூ 425/-

டபுள் ரோல் கனவு

 

எனக்கு அடிக்கடி  ஒரு கனவு வரும். கனவில் நான் பிணமாக 
இருப்பேன்.அந்தப் பிணத்திற்கு நான் தீ மூட்டிக் கொண்டு இருப்பேன்.
இப்படி கனவில் டபிள் ரோல் செய்தவன் நானாகத்தான் இருப்பேன்.
இது விசித்திரமாக இருந்தது. இன்னொரு வகை கனவிலும் 
நான் பிணமாக இருப்பேன். அந்தப் பிணத்தை வழக்கம்போல் 
டபுள் ரோலில் நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.சில பேர்
 அழுவார்கள்.சிலர் எனக்கு நெருக்கமானவர்களாக
 காட்டிகொள்வார்கள். நான் அப்போது சிரித்துக் கொள்வேன்.
சிரிப்போடு விழித்துக் கொள்வேன்.இப்படியெல்லாம் தொடர்ந்த 
டபுள் ரோல் பிணக் கனவுகள் ஒரு பெரியவரை சந்தித்தவுடன் 
ஸ்டாப் ஆகி விட்டன. இப்போதெல்லாம் நனவில் மட்டும்தான் 
டபுள் ரோல்.

அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை

அவனுடைய உழைப்பால் நமக்கு வியர்வை
சுப்பு / கல்கி / 3 ஏப்ரல் 2012
 
சில இலக்கிய விருதுகள் எந்த அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்ற பேச்சு வந்த போது , பிரபல எழுத்தாளர் ரா. கி. ரங்கராஜன் நெத்தியடியாகச் சொன்னார் , “ கதையில் கதை இருக்கக் கூடாது; இருந்தால் நமக்கு இத்தகைய விருதுகள் கிடைக்காது “  என்று.
 
ஜி. பி. சதுர்புஜனைப் பொருத்தவரை , தோசை என்றால் மாவு இருக்க வேண்டும்; தொட்டுக் கொள்ள சட்னி இருக்க வேண்டும் என்பது செய்முறை. பாதி வழியில் முற்றுப் புள்ளி வைத்து விட்டு , வாசகனைப் பழி வாங்கும் மனோபாவம் அவரிடம் இல்லை. அவருடைய கதைகளில் கதை இருக்கிறது; காதல் இருக்கிறது; கண்ணீர் இருக்கிறது; கவிதைத் தனமான கர்வம் இருக்கிறது; எதிர்பார்ப்பு இருக்கிறது,ஏமாற்றம் ,எக்காளம்  எல்லாமே இருக்கின்றன.
 
எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்களோ , அத்தனை கதைகள் இருக்கின்றன என்பது படைப்புலகத்தின் ரகசிய விதி. இதற்கு மேலே போய்
ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் இருக்கின்றன என்ற புரிதலோடு எழுதுகிறார் சதுர்புஜன்.
 
உதாரணத்திற்கு ஆனந்த். ஆனந்தின் கதையை விவரிக்கும்போதே நமக்கும் அவனுக்கும் ஒரு கொடுக்கல் வாங்கல் ஏற்பட்டு விடுகிறது. அவனுடைய காதலில் நமக்கு மூச்சு முட்டுகிறது. அவனுடைய உழைப்பில் நமக்கு வியர்வை வருகிறது. அவனோடு பயணப்படும் நாம் கதையின் முடிவில் அவனுடைய நடவடிக்கைக்குக் கையாளாகி விடுகிறோம்.
 
இன்னொரு கதை கணக்கு வாத்தியார் வெங்கடேசமூர்த்தி பற்றியது. தப்பு தப்பு. கதை , மாணவன் அறிவுமதி பற்றியது. இல்லை, இல்லை. கதை, தலைமை ஆசிரியரைப் பற்றியது. நாலு பக்கக் கதையில் மூன்று பேருடைய குணாம்சங்கள் போட்டுடைக்கப்படுகின்றன.
 
அன்பு, ஆற்றாமை இதையெல்லாம் படித்து அலுத்து விட்டது; எங்களுக்கு அதிர்ச்சி வேண்டும் என்று கேட்கும் வாசகர்களுக்காக ஒரு பார்சல் இந்தத் தொகுப்பில் இருக்கிறது.
 
மூன்று கதைகளைப் பற்றித்தான் நான் சொல்லியிருக்கிறேன். மொத்தம் முப்பத்தெட்டும் உங்களுக்குக்காகக் காத்திருக்கின்றன.
 
சதுர்புஜன் சிறுகதைகள்
ஜி.பி. சதுர்புஜன்
திரிசக்தி பப்ளிகேஷன்ஸ் , ரூ. 150 / -
 

ஆரியம், திராவிடம் – இலக்கிய ஆதாரங்கள்


சங்கப் பலகை / 26 11 2011 /
அனைவருக்கும் வணக்கம் .
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.
கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும்., அல்லது ஆரிய இனமாக இருக்கும்.
ஆரியம் என்றால் என்ன? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன ? திராவிட இனம் என்றல் என்ன?
இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும்  பொருள் எது ? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? என்பதை அறியும் முயற்சியே இந்த அமர்வு. அறிஞர்களும், ஆர்வலர்களும்  நிறைந்துள்ள இந்த அவையில் , இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கிறேன்.
முதலில் ஆரியம் .
நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருத்தப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கும் மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட
இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இது தவறான கருத்து.
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.
ஆரியர், அஸுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர். அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும்.: “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை.”
ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் என்றும் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது.
இதுவும் தவறு.
வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிறமுடையவர்களாக இருந்திருக்கிறர்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் ( 10 : 31 : 11) இருக்கிறது.
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும் , யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான கிருஷ்ணா கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.
வேதங்களில் திராவிடஎன்ற சொல் இல்லை.
தமிழ் நூல்களில் குறுந்தொகையில் ( 7 : 3: 5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
 ”………………………………………………………………………………………………….. ஆரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகைவெண் நெற்றொலிக்கும் என்கிறது குறுந்தொகை..
திருநாவுக்கரசர் தேவராத்தில் ( கி.பி. ஏழாம் நூற்றாண்டு) , இறைவன் வடமொழியும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவசிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர்  என்று எழுதப்பட்டுள்ளது. ஆரியம் தமிழோடிசையானவன் கூரிய குணத்தார் குறிநின்றவன் என்பது திருநாவுக்கரசர் பாடல் (. 176)
மாணிக்கவாசகர்,( கி பி எட்டாம் நூற்றாண்டு)ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில்  பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே “ (64)
என்று பாடுகிறார்.
பிறகு, கம்பராமாயணம் ( கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில், ”இற்றைநாள்வரை முதலியான் முன்செய்தன குற்றமு முளவெனிற் பொறுத்தி கொற்றவ ;அற்றதான் முகத்தினில் விழித்தல் ஆரிய ! பெற்றனன் விடையெனப் பெயர்ந்து போயினான்.” (.ரா.யு.கா.
 கும்ப.கர்ணன் வதைப் ப.டலம் ) . என்று வருகிறதுஇந்த இடத்தில், உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன்என்று எழுதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து, மணவாள மாமுனிகள் ( 1370—1443) ”வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை- ஆர்த்தபுகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்நடுவே சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” ( உபதேச ரத்ன மாலை) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகர்(1269—1370, “காண்பனவு முரைப்பனவு மற்றொன்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பாண்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வையத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நாம் பெரியோமல்லோம் நாம் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே “ ( அம்ருதாஸ்வாதி - 37) என்கிறார்.. இங்கே ‘ஆரியன்’ என்பதை ’சிறப்புடையவன்’ என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம் , ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது. ’ திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’(1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார், இதை இன அடையாளமாக மாற்றினார்.
கால்டுவெல் வழி வந்த சி. என். அண்ணதுரை, ’ஆரிய மாயை ‘(1943) என்ற புத்தகத்தில், “ நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் -- கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்கு அறிவர்” (ப..26) என்று எழுதினார்.
பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்தியப் பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்ட்ரம் ஆகியவை நர்மதையின் தெற்கே உள்ளன என்று தெரிந்து விடும். சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோடியும் திராவிடர்களா என்பதை அண்ணாவின் தம்பிகள்தாம் விளக்க வேண்டும்.
அடுத்தது திராவிடம்.
’திராவிடம்’ என்ற பொருளில் ’த்ரமிடம்’ என்ற சொல்  பாகவதத்தில்
(8-5-49) வருகிறது.
தமிழைக் குறிக்க ஸம்ஸ்கிருதத்தில் ”த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘ தாமரி ’ என்று எழுதினார். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ’தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள்,  முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும், தமிழகத்தையும் ’மலபார்’ என்றே அழைத்தார்கள்.
எனவே, தமிழ் திராவிடமாக ஒலிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை..
பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில்  திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும், சோழ தேசத்திற்கு வடக்கிலும் , கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘ த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறர்.
தாயுமானவர், ( பதினெட்டாம் நூற்றாண்டு)  ”…………. வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்”  (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறர்.
வேதாந்த தேசிகரும், தாயுமானவரும் ‘திராவிடம்’ என்ற சொல்லை, ‘தமிழ்’ என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் , தென்னிந்திய மொழிகளை, ‘ திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர்( 1777 – 1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.
இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப் பட்டது.
’தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி , சுய மரியாதை இயக்கம் , நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை, கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ’திராவிட இனம் ‘ என்ற கருத்தாக்கம்தான்..
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம் :
P.viii.. Psamls of a Saiva Saint / T Isacc Thambiah/ London. Luzee & Co./1925.
A matter of convenience  became a factor of mischief.; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, to allied people in inferior grades of culture.
The responsibility is Bishop Caldwell’s . The wrong done to those, to whom alone the dravidian language belongs ,is aggregated  by employing a philological convention  as an  ethnological  distinction. The Caldwell terminology is unscientific and unsatisfactory
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக
அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும் , சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவக்கி வைத்ததுதான் திராவிட இனவாதம் . ஈ வெ ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்து விட்டது. இனவாதம் இயக்கமானது.   
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப். பாட்டுப் புத்தகங்களும், இசைத்தட்டுகளும் கிராமங்கள் தோறும் ஊடுருவிய நிலையில், கலை வாழும் தென்னாடும், திராவிடப் பொன்னாடும்  பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால், கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.
தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் , ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்து விட்டது. இருந்தாலும், அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப் படுகிறது.
நிறைவாக, இலக்கியமல்லாத ஒரு சான்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மற்றும்  நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா  ஆகியோர் வழங்கிய தீர்ப்பில்
திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள். மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடர்கள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும். “
-- ஜனவரி 5, 2011
என்னுடைய அறிவுக்கு எட்டிய அளவில் ஆரியம் திராவிடம் பற்றிய இலக்கிய ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறேன். 
வணக்கம்.
இது பற்றி மேலும் அறிய :
1. புராதன  இந்தியா என்னும் 56 தேசங்கள்,  பி. வி. ஜகதீச ஐயர், 1918,   
   சந்தியா பதிப்பகம், 2009. 
2.  மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு,
   கே வி. ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை, 2009.

ஞாநி


ஞானி விஷயத்தில் ஒரு தப்பு நடந்துவிட்டது.
நி போடுவதற்குப் பதிலாக னி போட்டுவிட்டேன்.
உங்களுக்குத் தெரியுமா? நான் ஞாநியைச் சந்தித்தபோது
கேட்ட முதல் கேள்வி.நீங்கள் எந்த னி என்பதுதான்.
அதிகப் பழக்கம் இல்லை.ஆனால் நல்ல மனிதர்
என்று சொல்லுவேன்.பெசன்ட் நகர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
நடந்தது.ஒரு பெண் குழந்தை. வளர்ச்சி குன்றிய குழந்தை.
யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். காலையில்
வந்த குழந்தை மாலை வர
ை அந்தப் பந்தலில் விளையாடிக்
கொண்டிருந்தது. எனக்கு கும்பாபிஷேகம் ஒட்டவில்லை.
கைவசம் ஜூனியர் போஸ்ட் தொலைபேசி எண் இருந்தது.
ஞாநியோடு பேசினேன். உடனடியாக நடவடிக்கை
எடுத்தார்.குழந்தையோடு அண்ணாநகர் உதவும் கரங்களுக்கு போகவும் `
என்றார் ஞாநி. காலையிலிருந்து பரிவோடு குழந்தையை பார்த்துக்
கொண்டிருந்தவர் நண்பர் ஹரி.தொப்பை குலுங்கக் குலுங்க
பந்தலில் குழந்தையோடு ஓடிக்கொண்டிருந்தார்.பிரியும்போ
து அவர்
அழுதுவிட்டார்.
அண்ணாநகர் போனேன்.குழந்தையோடு என்னைப் புகைப்படம் எடுத்துக்
கொண்டார்கள்.குழந்தை எந்தச் சலனமும் இல்லாமல்
இந்தத் தோளில் இருந்து அந்தத் தோளுக்கு மாறிவிட்டது...

இரண்ட
ு நாட்களுக்குப் பிறகு உதவும் கரங்களில் இருந்து
போன் வந்தது. தாய் தகப்பன் வந்து அழைத்துப் போய்விட்டார்களாம்.
`இந்த மாதிரி நடப்பது உண்டு` அவர்களே தொலைத்து விடுவார்கள்.
பிறகு மனசு கேட்காது. வந்துவிடுவார்கள் ` என்று எனக்கு சொல்லப்பட்டது.

சிம்ரன்


நேற்று சூர்யா. இன்று சிம்ரன். அனுஷ்கா இல்லையா என்று
அடிக்கவரக் கூடாது. நேரடி அனுபவம் மட்டுமே இங்கே
எழுதப்படும்.
பத்து வருடங்களுக்கு முன் சென்னை நுங்கம்பாக்கத்தில்
உள்ள ஹோடேலில் நானும் நண்பர் காசிநாதனும்
சாப்பிடுக்கொண்டிருந்தோம். காசிக்குப் பின்னால் அடடே
மேக்கப் இல்லாத சிம்ரன்.அப்படியும் அழகாதான்
இருந்தாங்க.காசி கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டி என்று நான்
நினைத்ததால் அவரிடம் சொல்லவில்லை.
சாப்பிட்டு முடித்து அலுவலகம் போனோம்.
ஹாலில் உரத்த குரலில் `இன்னைக்கு யாரைப்
பார்த்தேன் தெரியுமா?` என்று நான் ஆரம்பித்தேன்.
`சிம்ரனை` என்று காசி முடித்துவிட்டார்.` எப்படி காசி`
என்று நான் தடுமாறினேன்.`சார் உங்களுக்கு பின்னால்
ஒரு கண்ணாடி இருந்தது. நீங்க ஜொள்ளு பார்ட்டி என்பதால்
நான் சொல்லவில்லை `.என்று காசி முடித்துவிட்டார்.
சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த திருவாரூர் பாபு
இப்போது சினிமா இயக்குனர்.ஏதாவது படத்தில் இந்தக்
காட்சியை அவர் சேர்த்துவிடும் அபாயம் உண்டு.

தாராசிங் ஆத்மா சாந்தி அடைய ...


அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய அண்ணன் நாராயணசாமி ஆட்டோக்ராப் புத்தகம்
வைத்திருந்தார். அண்ணன் என்றால் பெரியப்பா பையன் என்பதைக்
குறித்துக் கொள்ளவும். அண்ணனுடைய ஆடோக்ராபில் மல்யுத்த
வீரர்கள் கிங் காங் மற்றும் தாரா

சிங் உடைய கையொப்பம் இருப்பதாக
அண்ணன் பெருமையடித்துக் கொண்டார். மல்யுத்த வீரர்களின்
கையொப்பமும் குண்டு குண்டாக இருக்குமா என்பது என்னுடைய
ஐயப்பாடு. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தேன்.அண்ணன் அதை
என் கண்ணில் காட்ட வில்லை. ஒரு நாள் அண்ணன் இல்லாதபோது
அவருடைய அலமாரியில் இருந்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தால்
ஏமாற்றம். தாரா சிங் கையொப்பம் ஹிந்தியில் இருந்தது.கிங் காங் ஏதோ
ஒரு மொழியில். அளவு என்னவோ சிறியதாகத்தான் இருந்தது. இதைக்
காட்டாமல் அலட்டிக் கொண்ட அண்ணனுக்கு நம்முடைய எதிர்ப்பைத்
தெரிவிக்க வேண்டுமே? மீதி இருந்த பக்கங்ககளில் எல்லாம் என்னுடைய
கையொப்பத்தை நிரப்பிவிட்டேன். அண்ணன் வந்து, பார்த்து கோபப்பட்டான்.
`பிற்காலத்தில் நான் பெரிய ஆளாகி விடுவேன். அப்போது நீ வந்து கேட்டால்
எனக்கு நேரமிருக்காது. அதனால்தான்..`. என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டேன்.
அன்று முதல் தலைவராக வேண்டும் என்ற என்னுடைய முயற்சி தொடர்கிறது.
தாரா சிங் ஆத்மா சாந்தி அடையட்டும்.

சித்ரகுப்தனின் நோட்டுப்புத்தகம்


இன்னொரு அறிமுகம்: இந்த நண்பருடைய மகள் திருமணம்.
மாலை வரவேற்புக்குப் போயிருந்தேன். தடுக்கி விழுந்தால்
தமிழறிஞ்சர்கள், பேச்சாளர்கள்,பிரமுகர்கள்.என்னால் அங்கே
ஓட்ட முடியவில்லை.காரணம், சுனாமி.தமிழ்நாட்டை சுனாமி
தாக்கிய இரண்டாம் நாள் அது.
சென்னை பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோவிலில் சமைத்து
உணவை எடுத்துக் கொண்டுபோய் மகாபலிபுரம் அருகில் உள்ள
கிராமங்களில் கொடுத்து வந்தோம்.அந்த வேலையில் ஒரு
தடங்கல் ஏற்பட்டுவிட்டது.` கோவிலில் உள்ள அரிசியை நிவாரணப்
பணிகளுக்குப் பயன்படுத்தக் கூடாது ` என்று ஒருவர் எதிர்ப்பு
தெரிவித்து விட்டார். நண்பர்கள் அவரைத் தட்டி விடலாம் என்றார்கள்.
எனக்கு உடன்பாடில்லை.அந்தக் கவலையோடுதான் இந்த
வரவேற்புக்கு வந்தேன்.
பெண்ணின் திருமண மிதப்பில் இருந்தாலும் , மதியூகி என்ற முறையில்
என்னுடைய தவிப்பை நண்பர் புரிந்து கொண்டார்.
விசாரித்தார்.சொல்லிவிட்டேன்.` நீ சாப்பிட வேண்டாம். புறப்பட்டு`என்று
சொல்லி என் சட்டைப் பையில் ஒரு கவரை வைத்தார்,..

என்னுடைய பிரச்சினை தீர்ந்துவிட்டது, கோவில் கரும்பலகையில்
சுனாமி நிதி என்று எழுதினேன். முதல் பெயர் சுகி சிவம். மறுநாளுக்குள்
பணம் சேர்ந்துவிட்டது.
சிவத்தின் இந்த குணம் இன்னும் பரவலாக அறியப்படவில்லை.
அறநெறி என்று நினைப்பதால் விளம்பரத்தை அவர் விரும்புவதில்லை.
அறிமுகப் பேச்சாலர்களுக்கான தொகையை அவரே கொடுத்து சில
மேடைகளில் பேச வைத்திருக்கிறார்...

பூந்தமல்லி அருகே உள்ள ஒரு கிராமத்துக் கோவிலில் என்னுடைய உறவினர்
ஒருவர் உழவாரப் பணி செய்து கொண்டிருந்தார்.அந்தக் கிராமத்தின்
முக்கிய பிரச்சினை தான் இன்றைய தமிழகத்தின் முக்கியப் பிரச்சினை.
அது டாஸ்மாக்.நாள் முழுதும் வேலை செய்து கிடைக்கும் கூலி, பெண்டு
பிள்ளைகளுக்குப் போய்ச்சேராது.இவர்களுக்கு அறிவுரை சொல்லவேண்டும்
என்று நினைத்து அவர் என்னிடம் வந்தார்.` குடியின் தீமை பற்றி யாராவது
பேசவேண்டும்.ஆனால் செலவு செய்ய முடியாது ` என்றார்.

நண்பர்களை நம்பித்தான் நான் பொதுப்பணியில் இறங்கியிருக்கிறேன் என்ற
உள்விவரத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.குடியை ஒழிக்கும் குழுவில்
பத்து பேர் சேர்ந்துவிட்டார்கள். அந்தக் கிராமத்தில் சிவத்தின் இதயபூர்வமான
உரை நிகழ்த்தப்பட்டது. தொலைகாட்சி செய்தி அதிகாரி லோகேஸ்வரி வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்.இசைக் கவி ரமணனின் அப்பா அனந்த ராம செஷன்
ஒரு வேத வித்து. அவர் மனைவியோடு வந்து உற்சாகத்தோடு கலந்து கொண்டார்.
நாம, மோடிவேஷனோடு சரி.

திரும்பி வரும் வழியில் கட்டு சாதக் கூடையைப் பிரித்தோம். குடிப்பழக்கம்
குறைந்ததா என்று தெரியவில்லை. ஆனால் சித்திர குப்தன் நோட்டுப் புத்தகத்தில்
சுகி சிவம் என்ற பக்கத்தில் வரவு வைத்துக் கொண்டதாகக் கேள்வி.

அமானுஷ்யம்


ஒரே ஒரு அமானுஷ்யம்.பயந்த சுபாவம்
உள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

இடம்: நாகப்பட்டினத்து லாட்ஜ் . வருடம்: 1980.
அந்த லாட்ஜில் ஒரு வசதி உண்டு. ஒரு ரூ வாடகைக்கு
லாட்ஜ் வராந்தாவில் படுத்துக்கொள்ளலாம்.
ரெகுலர் வாடிக்கையாளராக இருந்தால் பாய் ,
தலையணையும் கொடுப்பார்கள். ஆனால்
விளக்கை அனைத்து விட்டுத்தான் படுக்கை
போடவேண்டும். வெளிச்சத்தில் தலகானியைப்
பார்த்து விட்டால் வயிற்றைக் குமட்டிக் கொண்டு
வரும்.இப்படியும் சில வாரங்கள் இருந்தேன்...

ஒரு நாள் இரவில் கேரளக் காரர் ஒருவர் `சார்
நீங்கள் என் அறையில் படுக்கலாம்` என்றார்.
ஓரளவுக்கு மறுத்துவிட்டு அப்புறம் உள்ளே
போய்விட்டேன்.அவர் கட்டிலில். நான் கீழே.
அவருடைய பழைய டிரங்குப் பெட்டி என் அருகே.
விளக்கு அணைக்கப்பட்டது.மனித நடமாட்டம்
இல்லை.கடல் ஓசை மட்டும் காதில் கேட்கிறது.

தூக்கம் வரவில்லை.அந்த அறையில் இரண்டு
பேர்தான் இருக்கிறோம்.ஆனால் வேறு யாரோ
மூச்சு விடுவது போல ஒரு உணர்வு. உணர்வுதான்.
சத்தம் இல்லை.கட்டிலில் இருப்பவர் கட்டையாய்
கிடக்கிறார். கிட்டே போய் பார்த்தேன். பெருமூச்சு
அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. பாம்பை
அந்தப் பெட்டியில் வைத்திருப்பாரோ என்ற
சந்தேகம். பாம்பு மூச்சு விட்டு நான் பார்த்ததில்லை.
தவிர மூச்சு பெட்டியில் இருந்து வரவில்லை.
மூச்சு கட்டிலின் கால் பக்கம் இருந்து வந்தது.

பயம் என்று சொல்லமுடியாது.அசௌகரியமான
சூழ்நிலை.சந்தேகம்.குழப்பம் என்று சொல்லலாம்.
எழுந்து வெளியே போவதும் கேவலமாக இருந்தது.
இரவு முழுதும் இப்படியே போனது. ..

காலையில் கோபாலன், அதான் கேரளாக்காரர்
கிணற்றடியில் பல் தேய்த்துக் கொண்டிருந்தார்.
ஏழெட்டு பேர் இருந்தார்கள்.எல்லோரும் நாம்
சொல்வதை செய்யக்கூடியவர்கள். `இவனைக்
கட்டுங்கடா` என்றேன். கேள்வியே இல்லை.
தூணில் கட்டி விட்டார்கள். `லுங்கியை அவுத்துடுங்க`
என்றேன். கோபாலன் கதறிவிட்டார `சார் என்னை
விட்டுடுங்க. நான் இங்க எந்த தப்பும் செய்யல` என்றார்
அவருடைய வாக்குமூலத்தை யாரும் பதிவு செய்யவில்லை.
லுங்கியைக் கிழித்து எடுத்துவிட்டார்கள்...

கோபாலனின் இடது தொடையில் பெரிய அளவில்
நான்கு தையல்கள். அதைப் பார்த்தவுடன் நம்ம
ஆட்கள் கொஞ்சம் பின்வாங்கினார்கள். அவருடைய
நிலைமையோ பரிதாபமாக இருந்தது. தண்ணீர் கொடுக்கச்
சொன்னேன். தண்ணீரைக் குடித்துவிட்டு அவரே
சொல்லிவிட்டார். ஏதோ ஒரு இட்சினியை இறக்கி
தகட்டில் வைத்து தொடையில் தைத்துக் கொண்டிருக்கிறார்.

`கேரளாவில் மாந்திரீகம் செய்வேன்,இங்கே வியாபாரம்
செய்யத்தான் வந்தேன்` என்று சத்தியம் செய்தார்.கண்ணீர்
விட்டார். `அவிழ்த்து விடுகிறேன்.ஊருக்குப் போய்விடு`
என்றேன். அன்றே புறப்பட்டுப் போய்விட்டார். போகும்போது
சொல்லிக்கொள்ள வந்தார்.`சார் நீங்கள் என்ன வித்தை படிச்சீங்க?`
என்று கேட்டார்.நம்பளையும் மந்திரவாதி ஆக்கிவிட்டாரே என்று
எனக்கு கடுப்பு.`எனக்கு எந்த வித்தையும் தெரியாது` என்றேன்.
`சார் கயிறெல்லாம் கட்டி இருக்கீங்க`என்று சொல்லி சிரித்துவிட்டு
அவர் போய்விட்டார்.

சென்னையில் இருந்து புறப்படும்போது யாரோ ஒரு தங்கச்சி
கட்டிய ரக்ஷா பந்தன் கயிறு அது என்பதை உங்களுக்குத்
தெரிவிக்கிறேன்.

பவல் சன்யாசி




வைகோ

புதிய தலைமுறை நேர்காணலைப் பார்த்தேன்.
வைகோ பண்போடு பேசுகிறார்.தோல்விகளால்
துவண்டுவிடவில்லை என்பதைப் பாராட்டலாம்.
ஆனால் அவர் மாறி வரும் சூழலைப் புரிந்துகொள்ளவில்லை
என்றே நான் நினைக்கிறேன். உலகத் தமிழர்களின்
ஆதரவை வைத்துக்கொண்டு தமிழகத்தில் வெற்றி
பெற முடியாது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.

அரசியலைப் பொறுத்தவரை
ஒரு தளத்தில் பலமாக இருப்பது இன்னொரு தளத்தில்
பலவீனமாக மாறிவிடும். கட்சி நடத்த பணம் தேவை.ஆனால்
பணம் படைத்தவர்களிடம் கட்சி கை மாறி விட்டால்
அதுவே மக்களை கட்சியில் இருந்து அன்னியப் படுத்திவிடும். 1967 இல்
காங்கிரசுக்கும் 2011 இல் தி மு க வுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு
இதுவும் ஒரு காரணம்.

வைகோ வைப் பொறுத்தவரை ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான
நிலைப்பாட்டை எடுப்பதால் அவருடைய கட்சிக் காரர்கள்
அவர் மீது அபிமானத்தோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையான
தமிழர்கள் அவருக்கு ஆதரவு கொடுக்கத் தயங்குவதற்கும்
இதுதான் காரணம். இந்த சிக்கலை விடுவித்தால் அவருக்கு
வெற்றி கிடைக்கலாம். அரசியலில் அடிப்பவனை விட
அடி வாங்குபவனுக்கே அதிக வோட்டு விழும்.

சுகி சிவமும் சமஸ்தானமும்

அறிமுகம்: வழக்கறிஞ்சர் கே. ரவி. மொரார்ஜி பிரதமரரக
இருந்தபோது சந்திப்பு ஏற்பட்டது. மன்மோகன் காலத்திலும்
நட்பு நீடிக்கிறது. தனிப்பட்ட முறையிலும் தத்துவத் தேடலிலும்
நட்பு வலுப்பட்டது. என்னையும் ரவியையும்
ஒன்றாகப் பார்க்கும்போது ரவி மூத்தவர் என்று மக்கள்
முடிவெடுக்கிறார்கள். இரண்டு காரணங்கள்.ஒன்று, ரவியின்
தலையில் முடி இல்லை.இரண்டாவது ரவி சொல்வதை நான்
உடனடியாகச் செயல்படுத்துவது...

ரவியும் சுகி சிவமும் அரை டவுசர் காலம் முதல் நண்பர்கள்.
ரவி வீடு சென்னை மந்தைவெளியில்.சிவம் வீடு மைலாப்பூரில்.
ஒரு புலர் காலைப் பொழுதில் ரவி வீட்டில் ரவியோடு
பேசிக்கொண்டிருந்தேன். சிவம் அங்கு வந்தார். காபியோடு
இலக்கிய சர்ச்சை தொடங்கியது.கவிதைக்கு எது முக்கியம்?
அழகியலா? சமூகப் பயன்பாடா? என்கிற ரீதியில் மத்தாப்புச்
சிதறல்கள். வாதப் பிரதிவாதங்களுக்கு இடையே `வீட்டில்
குழாய் ரிபேர் ` என்று சொல்லிவிட்டு சிவம் தன் தரப்பைத்
தொடர்ந்தார். காலை விஜயத்தின் நோக்கம் எனக்குப்
புரிந்து விட்டது. ரவிக்குப் புரியவில்லை. குழாய் ரிப்பேருக்கு
ஆள் அனுப்பிவிட்டு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்.
சிவத்தின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ரவி வீடு
ஒரு சமஸ்தானம். சு. ரவி, பேரா வ வே சு ,இசைக்கவி ரமணன்
போன்ற அஷ்டதிக் கஜங்களை அங்கே பார்க்கலாம்.
ரவியால் தீர்க்க முடியாத வழக்காறுகள் மேல்முறையீட்டுக்குப்
போகும். ரவியின் மனைவி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்
பட்டம் பெற்றவர். ஓவியர் . வைணிகி. தூர்தர்ஷன் ஏகபோக
தொலைக்காட்சியாக இருந்தபோது செய்தி வாசித்தார்.
ஷோபனா ரவியை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

கையில் காசு இல்லையே என்ற பாதிப்பு இல்லாமல்
தொலை நோக்குத் திட்டங்களை நான் உருவாகுகிறேன்
என்றால் அதற்கு ரவி போன்ற நண்பர்கள்தான் காரணம்.


சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில்
பாரதிக்கு பெரிய அளவில் விழா எடுக்கவேண்டும்
என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது. ரவியின் செலவில்
வானவில் பண்பாடு மையம் உருவானது. இதுதான்
இன்று நம்பர் ஒன் பாரதி விழா.

ஆரியத் தமிழன்

அறிமுகம்: ஆரியத் தமிழன். விவரமான ஆசாமி.
கும்பகோணத்தில் பேச வந்த என்னை கூட்டம்
முடிந்த பிறகு கடத்திக் கொண்ட போனார்.
அன்பான உபசரிப்பு.நிறைவான குடும்பம்.
ஜாக்ரதை ,ஸ்வப்னம்,சுஷுப்தி மூன்று
நிலைகளிலும ஹிந்து சமூகத்தைப்
பற்றியே சிந்திக்கிறார் என்பதைக் கண்டேன்.

காலை எழுந்தவ்டன் மாடிக்கு அழைத்துப் போனார்.
நான் எதிர்பார்க்கவில்லை.இந்த இடத்தில் இப்படி
ஒரு அறிவுப் புதையல்.அழகாக அடுக்கி ,நூல் நிலையம்
போல நோட்டுப் புத்தகத்தில் வகை வகையாக
ஆயிரக்கணக்கான புத்தகங்கள் என்ட்ரி.
ம பொ சி க்கு தனி அலமாரி. ம பொ சி புத்தகம்
ஒன்றைத் தேடி அவருடைய மகள் வந்தாராம். வைணவம்
பற்றிக் கேட்டால் வகுப்பு எடுக்க ஆரம்பித்து விடுகிறார்.
அரசியலில் அ முதல் இல் வரை இருக்கிறது. ஆ த இருக்கும்
இடத்தில் புத்தகம் என்பது அனாவசியம்.எல்லாவற்றையும்
அவரே சொல்லிவிடுகிறார்.

அவர் கொடுத்த பத்தகங்களை ஓடும் ரயிலில் படித்தேன்.
அதற்கு நன்றி சொல்வதா அவருடைய இல்லத்தரசி
கட்டிக் கொடுத்த கொத்தமல்லி சாதத்திற்கு நன்றி சொல்வதா
என்று முடிவு செய்வதற்குள் தாம்பரம் வந்தவிட்டது.
ஆ த வை சந்திக்க விரும்புகிறீர்களா? ஆக 19 முகாமுக்கு
வாருங்கள்.

மைபாவின் கட்சியில் ....

இதோ இன்னொரு அறிமுகம். மை பா என்று சொன்னால் மிடியாகாரர்களுக்குத்
தெரியும்.சத்யமூர்த்தி பவனாக இருந்தாலும் அறிவாலயமாக இருந்தாலும்
மை பா வுக்குத் தெரியாதவர்கள் இல்லை என்று சொல்லலாம். மணிக்கணக்கில்
பேசக்கூடிய வை கோ , மை பா பேசுவதை ரசித்துக் கேட்பார்.

2000 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ தி மு க வெற்றி பெற்று பத்திரிக்கையாளர்
சந்திப்பு நடந்தது. அப்போது செல்வி ஜெயலலிதா `நாராயணன்` என்று அழைத்தார்.
மொத்த மீடியாவின் கவனமும் மை பா நாராயணன் பக்கம் திரும்பியது.

செல்வி ஜெயலலிதா பருகூரில் போட்டியிட்ட 1996 சட்டமன்றத் தேர்தலிலும் மை பா
முத்திரை உண்டு. மை பா அப்போது தமிழன் எக்ஸ்ப்ரஸில் ரிப்போர்டராக
இருந்தார்.அலுவலகத்து உள் அரசியலில் இவரை ஓரம் கட்டி வைத்திருந்தார்கள்.
சில விதிகளைத் தளர்த்தி பருகூர் போவதற்கு மை பா வுக்கு உத்தரவு
வாங்கிக் கொடுத்தேன். புலனாய்வு இதழ்கள் எல்லாம் `அ தி மு க தோற்று விடும்,
ஆனால் ஜெயலலிதா ஜெயித்து விடுவார் எழுதின. மை பா மட்டும் `ஜெயலலிதா
ஜெயிக்க மாட்டார்` என்று எழுதினார்.
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன.நேரடி ஒளிபரப்புக்காக
ராஜ் டி வி யோடு இணைந்து செயல்பட்டு மூன்று நாள் தூக்கம்
போச்சு. எஸ் டி டி பில் எகிறிப் போச்சு. சுதாங்கனும், ரபி பெர்நார்டும்
பிலிப்பின்ஸ் நாட்டு மணிலாவில் .சென்னையில் கண்ட்ரோல்
அறையில் நான். `முதலமைச்சர் இறங்குமுகம் ` என்று
சொல்லிக்கொண்டிருக்கும்போதே பருகூர் தொகுதி
தி மு க வேட்பாளர் சுகவனத்தொடு மை பா வந்து விட்டார்.
போட்டி போட்ட சன் டிவி க்கு முழி பிதுங்கி விட்டது...

மை பா இப்போது n d tv hindu வில் இருக்கிறார். இதெல்லாம்
உங்களுக்காக சொன்னேன். நம்முடைய ரசனையே வேறு.
ஒரு முறை அவருடைய பல்லாவரத்து வீட்டுக்குப் போனேன்.
`சார் முக்கியமான வேலை இருக்கிறது ` என்று சொல்லி
உட்காரவைத்து விட்டுப் போனார். ஜன்னல் வழியாகத்
தெரிந்த காட்சி: புழக்கடையில் மனைவிக்கு ஒத்தாசையாக
தளிகைக்கு கிணற்றிலிருந்து தீர்த்தம் சேர்த்துக் கொண்டிருந்தார்.
அன்றைக்கே நான் அவர் கட்சியில் சேர்ந்து விட்டேன்.

இன்னொரு விஷயம். எப்போது போன் செய்தாலும், எந்த
அவசரத்திலும் `ஊரிலேன் காணி இல்லேன்....` என்று பாசுரம்
சொல்லாமல் விட மாட்டார். சத்சங்கத்வே நித் சங்கத்வம்.